வாடகை தாய்கள் பெற்ற 13 குழந்தைகள்: உரிமையை வென்ற '28 வயது தந்தை'

தாய்லாந்து நாட்டிலுள்ள வாடகைத் தாய்மார்கள் மூலம் பெற்றெடுத்த 13 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதற்கான உரிமையை ஜப்பானியர் ஒருவருக்கு பாங்காக் நீதிமன்றம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Happy baby learning to walk with mother help - Stock image

பட மூலாதாரம், tortoon/iStock

இந்த 13 குழந்தைகளையும் தன்னுடைய குழந்தைகளாக வளர்க்கும் உரிமையை 28 வயதான மிட்சத்துக்கி ஷிகீட்டா என்கிற ஜப்பானியருக்கு இந்த நீதிமன்றத் தீர்ப்பு வழங்குகிறது.

வாடகைத் தாய்மார்கள் மூலம் தாய்லாந்தில் 16 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதை 2014ஆம் ஆண்டு செல்வந்தரான தொழில்முனைபவர் ஒருவரின் மகனான மிட்சத்துக்கி ஷிகீட்டா வெளியிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

"குழந்தை தெழிற்சாலை" என்று அழைக்கப்பட்ட இவரது வழக்கும், பிற வழக்குகளும் சேர்ந்து, வெளிநாட்டவர் தாய்லாந்தில் வாடகைத் தாய் அமர்த்தி குழந்தை பெற்றுக்கொள்வதை தடை செய்வதற்கு வழிவகுத்தது.

தாய்லாந்தை சேர்ந்த வாடகைத் தாய்கள் தங்களுடைய உரிமையை இழந்த பின்னர், மிட்சத்துக்கி ஷிகீட்டாதான் இந்த குழந்தைகளுக்கு "திருமணமாகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட தந்தை" என்கிற உரிமையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத அவரது பெயரை இந்த நீதிமன்றம் குறிப்பிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பல குழந்தைகள்

பட மூலாதாரம், EPA

"இந்த 13 குழந்தைகளும் கெட்ட நடத்தைக்கான எந்த வரலாறும் இல்லாத தங்களுடைய உயிரியல் தந்தையிடம் இருந்து மகிழ்ச்சியும் நல்வாய்ப்புகளும் பெறக்கூடும் என்பதால், வாடகைத் தாய்மார் மூலம் பிறந்த 13 குழந்தைகளும் மனுதாரரான இவருக்கு பிறந்த சட்டப்பூர்வ குழந்தைகளே என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது" என்று பாங்காக் சென்ரல் இளையோர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

பிற மூன்று குழந்தைகளும் 2015ஆம் ஆண்டு ஏற்கெனவே மிட்சத்துக்கி ஷிகீட்டாவிடம் வழங்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :