டொனால்ட் டிரம்ப்: ஒரு வகை இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'பம்ப்ஸ்டாக்' இயந்திரத்திற்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஃப்ளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது.

ஃப்ளோரிடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் பெற்றோர்கள் என 17 பேர் இறந்தனர். இதனால், அமெரிக்க மக்கள் ஆயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி உள்ளூர் நேரப்படி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், தம் அரசுக்கு பள்ளிகளின் பாதுகாப்புதான் அதிமுக்கியமானது என்றார்.

என்ன பேசினார் டிரம்ப்?

ஏதோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்ற தோற்றத்தை மட்டும் உண்டாக்குவதற்காக முடிவுகளை எடுக்கக் கூடாது. உண்மையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறிய டிரம்ப், பம்ப்ஸ்டாக் இயந்திர துப்பாக்கியை சட்டவிரோதமானது என்று அறிவிக்கும் புதிய நெறிமுறைகளை விரைவில் செய்யுங்கள் என்று அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸை தான் கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறினார்.

புளித்துப் போன சொல்லாடல்கள் மற்றும் அலுப்பூட்டும் வாதங்களை கடந்து, ஆதார அடிப்படையிலான தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும். நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பயன் தரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

பம்ப் ஸ்டாக் என்றால் என்ன?

பாதி தானியங்கி துப்பாக்கிகளை, இயந்திர துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரிபாகம்.

பட மூலாதாரம், Getty Images

பாதி தானியங்கி துப்பாக்கிகளை, இயந்திர துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரிபாகம்.

எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் இதனை 100 டாலர்களுக்கு சுலபமாக வாங்கலாம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், லாஸ் வேகாஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரியால், இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 500 பேர் அந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர்.

கட்சிகள் நிலைப்பாடு?

ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளின் நிலைப்பாடும் பம்ப்ஸ்டாக்கை தடை செய்ய வேண்டும் என்பதுதான்.

கடந்த டிசம்பர் மாதமே பம்ப் ஸ்டாக் குறித்து மக்கள் கருத்து கேட்கப்பட்டது. ஏறத்தாழ 35,000 பேர் தங்கள் கருத்தினை பதிவு செய்து இருந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :