மனிதர் உணர்ந்து கொள்ள ஒரு மனித நூலகம்: புதுமைத் திட்டம்

புத்தகங்களோடு நீங்கள் உரையாடியுள்ளீர்களா? ஹைதராபாத்தில் உள்ள மனித நூலகம் (ஹியூமன் லைப்ரரி) என்ற அமைப்பு இதை சாத்தியப்படுத்துகிறது.

ஹைதராபாத்தில் மனித நூலக திட்டத்தை தொடங்கிய மாணவர் ஹர்ஷத் பேட்

இந்த நூலகத்தில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நபருடன் நீங்கள் சுமார் 30 நிமிடங்கள் உரையாடலாம். ஒரு புத்தகம் படிப்பதை போலவே, ஒரு நபர் ஈடுபட்டுள்ள துறையில் சவால்களை சந்தித்து, சமூகத்தில் நிலவும் முன்சார்பு எண்ணங்களை மீறி சாதித்த அவரது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வார். இந்த உரையாடல்களின் போது, உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இந்த மனித நூலகம் என்ற திட்டம் கோபன்ஹேகனில் தொடங்கி இந்தூர் வழியாக ஹைதராபாத்தை அடைந்துள்ளது. டேனிஷ் திருவிழாவில் இந்த திட்டத்திற்கான விதை விழுந்தது என்கிறார்கள் மனித நூலக அமைப்பினர்.

டேனிஷ் விழாவுக்கு வரும் பார்வையாளர்களின் அச்சத்தை போக்கி, வன்முறைக்கு எதிரான, உரையாடலை ஊக்குவிக்கும் நேர்மறை உறவுகளை வளர்ப்பதற்கு உதவும் விதமாக இந்த திட்டம் அமைந்தது. இந்தியாவின் முதல் மனித நூலக நிகழ்வு 2016 ல் இந்தூர் நகரில் ஐஐஎம் வளாகத்தில் நடைபெற்றது.

ஹர்ஷத் ஃபத் என்ற மாணவர் இந்த திட்டத்தை ஹைதராபாத்திற்கு கொண்டுவந்தார். தற்போது வரை ஹர்ஷத் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இரண்டு நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.

மனித நூலக திட்டத்தில் பங்குபெற்ற சிலரின் அனுபவங்களை பார்க்கலாம்.

ஹாலிம் கான், குச்சிப்புடி நடன கலைஞர்

பட மூலாதாரம், www.haleemkhan.com

படக்குறிப்பு, ஹாலிம் கான், குச்சிப்புடி நடன கலைஞர்

ஹாலிம் கான், குச்சிப்புடி நடன கலைஞர்:

ஒரு நல்ல நாள் ஹர்ஷத்திடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் என்னை மனித நூலகத்தில் ஒரு நபராக பேசுவதற்கு அழைத்தார். மனித நூலக திட்டத்தை விளக்கினார். குச்சிப்புடி நடனம் பற்றி தெரிந்துகொள் மிக சிலரே விரும்புவார்கள் என்று ஆரம்பத்தில் எனக்கு பயமாக இருந்தது. மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால் அது எனக்கு ஒரு சங்கடமான சூழ்நிலையாக இருக்கும். ஒரு பெண்ணாக நடனமாடும் ஒரு நபரான நான், அதுவும்

இளைஞர்கள் மத்தியில் குச்சிபிடி நடனம் பிரபலமாக இல்லாத காரணத்தால், நான் கவனத்தை ஈர்க்கக் முடியாது என்று நினைத்தேன்

ஹர்ஷத் மற்றும் அவரது நண்பர்கள் நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்கள். எனது கதை மிகவும் வலிமை வாய்ந்தது மற்றும் மக்களுக்கு பிடிக்கும் என்று கூறினார்கள். நான் இதை ஒரு வாய்ப்பாக எண்ணினேன்

விழா நடக்கும் இடத்திற்கு சென்ற பிறகு, பல துறையில் இருந்து அங்கு வந்திருந்த பிற நபர்களை பார்த்த பிறகு, எனக்கு மேலும் பயம் ஏற்பட்டது. ஆனால் மக்களிடம் உரையாடிய போது, அங்கு முற்றிலும் வேறுபட்ட காட்சி நிகழ்ந்தது. மக்கள் என்னிடம் பேச மற்றும் தொடர்பில் இருக்க விரும்பினார். இது பல்வேறு அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை பயணங்களை பகிர்ந்து கொள்வது போன்றது. இது நான் மறந்த பலவற்றை மீண்டும் நினைவுபடுத்துவது போல இருந்தது.

எனக்கு இருந்த பயங்கள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதாக உணர்ந்தேன். ஒரு கலைஞராக ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள பலரும் விரும்பினார்கள். நான் கலைஞராக இருக்க எது என்னை வழிநடத்துகிறது போன்றவற்றை கேட்டறிந்தனர். நான் மீண்டும் இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புகிறேன். ஏனெனில், இது என்னுடைய கடந்தகால அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லும் அதே சமயம், அவர்களின் வாழக்கை அனுபவத்தை கேட்பது, அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது போன்றவை நடந்தது.

ஹாலிம் கான், குச்சிப்புடி நடன கலைஞர்

பட மூலாதாரம், www.haleemkhan.com

படக்குறிப்பு, ஹாலிம் கான், குச்சிப்புடி நடன கலைஞர்

மனித நூலகம் என்பது, ஆற்றல் வாய்ந்த உரையாடல் மூலம் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் தவறான கருத்துக்களை உடைக்கும் கருவியாக ஆகும்.

இந்த நிகழ்வில் பங்கேற்றது, ஒரு புத்தகமாக மாறியதை பெருமையாக, கௌரவமாக உணர்கிறேன்.

கருணையின் வடிவாக மாற மனிதனின் பயணம் என எனக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. தலைப்பே பலரை ஈர்க்கும் புதிராக இருந்தது. பெண்ணாக நடிக்கும் ஓர் ஆண் கலைஞன் நான் என்று தெரியவந்ததும், பலரும் கேள்விகளை தொடுத்தனர்.

அங்கு வந்திருந்தவர்களிடம் எனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டது சிறப்பானதாக இருந்தது. ஒவ்வொரு தடையையும் உடைத்து முன்னோக்கி நகர்ந்து செல்வது என் கதையின் மிக முக்கியமான அம்சம்.

நண்பர்களுடன் ஹாலிம் கான்
படக்குறிப்பு, நண்பர்களுடன் ஹாலிம் கான்

ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண்ணின் பாத்திரத்தில் ஓர் ஆண் நடிப்பது சவாலானதுதான். ஆனால் குச்சிப்புடி நடனம் ஒன்று மட்டுமே, பெண் கதாபாத்திரங்களில் ஆண்கள் மட்டுமே நடிக்கும் நடனக்கலை. கலைக்கு பாலினம் இல்லை, ஆர்வம் மட்டுமே தேவை என்பதை கலை பாரம்பரியம் உணர்த்தியது.

ஒரு நடன கலைஞராக இருப்பது எனது கனவு; இதை நான் அடைய சமூகத்தில் நிலவும் முன்கணிப்பு செய்யப்பட்ட தவறான கருத்துக்களின் சங்கிலி வழியாக நான் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் நடனம் எனது உள்ளுணர்வாக இருந்தது. இதை நான் திரும்பி பார்க்கும் போது, எனது தொடர்ச்சியான தேடல், அதை அடைந்துவிட்ட மகிழ்ச்சியை எனக்கு தந்தது.

ஒவ்வொரு ஆசிரியரும் பார்வையாளர்களின் ஈர்க்கும் சில கணங்களை பெற விரும்புவார்கள். இந்த உரையாடலின் மூலம், என் அனுபவங்களை கேட்ட நபர்கள், தங்களின் சொந்த அனுபவங்கள், தடைகள் மற்றும் தங்களது வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக்கொண்டனர். மனித நூலகத்தின் இரு பக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒரு செறிவான அனுபவமாக இந்த நிகழ்வு இருந்தது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்