பசியால் தவித்த குழந்தைக்கு பால் வழங்கிய இந்திய ரயில்வேத் துறைக்கு குவிந்த பாராட்டுக்கள்
ரயிலில் பயணம் செய்யும் போது பசியாக இருந்த ஒரு குழந்தைக்கு, பயணி ஒருவர் அனுப்பிய டிவிட்டர் செய்தியை கருத்தில் கொண்டு உடனடியாக பசியால் தவித்த குழந்தைக்கு பால் வழங்க ஏற்பாடு செய்தற்காக இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சமூகவலைத்தளத்தில் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், MINISTRY OF RAILWAYS
அனகா நிகாம் என்ற பெண் ரயிலில் பயணம் செய்த போது , தனது பெண் குழந்தைக்கு பால் வாங்க முயற்சித்த ஒரு தாயை கண்டுள்ளார்.
இதனை கண்ட அனகா நிகாம், உடனடியாக ரயில்வே அமைச்சகத்துக்கு டிவிட்டர் மூலம் செய்தி அனுப்ப, அக்குழந்தைக்கு அடுத்த ரயில் நிலையத்தில் பால் வழங்கப்பட்டது.
டிவிட்டர் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருவதாக அறியப்பட்ட ரயில்வே அமைச்சகம், கடந்த காலங்களில் துயரத்தில் அல்லலுற்ற பல பயணிகளுக்கு உதவி செய்துள்ளது.
கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று, இந்திய ரயில்வேயில் ஒரு பிரிவான கொங்கன் ரயில்வேக்கு நிகாம் என்ற பெண் டிவிட்டர் மூலம் தகவல் அனுப்பியது, அதற்கு ரயில்வேத்துறை பதில் நடவடிக்கை எடுத்தது ஆகியவை, இன்று இது தொடர்பாக ரயில்வேத்துறை டிவிட்டர் மூலம் வெளியிட்ட தகவலால் வெளியே தெரிய வந்துள்ளது.

பட மூலாதாரம், Image copyrightANAGHA NIKAM

பட மூலாதாரம், ANAGHA NIKAM

பட மூலாதாரம், KONKAN RAILWAY

பட மூலாதாரம், ANAGHA NIKAM

பட மூலாதாரம், VASIM KADRI
I

பட மூலாதாரம், SANTOSH GURAV

பட மூலாதாரம், Image copyrightMONISH GARG
ரெயில்வே அதிகாரிகளுக்கும் அனகா நிகாமுக்கும் இடையே நடந்த ட்விட்டர் செய்தி பரிமாற்றம் குறித்த படங்களை மேலே காணலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












