ஓட்டுநர் இல்லாக் கார் தயாரிக்கும் போட்டியில் ஊபர் நிறுவனமும் குதிக்கிறது
அமெரிக்காவின் முன்னணி வாடகை கார் நிறுவனமான ஊபர் (uber), ஓட்டுனர் அல்லாமல் தானாக இயங்கும் கார்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பிட்ஸ்பர்க் நகர வீதிகளில் ஒட்டுநனர் அல்லாத காரின் சோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அது உறுதிப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், AFP
இந்நிறுவனம் போர்ட் ப்யூசன் காரில், ராடார் , லேசர் , ஊடுருவி மற்றும் காமெராக்களை பொருத்தியுள்ளதாக தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஊபரின் இந்த திட்டம் பிட்ஸ்பர்க் கார்னிஜி மெல்லோன் பல்கலைகழகத்துடன் சேர்ந்து மேற்கொள்ளபடுகிறது.
மேலும் பல கார் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆளில்லா தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் கூட்டாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த தொழில் நுட்பத்தில் சீன கார் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து விட்ட நிலையில் முன்னணி கூகுள் நிறுவனத்தை தவிர டெஸ்லா நிறுவனமும் இத்தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.

பட மூலாதாரம், Reuters
உபெர் தனது அறிக்கையில் சுய ஓட்டுனர் தொழில்நுட்பத்தை உருவாக்கும் தங்களின் முயற்சிக்கு, கார்களை நிஜவாழ்க்கை நிலைமைகளில் பரிசோதிப்பது மிகவும் அவசியம் என்றும், எனினும், கார்களின் செயல்பாடுகளை நன்கு பழக்கப்பட்ட ஓட்டுனர்கள் எல்லா நேரங்களிலும் மேற்பார்வையிடுகின்றனர் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் சட்ட விதிகளை உருவாக்க உதவ , அண்மையில் கூகுள் மற்றும் முன்னணி கார் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஊபர் இணைந்து பணியாற்றுகிறது.
உபெருடன் சேர்ந்து போர்ட், வோல்வோ, மற்றும் லிப்ட் ஆகிய நிறுவனங்கள் தானியங்கி கார்கள் நடைமுறைக்கு வருவதில் உள்ள சட்ட சிக்கல்களை மாற்றியமைக்க சட்டங்களை உருவாக்குபவர்களுடன் பேசி வருகின்றனர்.












