`ஐ.எஸ் தலைவரின் பிரதிநிதி கொல்லப்பட்டார்'

பட மூலாதாரம், AP
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரக்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபு அல்-ஹய்ஜா அல்-ருனுசி என்ற பெயரால் அவர் அறியப்பட்டவர் என தெரிவிக்கும் பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் மனித உரிமைகள் நிறுவனமாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம், அவர் ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பக்டாதியின் பிரதிநிதி என வர்ணித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அவரை ஆளில்லா விமானம் மூலம் இலக்கு வைத்ததாக நம்பப்படுகிறது.
இந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்க படையினர் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
அவர்கள் இதனை உறுதிப்படுத்தினால் அண்மைய வாரங்களில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரால் கொல்ப்பட்ட ஐஎஸ் குழுவின் மூன்றாவது மூத்த அதிகாரி இவராவார்.








