பாகிஸ்தானில் ஆளுநரைக் கொன்ற பாதுகாவலருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானில் மத நிந்தனைக்கு சட்டத்தை எதிர்த்த மாகாண ஆளுநர் ஒருவரை கொலை செய்த, காவல்துறையின் முன்னாள் பாதுகாவலருக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மும்தாஸ் கத்ரி என்ற இவர், பஞ்சாப் மாகாண ஆளுநரான சல்மான் தஸீர் என்பவரை 2011ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் சுட்டுக் கொன்றார்.
கத்ரியின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் வீதியில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அவர்கள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் படங்களையும் எரித்தனர்.
தலைநகர் இஸ்லாமாபாதுக்கு அருகேயுள்ள பிரதான சாலை ஒன்றையும் அவர்கள் சிறிது நேரம் மறித்தனர்.
இந்த கொலை பற்றி தனது கட்சிக்காரர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என கத்ரியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அயலவர்களுடனான ஒரு சர்ச்சையைடுத்து, மத நிந்தனை தொடர்பில் மரண தண்டனைக்குள்ளான கிறிஸ்தவ பெண்ணொருவருக்கு பொதுமன்னிப்பை பெற்றுக்கொடுப்பதற்காக கொல்லப்பட்ட ஆளுநர் சல்மான் தஸீர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.








