"பாதிக்கப்பட்ட சோனி வீடியோ கேம் இணைய சேவைகள் மீண்டும் செயல்பட துவங்கின"

கணினி வலயமைப்புகளில் அத்துமீறி ஊடுருவும் ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததாகத் தெரிந்த சோனியின் பிளேஸ்டேஷன் வீடியோ கேம் விளையாட்டுக் கருவியின் இணைய சேவைகள் தற்போது சரிசெய்யப்பட்டு சிறிது சிறிதாக மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளேஸ்டேஷன் மிகவும் பிரபலமான வீடியோ கேம் கருவி ஆகும்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பிளேஸ்டேஷன் மிகவும் பிரபலமான வீடியோ கேம் கருவி ஆகும்

ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாகத் தெரிந்த ஹேக்கிங் தாக்குதல்கள் பிளேஸ்டேஷனின் இணைய சேவைகளை கிறிஸ்துமஸ் தினத்தன்று பாதிக்கப்படத் துவங்கியிருந்தன.

இந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக 'லிசர்ட் ஸ்குவாட்' அதாவது 'பல்லிகள் படை' என்ற குழு உரிமை கோரியிருந்தது.

இந்தக் குழுவினர் இதற்கு முன்னால் மற்ற வீடியோ கேம் நிறுவனங்கள் மீதும் ஹேக்கிங் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

அந்த நிறுவனங்களின் கணினி வலயமைப்பில் உள்ள பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக இவ்வாறான ஹேக்கிங் தாக்குதல்களை நடத்துவதாக அக்குழுவினர் கூறிவந்துள்ளனர்.