இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள்

ராணி எலிசபெத் II, அன்னி லீபோவிட்ஸ், 2007

பட மூலாதாரம், Annie Leibovitz

ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம்.

1px transparent line
ராணியின் தாய் (அப்போது யார்க் டச்சஸ்) அவரது கணவர், கிங் ஆறாம் ஜார்ஜ் (அப்போது டியூக் ஆஃப் யார்க்) மற்றும் அவர்களது மகள் ராணி இரண்டாம் எலிசபெத் (அப்போது எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர்) மே 1926 இல் தனது பெயர்சூட்டு விழாவின்போது.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 21 ஏப்ரல் 1926 அன்று லண்டன் பெர்க்லி சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர். தமது தந்தை, அப்போதைய யார்க் கோமகன் ஆல்பர்ட், மற்றும் தாய் முன்னாள் லேடி எலிசபெத் போவ்ஸ்-லியான் ஆகியோர் அரவணைப்பில் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர்.
1px transparent line
1929இல் சுமார் மூன்று வயதுடைய இளவரசி எலிசபெத். ஒளிப்படக் கலைஞர் மார்கஸ் ஆடம்ஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எலிசபெத்தின் இளமைக் காலத்தில், அரியணை அவருக்கு விதிக்கப்பட்டதாக இல்லை.
1px transparent line
இளவரசி எலிசபெத்தை வின்ட்சரில் அதிகாரி ஒருவரால் வரவேற்கப்பட்டபோது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆனால், எலிசபெத் மிகச் சிறு வயதிலிருந்தே பொறுப்புணர்வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
1px transparent line
1930களில், அரச சகோதரிகளான இளவரசி மார்கரெட் மற்றும் இளவரசி எலிசபெத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எலிசபெத், 1930இல் பிறந்த அவரது சகோதரி மார்கரெட் ரோஸ் இருவரும் வீட்டிலேயே கல்வி கற்றனர்.
1px transparent line
இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் ஜார்ஜ் முடிசூட்டப்பட்ட பிறகு பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் அரச குடும்பம். (இடமிருந்து வலமாக): ராணி எலிசபெத்; இளவரசி எலிசபெத்; ராணி மேரி; இளவரசி மார்கரெட்; மற்றும் அரசர் ஆறாம் ஜார்ஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1936இல் அரசர் எட்டாம் எட்வர்ட் முடியைத் துறந்ததைத் தொடர்ந்து, எலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ் ஆனார். எலிசபெத் அரியணைக்கான வாரிசானார்.
1px transparent line
இளவரசி எலிசபெத் (வலது) மற்றும் இளவரசி மார்கரெட் ஆகியோர் பிபிசியில் போர்க்கால ஒளிபரப்பின் போது.

பட மூலாதாரம், Topical Press Agency / Getty Images

படக்குறிப்பு, இரண்டாம் உலக போரின் போது, எலிசபெத் மற்றும் அவரது சகோதரி மார்கரெட் விண்ட்சருக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் படம் பிபிசியில் சில்ட்ரன்ஸ் ஹவர் நிகழ்ச்சியை அவர்கள் நாட்டிற்கு ஒலிபரப்புவதைக் காட்டுகிறது.
1px transparent line
1940களில், இரண்டாம் உலகப் போரின் போது, தெரியாத இடத்தில், ராணுவ வாகனத்தின் சக்கரத்தை மாற்றும் இளவரசி எலிசபெத்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இளம் இளவரசி, இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் துணை பிராந்திய சேவையில் (ATS) சேர்ந்தார், லாரி ஓட்டவும், அதை சீர் செய்யவும் கற்றுக்கொண்டார்.
1px transparent line
இளவரசி எலிசபெத் (பின்னர் இரண்டாம் எலிசபெத் ராணி) மற்றும் பிலிப் மவுண்ட்பேட்டன் (பின்னர் இளவரசர் பிலிப்) ஆகியோர் தங்கள் திருமண நாளான நவம்பர் 20, 1947 அன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் இடைகழியில் இறங்குகிறார்கள்.

பட மூலாதாரம், Bert Hardy / Getty Images

படக்குறிப்பு, 1947இல் அவர் தமது தூரத்து உறவினரான ஃபிலிப் மவுன்ட்பேட்டனை மணந்தார். ஃபிலிப் மவுன்ட்பேட்டன் எடின்பரோ கோமகன் ஆனார்.
1px transparent line
1948இல் இளவரசி எலிசபெத் தனது மகன் இளவரசர் சார்ல்ஸின் கிறிஸ்டெனிங் விழாவிற்குப் பிறகு பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்திருக்கிறார்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, இவர்களுடைய முதல் குழந்தை சார்ல்ஸ் 1948ஆம் ஆண்டு பிறந்தார். அவரைத் தொடர்ந்து சார்ல்ஸின் சகோதரி ஆன் 1950ஆம் ஆண்டு பிறந்தார்.
1px transparent line
ராணி எலிசபெத் மற்றும் இளவரசி எலிசபெத் ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இயன் ஹெட்வொர்த் கில்மோருக்கு நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வரும்போது தொப்பிகளைப் பிடித்துக் கொண்டனர்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் தனது தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர்கள் 1951 இல் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்
1px transparent line
இளவரசி எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் ஆகியோர் கென்யா மக்களிடமிருந்து அவர்களின் திருமணப் பரிசாக, ராயல் லாட்ஜ், சகானா மைதானத்தில் உள்ள பழமையான பாலத்தில் இடைநிறுத்தப்பட்டனர்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ஜனவரி 1952இல், எலிசபெத் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தமது தந்தைக்குப் பதிலாக ஒரு வெளிநாட்டுப் பயணத்தை ஃபிலிப்புடன் சேர்ந்து மேற்கொண்டார். சில நாட்களில் அரசர் தூக்கத்தில் உயிரிழந்தார்
1px transparent line
ராணி தனது தந்தை ஆறாம் ஜார்ஜின் மரணத்தைத் தொடர்ந்து நைரோபியிலிருந்து பிரிட்டனுக்குத் திரும்புகிறார். மேலும் அரசியல்வாதிகளால் (இரண்டாவது முதல் ஆர் வரை) லார்ட் வூல்டன், அந்தோனி ஈடன், கிளெமென்ட் அட்லீ மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் அவரைச் சந்திக்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எலிசபெத் உடனடியாக நாடு திரும்பினார். புதிய ராணிக்கு அப்போது வயது 25.
1px transparent line
ராணி மேரி (நடுவில்) அவரது மகன் ஆறாம் ஜார்ஜின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு கொண்டு வரப்படுவதைப் பார்க்கிறார். அவர் பக்கத்தில், ராணியின் அம்மா, அவர் கண்கள் சோகத்தில் மூடின. ராணி இரண்டாம் எலிசபெத், முக்காடு போட்டு, பாட்டிக்குப் பின்னால் நிற்கிறார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, முதலில் அரசரின் இறுதி ஊர்வலம் வந்தது. இங்கே ராணி மேரி, ஆறாம் ஜார்ஜின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலய அரங்குக்கு கொண்டு வரப்படுவதைப் பார்க்கிறார். ராணி எலிசபெத் தனது பாட்டியின் பின்னால் நிற்கிறார். ராணியின் தாய் வலது புறத்தில் இருக்கிறார்
1px transparent line
1953ஆம் ஆண்டு, ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவின்போது.

பட மூலாதாரம், Universal History Archive

படக்குறிப்பு, பின்னர், ஜூன் 1953இல், வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் எலிசபெத் ராணி ஆக முடிசூட்டப்பட்டார்
1px transparent line
முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பர்க் பிரபு ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்றி, ஆரவாரம் செய்த கூட்டத்தினரை நோக்கி கை அசைத்தனர்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, ராணி இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்றி, ஆரவாரம் செய்த கூட்டத்தினரை நோக்கி கை அசைத்தனர்.
1px transparent line
ராணி இரண்டாம் எலிசபெத், பிரெஞ்சு தலைநகரான பாரிஸில் 8 ஏப்ரல் 1957 அன்று ஓபராவில் உள்ள பெரிய படிக்கட்டுகளில் ஏறுகிறார். இந்த படம் 15 தனித்தனி படங்களின் தொகுப்பாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் போருக்குப் பிந்தைய சிக்கனத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருந்தாலும், சில வர்ணனையாளர்கள் முடிசூட்டு விழாவை ஒரு புதிய எலிசபெத் யுகத்தின் விடியல் என்று வர்ணித்தனர். இங்கே, ராணி இரண்டாம் எலிசபெத் பிரான்சின் பாரிஸில் உள்ள ஓபராவில் பெரிய படிக்கட்டுகளில் ஏறுகிறார்
1px transparent line
1957ஆம் ஆண்டில், ராணி தொலைக்காட்சியில் பல கிறிஸ்துமஸ் தின ஒளிபரப்புகளில் முதன்மையானவர்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 1957ஆம் ஆண்டில், பல கிறிஸ்துமஸ் தின ஒளிபரப்புகளில் முதன்மையான உரையை ஆற்றினார் ராணி
1px transparent line
பிரிட்டிஷ் சமூகம் மற்றும் முடியாட்சிக்கான அணுகுமுறைகள் மாறிக்கொண்டே இருந்தன, மேலும் "முடியாட்சி" என்ற சொல் படிப்படியாக "அரச குடும்பம்" என்று மாற்றப்பட்டது. 1958இல் சசெக்ஸின் க்ராவ்லி நியூ டவுனில் உள்ள திரு மற்றும் திருமதி எடி ஹம்மண்ட் வீட்டிற்குச் சென்றபோது, ராணி அண்டை வீட்டாரின் பார்வைக்கு ஆளானார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, பிரிட்டிஷ் சமூகம் மற்றும் முடியாட்சி தொடர்பான அணுகுமுறைகள் மாறிக்கொண்டே இருந்தன. "முடியாட்சி" என்ற சொல் படிப்படியாக "அரச குடும்பம்" என்று மாற்றப்பட்டது. 1958இல் சஸ்ஸெக்ஸின் க்ராவ்லி நியூ டவுனில் உள்ள எடி ஹம்மண்ட் தம்பதி வீட்டிற்குச் சென்றபோது, ராணி அண்டை வீட்டாரின் பார்வைக்கு ஆளானார்.
1px transparent line
உத்தியோகபூர்வ பணிகளுக்கு இடையில் எலிசபெத் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார் - இங்கே தனது மகள் இளவரசி அன்னேவுடன் ஃப்ராக்மோர், வின்ட்சர் கோட்டையில்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, அலுவல்பூர்வ பணிகளுக்கு இடையில் எலிசபெத் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார் - இங்கே தனது மகள் இளவரசி ஆனுடன் ஃப்ராக்மோர், வின்ட்சர் கோட்டையில்
1px transparent line
1966ஆம் ஆண்டில், வெம்ப்லியில், தனது அணியை மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 4-2 உலகக் கோப்பை இறுதி வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, இங்கிலாந்து கேப்டன் பாபி மூருக்கு ஜூல்ஸ் ரிமெட் டிராபியை ராணி வழங்கினார்.

பட மூலாதாரம், Mirrorpix / Getty Images

படக்குறிப்பு, 1966ஆம் ஆண்டில், வெம்ப்லியில், தனது அணியை மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 4-2 என்ற கணக்கில் உலகக் கோப்பை இறுதி வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, இங்கிலாந்து கேப்டன் பாபி மூருக்கு ஜூல்ஸ் ரிமெட் டிராபியை ராணி வழங்கினார்.
1px transparent line
ராணியும் இளவரசர் பிலிப்பும் அபெர்ஃபானைப் பார்வையிடுகிறார்கள். 29 அக்டோபர் 1966.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 29 அக்டோபர் 1966 அன்று, நிலக்கரி முனை நிலச்சரிவுக்கு பாண்ட்கிளாஸ் ஜூனியர் பள்ளியில் 144 பேர் பலியான எட்டு நாட்களுக்குப் பிறகு, வெல்ஷ் கிராமமான அபெர்ஃபானுக்கு ராணி விஜயம் செய்தார். பலியானவர்களில் 116 குழந்தைகள். ராணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அது அவரது ஆட்சியின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது.
1px transparent line
1969ஆம் ஆண்டில், அரச குடும்பம் என்ற ஆவணப்படம் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் ஒரு வருடத்தின் முன்னோடியில்லாத காட்சியை இது பார்வையாளர்களுக்கு வழங்கியது

பட மூலாதாரம், Mirrorpix / Getty Images

படக்குறிப்பு, 1969ஆம் ஆண்டில், அரச குடும்பம் என்ற ஆவணப்படம் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் ஒரு வருடத்தின் முன்னோடியில்லாத காட்சியை இது பார்வையாளர்களுக்கு வழங்கியது
கேனர்ஃபோன் கோட்டையில் நடந்த ஒரு விழாவில் தனது மகன் இளவரசர் சார்ல்ஸுக்கு வேல்ஸ் இளவரசருக்கான மகுடத்தை சூட்டினார் ராணி. அவர் ஒன்பது வயதில் அப்பட்டத்தைப் பெற்றார், ஆனால் இந்தப் பட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே இளவரசருக்கான மகுடம் சூட்டும் விழா நடைபெறவேண்டும் என்று ராணி வலியுறுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, கேனர்ஃபோன் கோட்டையில் நடந்த ஒரு விழாவில் தனது மகன் இளவரசர் சார்ல்ஸுக்கு வேல்ஸ் இளவரசருக்கான மகுடத்தை சூட்டினார் ராணி. அவர் ஒன்பது வயதில் அப்பட்டத்தைப் பெற்றார், ஆனால் இந்தப் பட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே இளவரசருக்கான மகுடம் சூட்டும் விழா நடைபெறவேண்டும் என்று ராணி வலியுறுத்தியிருந்தார்.
1px transparent line
ராணியின் திருமண வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் போது பயன்படுத்துவதற்காக பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக எச்.எம்.ஒய் பிரிட்டானியா கப்பலில் 1972ல் படம் பிடிக்கப்பட்ட ராணி.

பட மூலாதாரம், Lichfield via Getty Images

படக்குறிப்பு, ராணியின் திருமண வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் போது பயன்படுத்துவதற்காக பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக எச்.எம்.ஒய் பிரிட்டானியா கப்பலில் 1972ல் படம் பிடிக்கப்பட்ட ராணி.
அவரது ஆட்சி முழுவதும், ராணி தனது பக்கத்தில் கோர்கிஸுடன் சித்தரிக்கப்படுகிறார். வருங்கால ஆறாம் ஜார்ஜ் தனது மகள்களுக்காக 1933இல் டூக்கி என்ற கோர்கியை வாங்கியபோது இந்த இனத்துடனான அரச குடும்பத்தின் உறவு தொடங்கியது.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, அவரது ஆட்சி முழுவதும், ராணி தனது பக்கத்தில் கோர்கி ரக செல்லப்பிராணிகளுடன் அதிகம் காணப்பட்டார். வருங்கால ஆறாம் ஜார்ஜ் தனது மகள்களுக்காக 1933இல் டூக்கி என்ற கோர்கியை வாங்கியபோது இந்த இனத்துடனான அரச குடும்பத்தின் உறவு தொடங்கியது.
1px transparent line
ராணி அரியணைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 1977ல் நாடு வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டது. ராணி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உற்சாகமான கூட்டத்தைச் சந்தித்தார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ராணி அரியணைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 1977ல் நாடு வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டது. ராணி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உற்சாகமான கூட்டத்தைச் சந்தித்தார்.
1px transparent line
மாட்சிமை பொருந்திய ராணி, 10 வாரங்களில் 36 மாவட்டங்களுக்குச் சென்றார் - அவான் உட்பட, அங்கு மக்கள் கோடைக்கலா நேரத்தை அதிகம் பயன்படுத்துவதை அவர் கவனித்தார். அந்தக் கொண்டாட்டத்தில் அவரும் உலகம் முழுவதும் 56,000 மைல்கள் பயணம் செய்தார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, மாட்சிமை பொருந்திய ராணி, 10 வாரங்களில் அவான் உள்ளிட்ட 36 கவுன்டிகளுக்கு பயணித்தார். அங்கு மக்கள் கோடைக் காலத்தை கொண்டாடுவதை அவர் கவனித்தார். வெள்ளிவிழா கொண்டாட்டத்தை ஒட்டி ராணி உலகம் முழுவதும் 56,000 மைல்கள் பயணம் செய்தார்.
ராணியும் கோமகனும் பார்படோசை அடைந்தபோது, அவர்கள் சென்ற 'ராயல் யாக்ட் பிரிட்டானியா' சொகுசுக் கப்பல் அருகே கான்கார்ட் விமானம் தாழ்வாகப் பறந்தது. ராணியும் கோமகனும் அதைப் பார்த்து கையசைக்கின்றனர்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ராணியும் கோமகனும் பார்படோசை அடைந்தபோது, அவர்கள் சென்ற 'ராயல் யாக்ட் பிரிட்டானியா' சொகுசுக் கப்பல் அருகே கான்கார்ட் விமானம் தாழ்வாகப் பறந்தது. ராணியும் கோமகனும் அதைப் பார்த்து கையசைக்கின்றனர்.
1px transparent line
ஆண்டுதோறும், ராணியின் பொதுப் பணிகள் தொடர்ந்தன. ராயல் நியூசிலாந்து பாலினேசியன் திருவிழாவின் தொடக்கத்தில் மாட்சிமை பொருந்திய ராணி மற்றும் எடின்பரோ கோமகன், நியூசிலாந்து மவோரி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ஆண்டுதோறும், ராணியின் பொதுப் பணிகள் தொடர்ந்தன. ராயல் நியூசிலாந்து பாலினேசியன் திருவிழாவின் தொடக்கத்தில் மாட்சிமை பொருந்திய ராணி மற்றும் எடின்பரோ கோமகன், நியூசிலாந்து மவோரி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.
1px transparent line
ஆகஸ்ட் 1979இல், இளவரசர் பிலிப்பின் மாமாவும் ராணியின் உறவினருமான லூயிஸ் மவுண்ட்பேட்டன், பர்மாவின் 1வது ஏர்ல் மவுண்ட்பேட்டன், அயர்லாந்தில் தனது படகில் இருந்தபோது ஐஆரே வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். நெருங்கிய குடும்ப உறுப்பினராக இருந்ததோடு, மவுண்ட்பேட்டன் பிரபு பல மூத்த இராணுவ பதவிகளை வகித்துள்ளார். மேலும் அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்றது.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ஆகஸ்ட் 1979இல், இளவரசர் ஃபிலிப்பின் மாமாவும் ராணியின் உறவினருமான லூயி மவுன்ட்பேட்டன், பர்மாவின் 1வது ஏர்ல் மவுன்ட்பேட்டன், அயர்லாந்தில் தனது படகில் சென்றபோது ஐ.ஆர்.ஏ. அமைப்பின் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். நெருங்கிய குடும்ப உறுப்பினராக இருந்ததோடு, மவுன்ட்பேட்டன் பிரபு பல மூத்த ராணுவ பதவிகளை வகித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தது.
1px transparent line
1981இல், எலிசபெத்தின் மூத்த மகன் சார்ல்ஸ் டயானா ஸ்பென்சரை மணந்தார். சார்லஸ் மற்றும் டயானா விவாகரத்துக்கு முன் வில்லியம் மற்றும் ஹாரி என்ற இரு மகன்களைப் பெற்றனர். 1997 இல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1981இல், எலிசபெத்தின் மூத்த மகன் சார்ல்ஸ், டயானா ஸ்பென்சரை மணந்தார். சார்லஸ் - டயானா தம்பதியர் தங்கள் விவாகரத்துக்கு முன் வில்லியம் மற்றும் ஹாரி என்ற இரு மகன்களைப் பெற்றனர். 1997 இல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்
1px transparent line
ராணி தனது கிறிஸ்துமஸ் உரையின் போது 1992 ஆம் ஆண்டை தனது "ஆன்னஸ் ஹாரிபிலிஸ்" என்று விவரித்தார். ஓராண்டில் தனது மூன்று குழந்தைகளின் திருமணங்கள் முறிந்ததையும் வின்ட்சர் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டதையும் கண்ட வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராணி தனது கிறிஸ்துமஸ் உரையின் போது 1992 ஆம் ஆண்டை தனது "ஆன்னஸ் ஹாரிபிலிஸ்" என்று விவரித்தார். அந்த ஓராண்டில் தனது மூன்று குழந்தைகளின் திருமணங்கள் முறிந்ததையும் வின்ட்சர் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டதையும் கண்ட வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார்.
1px transparent line
அரண்மனையின் பழுதுபார்ப்புக்கு அரசாங்கம் பணம் செலுத்துவதற்கு எதிராக பொதுமக்களின் கருத்து இருந்தது. முடியாட்சி தற்காப்பு நிலையில் இருந்தது. நிதி திரட்டுவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனை பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது. பிஸ்லியில் உள்ள ராணுவ துப்பாக்கி சங்கத்துடன் ராணி ஒரு நிலையான எஸ்ஏ80 ரக துப்பாக்கியில் கடைசியாகச் சுட்டார்.

பட மூலாதாரம், David Cooper/Alamy

படக்குறிப்பு, அரண்மனையின் பழுதுபார்ப்புக்கு அரசாங்கம் பணம் செலுத்துவதற்கு எதிராக பொதுமக்களின் கருத்து இருந்தது. முடியாட்சி தற்காப்பு நிலையில் இருந்தது. நிதி திரட்டுவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனை பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது. பிஸ்லியில் உள்ள ராணுவ துப்பாக்கி சங்கத்தில் ராணி ஒரு நிலையான எஸ்ஏ80 ரக துப்பாக்கியில் கடைசியாகச் சுட்டார்.
1px transparent line
1997இல் வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு, ராணி பொதுவில் தோன்றாததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். இறுதியில் அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஞ்சலியைப் பார்த்தார். அதோடு தேசத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்தார்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 1997இல் வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு, ராணி பொதுவில் தோன்றாததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். இறுதியில் அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஞ்சலியைப் பார்த்தார். அதோடு தேசத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்தார்
அரச குடும்பம் பொதுமக்களைச் சந்திப்பதற்கு மிகவும் நெருக்கமான, முறைசாரா அணுகுமுறையை முயன்று பார்த்த நேரத்தில், கிளாஸ்கோவில் உள்ள கேஸில்மில்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் ராணி திருமதி சூசன் மெக்கரோனுடன் தேநீர் அருந்தினார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, அரச குடும்பம் பொதுமக்களைச் சந்திப்பதற்கு மிகவும் நெருக்கமான, முறைசாரா அணுகுமுறையை முயன்று பார்த்த நேரத்தில், கிளாஸ்கோவில் உள்ள கேஸில்மில்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் ராணி திருமதி சூசன் மெக்கரோனுடன் தேநீர் அருந்தினார்.
1px transparent line
2000ஆம் ஆண்டில், ராணியின் தாய் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாடினார் - இங்கே அவரது மகள்கள் இளவரசி மார்கரெட் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோருடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2000ஆம் ஆண்டில், ராணியின் தாய் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாடினார் - இங்கே அவரது மகள்கள் இளவரசி மார்கரெட் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோருடன்
2002ஆம் ஆண்டில், ராணி தனது சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் மரணத்தை எதிர்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2002ஆம் ஆண்டில், ராணி தனது சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் மரணத்தை எதிர்கொண்டார்.
1px transparent line
அந்த கோடையில் ராணி தனது பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரும் ஆதரவை அனுபவித்தார். ஜூன் 4 அன்று ஜூபிலி மாலையில் ஓர் அணிவகுப்புக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வந்திருந்தனர். தி மாலில் 10 லட்சம் மக்கள் குவிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்த கோடையில் ராணி தனது பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரும் ஆதரவை அனுபவித்தார். ஜூன் 4 அன்று ஜூபிலி மாலையில் ஓர் அணிவகுப்புக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வந்திருந்தனர். தி மாலில் 10 லட்சம் மக்கள் குவிந்தனர்.
1px transparent line
இளவரசர் சார்ல்ஸ் மற்றும் கமிலா பார்க்கர் பவுல்ஸ் திருமணம், 2005

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 2005ஆம் ஆண்டில், ராணி எலிசபெத்தின் மூத்த மகன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இளவரசர் சார்ல்ஸ் மற்றும் கமிலா பார்க்கர் பவுல்ஸ் வின்ட்சர் கில்டாலில் ஒரு சிவில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஆசீர்வாதம் பெற்றனர்
1px transparent line
எலிசபெத், எடின்பர்க் டியூக், வேல்ஸ் இளவரசர் மற்றும் டச்சஸ் ஆஃப் கார்ன்வால் ஆகியோர் அபெர்டீன்ஷயரில் நடந்த பிரேமர் ஹைலேண்ட் கேம்ஸில் ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, எலிசபெத், எடின்பரோ கோமகன், வேல்ஸ் இளவரசர் மற்றும் டச்சஸ் ஆஃப் கார்ன்வால் ஆகியோர் அபெர்டீன்ஷயரில் நடந்த பிரேமர் ஹைலேண்ட் கேம்ஸில் ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
2007ஆம் ஆண்டில், ரோஹாம்டனில் லான் டென்னிஸ் சங்கத்தின் புதிய தலைமையகத்தைத் திறக்கும் போது, ராணி மழையில் இருந்து தஞ்சம் அடைவது படம் பிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 2007ஆம் ஆண்டில், ரோஹாம்டனில் லான் டென்னிஸ் சங்கத்தின் புதிய தலைமையகத்தைத் திறக்கும் போது, ராணி மழையில் இருந்து தஞ்சம் அடைவது படம் பிடிக்கப்பட்டது.
1px transparent line
ராணி தனது அதிகாரபூர்வ 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓர் உரையில் முதுமை பற்றிய க்ரூச்சோ மார்க்ஸின் கட்டளையை மேற்கோள் காட்டினார்: "யாவரும் வயதாகலாம்; நீங்கள் செய்ய வேண்டியது நீண்ட காலம் வாழ வேண்டியது தான்"

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ராணி தனது அதிகாரபூர்வ 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓர் உரையில் முதுமை பற்றிய க்ரூச்சோ மார்க்ஸின் கட்டளையை மேற்கோள் காட்டினார்: "எல்லோருக்கும் வயதாகலாம்; நீங்கள் செய்ய வேண்டியது நீண்ட காலம் வாழ வேண்டியது தான்"
1px transparent line
2011ஆம் ஆண்டு அவரது பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் மிடில்டனுக்கு திருமணம் நடந்தது அவரது பிற்கால மகிழ்ச்சியான நிகழ்வுகளில் இது ஒன்று. இங்கே இளவரசர் வில்லியமும் அவரது புதிய மணமகளும் ராணியை வணங்குகிறார்கள்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 2011ஆம் ஆண்டு அவரது பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் மிடில்டனுக்கு திருமணம் நடந்தது. அவரது பிற்கால மகிழ்ச்சியான நிகழ்வுகளில் இது ஒன்று. இங்கே இளவரசர் வில்லியமும் அவரது புதிய மணமகளும் ராணியை வணங்குகிறார்கள்
1px transparent line
ஆங்கிலேசியில் உள்ள ஒரு காற்று வீசும் ஆர்ஏஎஃப் பள்ளத்தாக்குக்கு வந்தவுடன் ராணி தனது தொப்பியை இழந்தார். அங்கு அவரும் இளவரசர் பிலிப்பும் இளவரசர் வில்லியமை சந்தித்தனர். அந்த நேரத்தில் அவர் தளத்திற்கு அனுப்பப்பட்டார்.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ஆங்கிலேசியில் உள்ள ஒரு காற்று வீசும் ஆர்ஏஎஃப் பள்ளத்தாக்குக்கு வந்தவுடன் ராணி தனது தொப்பியை இழந்தார். அங்கு அவரும் இளவரசர் பிலிப்பும் இளவரசர் வில்லியமை சந்தித்தனர். அந்த நேரத்தில் அவர் தளத்திற்கு அனுப்பப்பட்டார்.
லெய்செஸ்டர் விஜயம் 2012இல் இங்கிலாந்தின் 60வது ஆண்டு வைர விழா சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லெய்செஸ்டர் விஜயம். 2012இல் இங்கிலாந்தின் 60வது ஆண்டு வைர விழா சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது.
1px transparent line
இதைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த மற்றொரு பிரிட்டிஷ் ஐகானான ஜேம்ஸ் பாண்டுடன் படமாக்கப்பட்ட காட்சியில் தோன்றினார்.
படக்குறிப்பு, இதைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த மற்றொரு பிரிட்டிஷ் நட்சத்திரமான ஜேம்ஸ் பாண்டுடன் படமாக்கப்பட்ட காட்சியில் தோன்றினார்.
1px transparent line
முதல் அரச அஸ்காட் வெற்றியாளரை உரிமையாளராக அனுபவித்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, குயின்ஸ் ஹார்ஸ் எஸ்டிமேட் 207வது தங்கக் கோப்பையை வென்றது, அவருக்கும் அவரது பந்தய மேலாளர் ஜான் வாரனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, முதல் அரச அஸ்காட் குதிரை பந்தயத்தின் வெற்றியாளராகி 60 ஆண்டுகளுக்குப் பிறகு, குயின்ஸ் ஹார்ஸ் எஸ்டிமேட் 207வது தங்கக் கோப்பையை வென்றது, அவருக்கும் அவரது பந்தய மேலாளர் ஜான் வாரனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
1px transparent line
9 செப்டம்பர் 2015 அன்று 17:30 பிரிட்டன் நேரத்தில், எலிசபெத் 23,226 நாட்கள், 16 மணி நேரம் மற்றும் தோராயமாக 30 நிமிடங்கள் ஆட்சி செய்தார் - அவரது கொள்ளுப்பாட்டி மகாராணி விக்டோரியாவின் ஆட்சியை மிஞ்சினார். அவர் ஸ்காட்லாந்தில் ஒரு புதிய ரயில் பாதையைத் திறந்து வைத்தார்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, 9 செப்டம்பர் 2015 அன்று 17:30 பிரிட்டன் நேரத்தில், எலிசபெத் 23,226 நாட்கள், 16 மணி நேரம் மற்றும் தோராயமாக 30 நிமிடங்கள் ஆட்சி செய்தார் - அவரது கொள்ளுப்பாட்டி மகாராணி விக்டோரியாவின் ஆட்சியை மிஞ்சினார். அவர் ஸ்காட்லாந்தில் ஒரு புதிய ரயில் பாதையைத் திறந்து வைத்தார்
1px transparent line
ஜூன் 2016இல் ராணி தனது அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்தார். அந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் 90 வயதை எட்டினார்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ஜூன் 2016இல் ராணி தனது அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்தார். அந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் 90 வயதை எட்டினார்
1px transparent line
எடின்பர்க் டியூக் ஓய்வு பெற்ற பிறகு, ராணி தனது பொதுப் பணிகளைத் தொடர்ந்தார். ராணி தனது குதிரை ஸ்பார்க்லர் 2018இல் ராயல் வின்ட்சர் குதிரை கண்காட்சியில் போட்டியிட்டதைப் பார்த்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடின்பரோ கோமகன் ஓய்வுக்குப் பிறகு, ராணி தனது பொதுப் பணிகளைத் தொடர்ந்தார். ராணி தனது குதிரை 'ஸ்பார்க்லர்' 2018இல் ராயல் வின்ட்சர் குதிரை பந்தயத்தில் போட்டியிட்டதைப் பார்வையிட்டார்.
1px transparent line
அவரது குடும்பம் வளர்ந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது - இங்கே அவர் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ், அவர்களின் மகன் ஆர்ச்சி மற்றும் டச்சஸின் தாய் டோரியா ராக்லாண்ட் ஆகியோருடன் படம்பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தில் தொடர்ந்து அழுத்தங்கள் இருந்தன - இளவரசர் ஆண்ட்ரூவின் அமெரிக்க நிதியாளர் மற்றும் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு மற்றும் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரியின் வளர்ந்து வரும் ஏமாற்றம் ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், Chris Allerton / SussexRoyal

படக்குறிப்பு, ராணியின் குடும்பம் வளர்ந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது - இங்கே அவர் சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டி மேகனுக்குப் பிறந்த மகன் ஆர்ச்சி, மேகனின் தாய் டோரியா ராக்லாண்ட் ஆகியோருடன் படம்பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தில் தொடர்ந்து அழுத்தங்கள் இருந்தன - இளவரசர் ஆண்ட்ரூவின் அமெரிக்க நிதியாளர் மற்றும் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு மற்றும் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரியின் வளர்ந்து வரும் ஏமாற்றம் ஆகியவை அடங்கும்.
1px transparent line
ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 9 ஏப்ரல் 2021 அன்று 99 வயதில் இறந்தார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பக்கத்தில் இருந்தார். கோவிட் தொற்றுநோய் பேரிடரின்போது இறுதிச் சடங்கில் ராணியின் உருவம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எதிரொலித்தது, அதே பாணியில் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 9 ஏப்ரல் 2021 அன்று 99 வயதில் இறந்தார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பக்கத்தில் இருந்தார். கோவிட் தொற்றுநோய் பேரிடரின்போது இறுதிச் சடங்கில் ராணியின் உருவம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எதிரொலித்தது, அதே பாணியில் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்க வேண்டியிருந்தது.
1px transparent line
ராணிக்கு நான்கு குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்

பட மூலாதாரம், Duchess of Cambridge

படக்குறிப்பு, ராணிக்கு நான்கு குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்
1px transparent line

அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.