கலிஃபோர்னியா காட்டுத் தீ: மின்வெட்டினை எதிர்கொள்ளும் 20 லட்சம் பேர்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீயால், பல லட்சம் மக்கள் மின்வெட்டு சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
மிகப்பெரிய காற்று வீசும் சூழ்நிலை ஏற்படும் என்று கணிக்கப்படுவதால், மின் விநியோக கருவிகளை அது பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் 36 கவுண்டிகளில் மின் விநியோகத்தை நிறுத்துவதாக பசிஃபிக் கேஸ் & எலக்ட்ரிக் (பிஜி&இ) நிறுவனம் தெரிவித்துள்ளது.
காட்டுத் தீயால் சுமார் 50 ஆயிரம் மக்கள் இடம் பெயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோது இந்த எச்சரிக்கையும் வந்துள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் சோனோமா கவுண்டிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணம் மோசமான தீயை விளைவிக்கும் தட்ப வெட்ப நிலையை எதிர்கொண்டிருப்பதாக கலிஃபோர்னியா மாகாண தீயணைப்புத் துறை தெரிவிக்கிறது.
சனிக்கிழமைக்கும் திங்கள்கிழைக்கும் இடையில் அதி தீவிர தட்ப வெட்ப நிலையால், மின்வெட்டு ஏற்படும் என்று 20 லட்சம் பேர் வசிக்கிற 8.5 லட்சம் வீடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பசிஃபிக் கேஸ் & எலக்ட்ரிக் (பிஜி&இ) நிறுவனம்.
முன்பு வீசிய வெப்பக் காற்றினால் காய்ந்து கிடக்கும் மரம், செடிகொடிகள் எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் சூழ்நிலை இருப்பதால், காட்டுத் தீ பாதிப்பினால், மின் விநியோக அமைப்பு தீப்பற்றிக்கொள்ளவும், சேதாரம் அடையவும் வாய்ப்பிருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வியாழக்கிழமை இதுபோன்ற சூழ்நிலையில் மின் கோளாறால் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கலிஃபோர்னியாவின் 15 கவுண்டிகளில் 1 லட்சத்து 80 ஆயிரம் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டித்தது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அன்று இரவே மின்சாரம் திரும்பியது. லாஸ் ஏஞ்சலீஸ் ஒருங்கிணைந்த பள்ளி மாவட்டத்தில் பள்ளிகள் வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












