அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாகிதாரி, பின் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மரணித்தார் .

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகை வேலி அருகே வந்த ஒருவர், தன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு. பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரியின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்திய போது, அவர் பெரும் மக்கள் திரளுக்கு மத்தியில் இருந்ததாக இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட் கூறி உள்ளது.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Twitter/@FlorianLuhn/via Reuters

ஃப்ளோரிடாவில் டிரம்ப்

சம்பவம் நடந்த சமயத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லை. அவர் ஃப்ளோரிடாவில் இருந்தார், அவரும், மெலினா டிரம்ப்பும் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலைதான் வாஷிங்டன் வருகிறார்கள்.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில வருடங்களாக வெள்ளை மாளிகை அருகே இது போன்ற பல பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அண்மையில், பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று, வெள்ளை மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் ஒரு கார் மோதியது. இந்த சம்பவத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பெப்பர் ஸ்ப்ரெவுடன் வெள்ளை மாளிகை வேலியை ஏறி குதித்தார் ஓர் இளைஞர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :