ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சுதந்திர தேவி சிலை திறந்திருக்கும்

அமெரிக்காவில்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் புதிய வரவு செலவுத் திட்டம் குறித்து உடன்பட முடியாததால் அமெரிக்க அரசுத் துறைகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், திங்களன்றும் சுதந்திர தேவி சிலை தொடர்ந்து திறந்திருப்பதற்கு மாகாண அரசின் நிதி பயன்படுத்தப்படும் என நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ உறுதியளித்துள்ளார்.

Presentational grey line

துருக்கிக்கு வலுக்கும் எதிர்ப்பு

துருக்கி

பட மூலாதாரம், AFP

சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவுக்கு எதிராக தரைவழி தாக்குதலைத் துருக்கி தொடங்கிய நிலையில், இதனை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் துருக்கியிடம் கேட்டுக்கொண்டுள்ளன. ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில், மேற்கத்திய நாடுகளின் முக்கிய கூட்டாளியாக குர்திஷ் ராணுவ குழு இருக்கிறது.

Presentational grey line

கூட்டணிக்கு ஏங்கலா மெர்கல் வரவேற்பு

ஏங்கலா மெர்கல்

பட மூலாதாரம், Getty Images

ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில், தனது கிறித்துவ ஜனநாயகக் கட்சியுடன், இடது மையவாத சமூக ஜனநாயக கட்சி மீண்டும் கூட்டணியை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதை சான்சிலர் ஏங்கலா மெர்கல் வரவேற்றுள்ளார்.

Presentational grey line

இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ள ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

ஃபேஸ்புக்கை பயன்படுத்தி தங்களது தொழில்களைத் தொடங்கவும், அதனை விரிவாக்கவும் நூற்றுக்கணக்கான ஐரோப்பிய இளைஞர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :