“அணுஆயுதப் போர் நெடுந்தொலைவில் இல்லை”: ஒரு எச்சரிக்கை

பட மூலாதாரம், Reuters
அமெரிக்கா- வடகொரியாவிற்கு இடையிலான பிரச்சனையை குறிப்பிடும் வகையில், `காயப்பட்ட பொறாமையால்`, உலகம் `அணுஆயுத நெருக்கடியை` சந்திக்கிறது என்று, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஐகேன் நிறுவனம் கூறியுள்ளது.
அமைதிகான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட, ஐகேனின் நிர்வாக இயக்குநரான பீட்ரைஸ் ஃபிஹன், `மில்லியன் கணக்கான மக்களின் மரணம் என்பது ஒரு சிறிய எழுச்சிக்கான தொலைவில் தான் உள்ளது` என்று கூறினார்.
`நமக்கு வாய்ப்புகள் உள்ளது. அணுஆயுதங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது, நம் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்` என்று அவர் கூறினார்.
சமீபகாலமாக, வடகொரியாவின் அணுஆயுத திட்டங்கள் குறித்த விவகாரங்கள் பெரும் நெருக்கடி சூழலை உருவாக்கியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னிற்கும் இடையிலுள்ள வெளிப்படையிலான விரோதம் என்பது, இந்த ஆண்டின் சில நேரங்களில் தனிப்பட்ட தாக்குதல்களாகவும் மாறியுள்ளன.
`பொறுப்பற்ற தலைவர்கள்`
ஒஸ்லோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பீட்ரைஸ், அணுஆயுதங்கள் மூலமாக, `ஒரு விநாடியின் பதட்டம்` கூட, `பல நகரம் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்களில் அழிவிற்கு வழிவகுக்கும்` என்றார்.
இத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு என்பது, பனிப்போர் காலத்தைவிட தற்போது அதிகமுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆயுதங்களை அழிப்பதற்கான உடன்படுக்கையை கொண்டுவர, பணியாற்றியதே ஐகேன் நிறுவனம். இந்நிறுவனம் நூற்றுக்கணக்கான தன்னார்வல தொண்டு நிறுவனங்களை கொண்டுள்ளது.
விருது வழங்குவதற்கு முன்பு பேசிய, நோபல் குழுவின் தலைவரான ரீஸ் ஆண்டர்சன், பீட்ரைஸ் தெரிவித்த கருத்திற்கு ஒத்த கருத்தையே தெரிவித்தார். `பொறுப்பற்ற தலைவர்கள் எந்த அணுஆயுதம் கொண்ட நாட்டிற்கும் தலைவராக வரலாம்` என்று அவர் கூறினார்.
ஐகேன் நிறுவனம் குறித்து பேசிய ரீஸ் ஆண்டர்சன், அந்நிறுவனம், அணுஆயுதங்களின் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்தல் மட்டுமல்லாது, அவற்றை இல்லாமல் செய்ய எடுத்த பல முயற்சிகளிலும் வெற்றிகண்டுள்ளது` என்றார்.
மேலும், அவர், ஹிரோஷிமா தாக்குதலில் உயிர்பிழைத்து, தற்போது ஐகேனின் பிரச்சாரகராக உள்ள 85 வயதான, செட்சுக்கோ தர்லோவின் பங்களிப்புகளை பாராட்டினார்.
தாக்குதலின் போது, கட்டட இடிபாடுகளுக்கிடையிலிருந்து செட்சுக்கோ காப்பாற்றப்பட்டார். அவரின் பெரும்பான்மையான நண்பர்கள், உயிரோடு எரிந்துவிட்டதாக அவர் கூறினார்.
`மிகவும் பயங்கரமாக காயமடைந்த உருவங்கள் நடந்து சென்றன. மக்கள் மோசமாக காயமடைந்திருந்தனர், ரத்தம் வழிய, எரியப்பட்டு, கருப்பாக இருந்தனர்` என்று அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












