ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

பாலியல் குற்றச்சாட்டு: அமெரிக்க செனட்டர் பதவி விலக கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான செனட்டர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான செனட்டர்

அமெரிக்க செனட்டரான அல் ஃபிரான்கன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதற்கு மத்தியில், அவர் பதவி விலக வேண்டும் என்று 30 ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் வரை அழைப்பு விடுத்துள்ளனர்.

புதனன்று ஏறத்தாழ ஒரே நேரத்தில் வெளியான அறிக்கைகளில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர்கள் இவர் பதவி விலக வேண்டும் என்று மற்ற செனட்டர்கள் அறைக்கூவல் விடுத்துள்ளனர்.

அபுதாபி அருங்காட்சியகத்தில் டா வின்சியின் ஏசுநாதர் ஓவியம்?

படத்தின் காப்புரிமைCHRISTIE'S

பட மூலாதாரம், CHRISTIE'S

லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட ஓவியம் என்று நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏசுநாதரின் ஓவியம் அபுதாபியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், இந்த மாதம் நடந்த ஏலத்தில் இந்த ஓவியத்தை வாங்கியதா என்பதைக் குறிப்பிடாமல் ட்விட்டரில் அறிவிப்பு செய்துள்ளது.

ஹிரோஹீட்டோ எழுதிய தொகுப்பு ஏலத்தில் பெரும் பணத்தை ஈட்டியது

முன்னாள் ஜப்பானிய பேரரசர் ஹிரோஹீட்டோ

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, முன்னாள் ஜப்பானிய பேரரசர் ஹிரோஹீட்டோ

தனது நாடு இரண்டாம் உலகப்போருக்குள் நுழைந்ததைப் பற்றி முன்னாள் ஜப்பானிய பேரரசர் ஹிரோஹீட்டோ எழுதிய ஒரு வரலாற்று நினைவு தொகுப்பு, நியூ யார்க்கில் நடந்த ஏலத்தில் 2, 20,000 அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :