ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது''

பட மூலாதாரம், copyrightAFP
செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹிஸ்போலா ஷியா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்கொலை வலைத்தளங்களுக்குத் தடை

பட மூலாதாரம், AFP
எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் தங்கள் தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வலைத்தளங்களை தடை செய்ய உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்தி தொடர் கொலைகள் நடந்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கில், இந்த நடவடிக்கை ஜப்பான் எடுத்துள்ளது.

ஸ்வீடன் வானொலியில் ஐ.எஸ் பிரசார பாடல்

பட மூலாதாரம், AFP
ஐ.எஸ் குழுவிற்கு ஆட்களைச் சேர்க்கும் ஒரு பிரசார பாடல், மிக்ஸ் மெகாபோல் என்ற ஸ்வீடனின் மிகமுக்கிய வானொலியில் 30 நிமிடம் ஒலிபரப்பானது.
வானொலியில் அலைவரிசை கடத்தப்பட்டும், ஐ.எஸ் பாடல் ஒலிபரப்பட்டதாக வானொலி நிலையத்தின் உரிமையாளர் நம்புகிறார்.

சிரியாவில் வீழ்ந்த ஐ.எஸ் கோட்டை

பட மூலாதாரம், AFP
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் கடைசி நகரக் கோட்டையாக நிகழ்ந்த ஆல்பு கமல் நகரத்தை கிழக்கு எல்லையைக் கைப்பற்றியுள்ளதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஊடகத்தைக் குற்றம்சாட்டும் ஸ்பெயின்

பட மூலாதாரம், Reuters
கேட்டலோனியா பிரச்சனையில் தலையிட்டு சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக ரஷ்ய ஊடகத்தை ஸ்பெயின் குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பெயின் மொழியில் சேவையை வழங்கிவரும் ரஷ்ய ஊடகமான ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் போன்ற ஊடகங்களை ஸ்பெயின் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












