பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல்: மூவர் காயம்
தென் மேற்கு பிரான்சில் அமைந்துள்ள டுலூஸ் நகரின் அருகே ஒரு கல்லூரிக்கு வெளியே இருந்த மாணவர்கள் மீது ஒரு நபர் தான்ஓட்டி வந்த காரை மோதி தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.

பட மூலாதாரம், Reuters
அந்த மூவருமே சீன வம்சாவளியினர் என்று கருதப்படுகிறது. அவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய நிகழ்த்திய 28 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கண்காணிக்கப்பட்டு வந்தவர்களின் பட்டியலில் இல்லை என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால், போதைப் பொருள் தொடர்பான சிறு குற்றங்களில் அவர் முன்னதாக ஈடுபட்டவர் என்று கூறப்பட்டுள்ளது.
காயமடைந்த 22 முதல் 23 வயதாகும் மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








