டேங்கர்-போர்க்கப்பல் மோதல்: அமெரிக்க கடற்படை பிரிவின் கமாண்டர் நீக்கம்
எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் அமெரிக்க போர்க்கப்பல் மோதிய விபத்தை அடுத்து அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் தள பிரிவின் கமாண்டர் வைஸ் அட்மிரல் ஜோசப் அகாய்ன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் அருகே திங்கள்கிழமை நடந்த விபத்தில் யு.எஸ்.எஸ். ஜான் எஸ்.மெக்கெய்ன் என்ற போர்க்கப்பல் எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் மோதியதில் போர்க்கப்பலின் பக்கவாட்டில் ஓட்டை ஏற்பட்டு உள்ளே தண்ணீர் புகுந்தது.
பத்து மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். தற்போது சிங்கப்பூர் துறைமுகத்தில் உள்ள இந்தக் கப்பலில் மனித உடல் பாகங்கள் கிடைத்ததாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
இந்த ஆண்டில், அமெரிக்க கடற்படைக் கப்பலால் ஆசியாவில் நிகழ்ந்துள்ள நான்காவது விபத்து இது.
அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்தொகுப்பு என்பது ஜப்பானின் யோகோசுகாவில் நிலை கொண்டுள்ளது.
இதில் 50 முதல் 70 வரையிலான கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இருக்கலாம் என்று தெரிகிறது.
இத் தொகுப்பின் கமாண்டராக 2015ல் இருந்து பொறுப்பு வகிக்கும் அகாய்ன் சில வாரங்களில் ஓய்வு பெறவுள்ளார்.
காணாமல் போயுள்ள மாலுமிகளைத் தேடும் பணியில் அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய மற்றும் சிங்கப்பூர் கடற்படைகளைச் சேர்ந்த கப்பல்கள், கருவிகள், விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
பிற செய்திகள்
- கருப்பை புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்
- முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐந்து பெண்கள் யார்?
- முஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக்
- எய்ட்ஸ் - உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி
- ``காந்திக்குல்லா! காவிக்குல்லா!....தற்போது கோமாளிக்குல்லா``- யாரைச் சொல்கிறார் கமல்?
- பிரிவினை: 'குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானில் நான் மட்டும் இந்தியாவில்'
- உலகின் அதிவேக ரயிலை மீண்டும் களம் இறக்கியது சீனா
- இலங்கை அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாஸ ராஜபக்ஷ நீக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













