கிரிப்டோ கரன்சிகள் உயிருக்கு உலை வைக்கின்றன: கேட்ஸ்

கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் "நேரடியாகவே" மக்களின் உயிரைப் பறிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிட்காயின் பற்றி ஆர்வத்துடன் பில் கேட்ஸ் முன்னர் பேசியிருந்தார்

செயற்கை ஓபியாய்ட் ஃபெண்டனில் (opioid fentanyl) போன்ற போதை மருந்துகள் வாங்க பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறுகிறார்.

செய்தி வலைத்தளம் ரெடிட் (Reddit) ஏற்பாடு செய்திருந்த "எதையும் என்னிடம் கேட்கலாம்" என்ற அமர்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பில் கேட்ஸ், யாருடையது என்று தெரியாத டிஜிட்டல் நாணயங்கள், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது, பண மோசடிகளுக்கு துணைபோவது என பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

தொழில்நுட்பத்தை பற்றி பில் கேட்ஸ் தவறான தகவல் கொடுப்பதாக சிலர் அவரை விமர்சிக்கின்றனர்.

கிரிப்டோ கரன்ஸியின் தொழில்நுட்பம் பற்றிய பில் கேட்ஸின் கருத்தை பற்றி ஒருவர் கேள்வி கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், "அநாமதேயத்தன்மையே கிரிப்டோ கரன்ஸியின் சிறப்பம்சம். இது சரியானது என்று நான் கருதவில்லை. பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பது போன்றவற்றை கண்டறிய கண்டுபிடிக்கும் அரசின் திறமைக்கு இது நல்ல விஷயம்" என்று கூறினார்.

"இப்போது, கிரிப்டோ கரன்சிகளைக் கொண்டு செயற்கை ஓபியாய்ட் ஃபெண்டனில் (opioid fentanyl) போன்ற மருந்துகள் வாங்கப்படுகிறது. எனவே இந்த அரிய தொழில்நுட்பம் நேரடியான முறையில் மரணத்திற்கு காரணமாகிறது. ஐ.சி.ஓ எனப்படும் ஆரம்ப நாணய வழங்கல்கள் [initial coin offerings] மற்றும் கிரிப்டோ கரன்சி கொண்ட ஊக வணிகம் சார்ந்த போக்கு, நீண்ட காலம் அதை பயன்படுத்துவர்களுக்கு மிகவும் ஆபத்தானது" என்கிறார் பில்கேட்ஸ்.

கிரிப்டோ கரன்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்கு எதிராக பலர் எச்சரிக்கை விடுக்கின்றனர்

ஊக வணிகத்தில் ஆர்வம் கொண்டவர்கள் விரைவில் "மோசமான முடிவை எதிர்கொள்வார்கள்" என்று முதலீடுகள் செய்வதில் நீண்டகால அனுபவமுள்ள வாரென் பஃப்பெட் கூறுகிறார்,

பில்கேட்ஸ் பிட்காயின் பற்றி எப்போதும் எதிர்மறையான கருத்துகளை கூறியதில்லை.

2014ஆம் ஆண்டு, ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், "நாணயத்தை விட சிறந்தது பிட்காயின்" என்று அவர் கூறியிருந்தார்.

இந்த அமர்வில் கலந்துக்கொண்ட பில் கேட்ஸின் பதில், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கவில்லை. பிறகு பில்கேட்ஸை அணுகிய சில பங்கேற்பாளர்கள், டிஜிட்டல் பணச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பில் கேட்ஸின் ஒரு முயற்சியாக இதை உணர்ந்ததாக அவர்கள் விமர்சித்தனர். வேறு சிலரோ, அவர் பிட்காயினை 'வெள்ளை காகிதமாக' மீண்டும் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள்.

SAUL LOEB

பட மூலாதாரம், SAUL LOEB

அறக்கட்டளை நன்கொடைகள்

விரிவான ரெடிட் கலந்துரையாடலில் பேசிய பில் கேட்ஸ், "குழந்தை பருவ மரணம் மற்றும் ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் மரணங்களை குறைப்பது, போலியோ நோயை பூண்டோடு அழிப்பது" ஆகிய மூன்று இலக்குகளை தான் முதன்மையானதாக கருதுவதாகக் கூறினார்.

கல்வி மற்றும் சுகாதார திட்டங்களுக்காக ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில், பில்கேட்ஸ் துணை தலைவராக இருக்கிறார்.

கென்யாவில் வணிகர்களுக்கான கிரிப்டோ கரன்சியை ஊக்குவிக்கும் பிளாக்செயின் (blockchain) தொழில்நுட்பத்திற்கும் இந்த அறக்கட்டளை நிதியுதவி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

பிட்காயின்

பட மூலாதாரம், AFP

டிஜிட்டல் அடையாளத்தை சரிபார்க்க, பிளாக்செயின் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் வழிகளையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

கிரிப்டோ கரன்சியின் பரிவர்த்தனையில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க உயர்வு, பொருளாதாரத்திலும், மக்களிடமும் ஏற்பட்டுள்ள அதன் தாக்கத்தை மேலும் உன்னிப்பாக கண்காணிக்கும் உத்வேகத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் அடிப்படையில் பாராட்டுகளை பெற்றாலும், பொருளாதாரம், பணமோசடி மற்றும் இணையத்தள குற்றங்களுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதும் பரவலான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் நாணயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை இங்கிலாந்தின் கருவூலக் குழு தற்போது ஆராய்ந்துவருகிறது.

காணொளிக் குறிப்பு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கான தடையால் சரக்கு போக்குவரத்து பாதிப்பு

தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :