இலங்கை 75வது சுதந்திர தினம்: கொண்டாட்டங்களுக்கு நடுவே வெறிச்சோடிய யாழ்ப்பாணம் - படங்கள்

பட மூலாதாரம், SRI LANKA PMD
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் (முழு அடைப்பு) அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

1948ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த நாளை இலங்கை தன் சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

பட மூலாதாரம், SRI LANKA PMD
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் கொழும்புவில் கொடியேற்றினார்.

பட மூலாதாரம், SRI LANKA PMD
பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார்.

பட மூலாதாரம், SRI LANKA PMD
யாழ்நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றன.

நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்க கொடி பறக்கவிடப்படும் கம்பத்தில் சிங்க கொடிக்கு பதிலாக கறுப்பு கொடியை மாணவர்கள் பறக்க விட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












