இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்கா தகவல்

காணொளிக் குறிப்பு, இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்கா தகவல் - காணொளி

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது.

இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.

இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, 'நம்பகமான ஆதாரங்களை' மேற்கோள் காட்டி, இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் 'முற்றிலும் பாதுகாப்பானவை' என்று கூறியிருக்கிறது.

அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய ராணுவம் 'இந்த நேரத்தில்' கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

இரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350கி.மீ. தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)