இந்தியா-பிரிட்டன் ஒப்பந்தம் : இளைஞர்களுக்கு என்ன கிடைக்கும்?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமருடன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பிரிட்டனின் கார்கள் மற்றும் விஸ்கியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதும், இந்தியாவின் ஜவுளி மற்றும் நகைகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதும் மலிவாகும்.
இந்த ஒப்பந்தம் வேலை வாய்ப்புக்கான சாதகமான சூழலை அதிகமாக்கியிருக்கிறது என இந்திய அரசு கூறுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்போது குறைவான வரி விதிக்கப்படும் பொருட்கள் எவை? இது எப்படி வேலை வாய்ப்புக்கு உதவும் என இந்த காணொளியில் காணலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு









