இலங்கை: கடலில் அடித்து செல்லப்பட்ட யானையை காப்பாற்றிய கடற்படை

பட மூலாதாரம், navy.lk
இலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருந்த காட்டு யானையொன்று கடற்படையினரால் பார்க்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் கடல் பிரதேசத்தில் 8 கடல் மைல் தொலைவில் குறித்த கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், navy.lk
கிழக்கு கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்த யானை பார்க்கப்பட்டு கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
யானையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து கொண்டதாக கடற்படை கூறுகின்றது.
சுழியோடிகள் மற்றும் கடற்படை படகுகளின் உதவியுடன் கடலிலிருந்து கரைக்கு திசை திருப்பப்பட்ட யானை வன ஜீவராசிகள் இலாகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












