காணொளி: காற்று சாதகமாக வீசாவிட்டாலும் பறக்கும் 'ரிமோட்' காற்றாடி

காணொளிக் குறிப்பு,
காணொளி: காற்று சாதகமாக வீசாவிட்டாலும் பறக்கும் 'ரிமோட்' காற்றாடி

விக்கி வகாரியா, மாஞ்சா கயிறு தேவைப்படாத, காற்றே இல்லாத சூழலிலும் பறக்கக்கூடிய ரிமோட் மூலம் இயக்கக்கூடிய காற்றாடியை வடிவமைத்துள்ளார்.

அதுகுறித்துப் பேசிய அவர், “என் காற்றாடியில் மாஞ்சாக் கயிறு இல்லை. காற்று சாதகமாக இல்லாவிட்டாலும் இந்தக் காற்றாடியை பறக்கவிடலாம் என்பதே இதன் சிறப்பு.

இதில் ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன், தன்னைத் தானே சுற்றுதல், வட்டமிடுதல் போலப் பல்வேறு சாகசங்களைச் செய்யலாம். காற்றாடியை எந்தத் திசையில் வேண்டுமானாலும் நகர்த்தலாம். இது முழு மகிழ்ச்சியைத் தரும்” என்று தெரிவித்தார்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு