காணொளி: ஐபிஎல்லில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கம்- வங்கதேசத்தினர் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, கேகேஆர் அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கம்- வங்கதேசத்தினர் கூறுவது என்ன?
காணொளி: ஐபிஎல்லில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கம்- வங்கதேசத்தினர் கூறுவது என்ன?

இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவில் பதற்றம் நிலவும் நிலையில், கிரிக்கெட்டை மையப்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் விவாதங்கள் பரபரப்பாகியுள்ளன. இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச கிரிக்கெட்டர் முஸ்தபிசுர் ரஹ்மான் கடந்த இரண்டாம் தேதியன்று நீக்கப்பட்டார். இதனையடுத்து வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்துவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

மேலும் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறும் ஐசிசி-இடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு ஐசிசி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், வங்கதேசத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த விவகாரங்கள் வங்கதேச இளைஞர்களிடம் எதிரொலிக்கிறது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு