பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராகப் பாகுபாடா? பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

காணொளிக் குறிப்பு, பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராகப் பாகுபாடா? பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராகப் பாகுபாடா? பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

"பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம்" என்று பதிலளித்தார்.

அதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம்.

முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை ஒரு மதரீதியான விஷயமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது" என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், தனது இசைப் பயணம், மாறிவரும் சினிமா, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூகத்தின் தற்போதைய சூழல் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு