IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், AFP
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டி குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ:
- நேற்றைய போட்டியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி எனும் பெருமையை பெற்றது இந்தியா அணி. அகமதாபாத்தில் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட்டிங்கில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்திருந்தது. பின் ஜேசன் ஹோல்டர் 57 ரன்களை அடித்து கொடுத்து அணியின் ரன்களை உயர்த்தினார்.
- மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களை எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்களை எடுத்திருந்தார்.
- இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் தனது இலக்கை அடைந்தது. 28 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 178 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது
- இந்த போட்டியில் முதன்முறையாக முழு நேர ஒருநாள் போட்டி கேப்டனாக களமிறங்கினார் ரோஹித் ஷர்மா. ஏற்கனவே தென் ஆப்ரிக்க தொடருக்கு அவரை கேப்டனாக அறிவித்திருந்தாலும், காயம் காரணமாக அவர் களமிறங்கவில்லை.
- ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து இஷான் கிஷான் தொடக்க ஆட்டக் காரராக களமிறங்கினார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 28 ரன்களை எடுத்திருந்தார்.
- இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 51 பந்துகளை எதிர்கொண்டு 60 ரன்களை எடுத்தார். அவரை தொடர்ந்து அதிகபட்ச ரன்களை எடுத்திருந்தார் சூரிய குமார் யாதவ். அவர், அவுட் ஆகாமல் 34 ரன்களை எடுத்திருந்தார்.
- இந்திய அணியின் 13ஆவது ஓவரில் ரோஹித் மற்றும் இஷான் கிஷனின் கூட்டணி உடைந்தது. 84 ரன்களை எடுத்திருந்தபோது ரோஹித் ஷர்மா அவுட் ஆனார்.
- இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய போட்டியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி. வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும், யுசி சஹல் 4 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
- மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டனான ஹோல்டர் ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்கள் என்ற இலக்கை நேற்றையை போட்டியில் தனது அரை சதத்தின் மூலம் அடைந்தார் அதன்பின் அவர் இந்தியாவின் பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட யுசி சாஹல் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை கடந்தார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளும் இதே ஆடுகளத்தில்தான் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி புதன்கிழமையன்றும், மூன்றாவது போட்டி வெள்ளியன்றும் நடைபெறவுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக டி20 போட்டிகள் நடைபெறும்.
பிற செய்திகள்:
- லதா மங்கேஷ்கர்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில்
- எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு'
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொகுசு படகு பயணத்தால் நெதர்லாந்தில் கிளம்பும் சர்ச்சை
- கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








