RR vs MI: விஸ்வரூபமெடுத்த மும்பை இந்தியன்ஸ் - சூறாவளி பந்து வீச்சு, சுனாமி பேட்டிங்கில் கதிகலங்கிய ராஜஸ்தான்

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் 2021 சீசனின் 51ஆவது போட்டி நேற்று அக்டோபர் 5, செவ்வாய்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இத்தனை நாள் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த மும்பை, பழைய பன்னீர் செல்வம் போல தன் ஃபார்முக்கு வந்து அனைத்து அணிகளையும் நிமிர்ந்து உட்காரச் செய்துள்ளது. என்ன நடந்தது?
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது. எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பவர் ப்ளே ஓவர்களுக்குள்ளேயே இருவரும் தலா 24 மற்றும் 12 ரன்களோடு பெவிலியன் திரும்பினர்.
அடுத்தடுத்து வந்த ராஜஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டர்களான சஞ்சு சாம்சன், சிவம் தூபே, க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோரை ஒற்றை இலக்க ரன்களில் வீழ்த்தி வழி அனுப்பி வைத்தது மும்பை.
மிடில் ஆர்டர் பேட்டர்களான டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாட்டியா மட்டுமே ஆறுதலளிக்கும் வகையில் தலா 15 மற்றும் 12 ரன்களைக் குவித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அனைத்து ராஜஸ்தான் பேட்டர்களும் ஒற்றை இலக்கங்களில் வீழ்ந்தனர்.
20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை மட்டுமே குவித்திருந்தது ராஜஸ்தான்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிக் கொண்டிருந்த லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜஸ்ப்ரீத் பும்ரா.
நேதன் கோல்டர் நைல் 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் கொடுத்து ஜெய்ஸ்வால், ஃபிலிப்ஸ், மில்லர் போன்ற 3 முக்கிய விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தை மும்பைக்கு சாதகமாக்கினார்.
அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் நீஷமும் சஞ்சு சாம்சன், சிவம் தூபே, ராகுல் திவாட்டியா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானின் ரன் ரேட்டை சிறையிலிட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
90 ரன்கள் என்பது எளிய ஸ்கோர் தான் என்றாலும், எப்படியும் 15 ஓவர்களாவது ஆடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, மும்பை அணி 8.2 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து, அனைத்து அணிகளின் வயிற்றிலும் கிளி கிளப்பிவிட்டது.
ஆம். 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களைக் குவித்து தன் வெற்றியை பலமாக, ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிர பதிவு செய்தது.
முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் நிதானமாக ஆடத் தொடங்கினர். ரோஹித் ரன்களைக் குவித்தாலும், இஷான் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தார்.
மூன்றாவது ஓவர் முதல் ஆட்டத்தில் மும்பை பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.
ராஜஸ்தானின் சேதன் சகாரியா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவர் மெய்டன் ஆனது. இஷான் கிஷனால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. அதே போல க்ளென் ஃபிலிப்ஸ் சில பவுண்டரிகளைத் தடுத்த விதம் அருமையிலும் அருமை. குறைந்த ரன்களை இலக்காக வைத்திருந்தாலும் ராஜஸ்தான் தன் தரப்பில் முழுமையாக முயற்சித்தது என்பதற்கு இவைகளே சாட்சி. ஆனால், ராஜஸ்தானின் முயற்சிகள், மும்பையை கட்டுப்படுத்தவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
2.3ஆவது ஓவரிலேயே ரோஹித் ஷர்மாவை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் தவறவிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் சற்றே தடுமாறிய இஷான் கிஷன், 4ஆவது ஓவர் முதல் ரன் இயந்திரமாக பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பார்சல் செய்தார். ஆட்டத்தின் முடிவில் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.
சேதன் சகாரியா வீசிய 2ஆவது ஓவரில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் தவித்த அதே இஷான் கிஷன், சேதன் சகாரியா வீசிய 8ஆவது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து துவம்சம் செய்தார்.
அடுத்து வந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானின் முதல் இரு பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி, தன் அரை சதம் கொண்டு மும்பைக்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார் இஷான் கிஷன்.
பழைய பன்னீர் செல்வமாய் வந்த மும்பை
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
ஐக்கிய அரபு எமிர்ரெட்ஸில் மீண்டும் தொடங்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசனில்,
சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகளுடனான ஐந்து போட்டியில், பஞ்சாப் உடனான போட்டியில் மட்டுமே வென்றது மும்பை.
சென்னையை அசால்டாக வென்ற ராஜஸ்தான், மும்பையையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அதிரடி காட்டி, அனைவரையும் அலறவிட்டிருக்கிறது மும்பை இந்தியின்ஸ் அணி.
தற்போது புள்ளிகள் பட்டியலில் 13 போட்டிகளில் 6-ல் வென்று 12 புள்ளிகளோடு 5ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தானை வீழ்த்தியதால் மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு இப்போதும் உயிர்ப்போடு இருக்கிறது.
பிற செய்திகள்:
- பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை
- இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை பெற இந்தியா தந்த ஆலோசனை
- மது குடித்த தாத்தா, 5 வயது பேரன் மரணம் - என்ன நடந்தது?
- பிரியங்கா மீது வழக்கு: லக்னெள விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்னா
- தன்பாலினத்தவர் இலக்கு வைக்கப்படுவதற்கு இலங்கையில் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












