IND Vs ENG 2-வது டெஸ்ட்: அதிரடி காட்டும் ரோஹித் -150 ரன்கள் குவிப்பு

IND Vs ENG 2-வது டெஸ்ட்: அதிரடி காட்டும் ரோஹித், மறுபுறம் மளமளவென சரியும் விக்கெட்டுகள்

பட மூலாதாரம், Twitter/BCCI

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 13, சனிக்கிழமை) காலை தொடங்கியது. டாஸை வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

ரோஹித் ஷர்மா அதிரடி

இந்திய அணி 182 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 132 ரன்களை எடுத்து களத்தில் நின்று ஆடிவருகிறார்.

முன்னதாக இரண்டாவது ஓவரிலேயே சுப்மன் கில் டக் அவுட் ஆனார். கடந்த 2019 அக்டோபரில், ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மா 212 ரன்களைக் குவித்தார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

அதன் பிறகு 2021 ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் 52 ரன்களை எடுத்தது தான் அவரது சமீபத்தைய அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இன்று, சென்னையில் நடந்து வரும் இந்த டெஸ்டில் 132 ரன்களைக் கடந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, ரன்களைக் குவித்துக் வருகிறார் ரோஹித் ஷர்மா.

IND Vs ENG 2-வது டெஸ்ட்: அதிரடி காட்டும் ரோஹித், மறுபுறம் மளமளவென சரியும் விக்கெட்டுகள்

பட மூலாதாரம், TWITTER/BCCI

ரோஹித் - புஜாரா இணை 113 பந்துகளை எதிர்கொண்டு 85 ரன்களைக் குவித்தது. மறுபக்கம் நங்கூரமிட்டு நின்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 58 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களுக்கு தன் விக்கெட்டைப் பறிகொடுத்துவிட்டார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகிவிட்டார். அஜிங்க்யா ரஹானே தற்போது 59 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

விக்கெட்டுகளைப் பறி கொடுக்காமல், மீண்டும் ஒரு வலுவான இணை அமைந்து, மெல்ல ரன்களைக் குவித்தால், முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ரன்களைக் குவித்தது போல, இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலேயே இந்தியா ரன்களைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் ரஹானே இணை சிறப்பாக ஆடி வருகின்றனர்..

70 ஓவர் முடிவில் இந்தியா 233 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் யார் மோதுவது என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய போட்டி என்பதால், இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளுமே இந்த தொடரில் தங்கள் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இந்தியாவை 3-க்கு 1 அல்லது 3-க்கு 0 அல்லது 4-க்கு 0 என்கிற கணக்கில் தோற்கடித்து இங்கிலாந்து தொடரை வென்றால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து தகுதி பெறும்.

இதுவே இங்கிலாந்தை 2-க்கு 0, 2-க்கு 1, 3-க்கு 0, 3-க்கு 1 என்கிற கணக்கில் தோற்கடித்து இந்தியா தொடரை வென்றால், இந்தியா தகுதி பெறும்.

இங்கிலாந்து அணியில் மாற்றம்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து தன் பேட்ஸ்மேன்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவில்லை.

ஜோஸ் பட்லருக்கு பதிலாக குறைந்த அனுபவம் கொண்ட பென் ஃபோக்ஸை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்கி இருக்கிறது.

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாக ஸ்டுவர்ட் ப்ராடுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் குறைந்த புதிய ஸ்பின்னர் டாம் பெஸ்-க்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக அனுபவமிக்க சுழற்பந்துவீச்சாளரான மொய்ன் அலி களம் கண்டிருக்கிறார். ஆகஸ்ட் 2019-க்குப் பிறகு இன்று தான் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் அலி.

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்சருக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்கு பதிலாக ஒலி ஸ்டோன் என்கிற புதிய வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கி இருக்கிறது இங்கிலாந்து.

இந்திய அணியில் மாற்றம்

IND Vs ENG 2-வது டெஸ்ட்: அதிரடி காட்டும் ரோஹித், மறுபுறம் மளமளவென சரியும் விக்கெட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

227 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்டில் தோல்வியுற்ற இந்தியாவும், பந்துவீச்சில் சில முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறது.

கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர்கள் அதிக ரன்களைக் கொடுத்தது, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

எனவே ஷபஸ் நதீமுக்கு பதிலாக அக்ஸர் படேல் விளையாடுகிறார். இது இவருடைய முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 13 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய மொஹம்மத் சிராஜ் களம் காண்கிறார். இந்தியாவின் பேட்ஸ்மேன்களில் எந்த மாற்றமும் இல்லை.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: