RR vs KXIP ஐபிஎல் 2020: 2 ஓவர்களில் 9 சிக்ஸர்கள் சார்ஜாவை அதகளப்படுத்திய ராஜஸ்தான் டெவாட்டியா

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் தொடரின் 9ஆவது போட்டி நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 224 ரன்களை அதிரடியாக கடந்து வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி.
ஐபிஎல் வரலாற்றிலேயே இது அதிகப்படியான ரன் சேசிங்காகும்.
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில், மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய அணியின் மயங்க் அகர்வால் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஐம்பது பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசி 106 ரன்களை எடுத்தார். பின் டாம் கரன் பந்தில் அவுட் ஆனார்.
அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் அடித்து 69 ரன்களை எடுத்தார்.
பஞ்சாப் அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.,
மூன்றாவது, நான்காவது விக்கெட்டுகளாக வந்த மேக்ஸ்வெல் 13 ரன்களையும், பூரன் 25 ரன்களையும் அடித்தனர்.
மொத்தத்தில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் என்ற கடினமான இலக்கை வைத்தனர்.
கடினமான இலக்கு
ராஜஸ்தான் அதிகப்படியான ரன்களை சேஸ் செய்த சாதனையை மட்டும் செய்யவில்லை. கடைசி ஐந்து ஓவரில் 86 ரன்களை எடுத்து மற்றுமொரு சாதனையும் புரிந்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் ஸ்டீவ் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களை எடுத்தார். நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் பெரிதும் பாராட்டப்பட்டாலும், டெவாட்டியாவின் சிக்ஸர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது.
அசத்திய டெவாட்டியா
இடதுகை பேட்ஸ்மேனான டெவாட்டியா 31 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
ஆனால் அவரின் ரன்களைக் காட்டிலும் அவர் அந்த ரன்களை எடுத்த விதம் குறித்துதான் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
தொடக்க பந்துகளில் தடுமாறிய டெவாட்டிய 18ஆவது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை அடித்து தள்ளி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதன்மூலம் 19ஆவது ஓவரிலேயே தனது இலக்கை எட்டியது ராஜஸ்தான் அணி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
நேற்றைய போட்டியை பொறுத்தவரை ராஜஸ்தான் அணி தனது சாதனையை தானே முறியடித்துள்ளது. இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு டெக்கன் சார்ஜஸ் அணிக்கு எதிராக 215 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது.
ராஜஸ்தான் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டி சென்னையுடன் விளையாடி வெற்றி பெற்றது. எனவே விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
.












