இந்தி திணிப்பு: ''இந்தியை விட சிறந்த மொழி எதுவும் இல்லை'' - கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம், ferrantraite
''இந்தியை விட சிறந்த மொழி எதுவும் இல்லை, இந்தி தான் நமது தாய்மொழி, இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்'' - ரஞ்சி கோப்பை ஆட்டம் ஒன்றில் வர்ணனையாளர் பேசிய இந்த கருத்துக்கள் சமூக வலைதளத்தில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதையடுத்து அவர்கள் மன்னிப்பு கேட்கும் சூழலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
என்ன நடந்தது?
கர்நாடகா மற்றும் பரோடா இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மொஹிந்தர் அமர்நாத்தின் தம்பி ரஜிந்தர் அமர்நாத் மற்றும் சுஷில் ஜோஷி இருவரும் வர்ணனையாளராக பணியாற்றியுள்ளனர்.
ஒரு இந்தி வர்ணனையாளராக சுனில் கவாஸ்கர் எப்படிச் செயல்படுகிறார் என ஒரு பேச்சு வந்தபோது, ''இந்தியாவில், ஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவே நமது தாய்மொழி. இந்தியை விட சிறந்த மொழி எதுவும் இல்லை'' என ரஜிந்தர் கூறினார்.
அதனை ஆமோதித்த சுஷில் தோஷி'' நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் ஆனால் இந்தி பேசுகிறோம் என சிலர் கூறுகிறார்கள் அதில் என்ன பெருமை இருக்கிறது? நீங்கள் இந்தியாவில் தான் வசிக்கிறீர்களா அப்படியெனில் நீங்கள் இந்தியாவின் தாய் மொழியை பேசித்தானே ஆக வேண்டும்'' என கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது மட்டுமின்றி சமூக வலைதளத்திலும் வைரலாக பரவியது. ''இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது, பெரும்பாலான மாநிலங்களுக்கு அவர்களது தாய் மொழி இருக்கிறது #இந்தி திணிப்பை நிறுத்து'' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
''பிசிசிஐ என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? இந்தியை திணிப்பதை நிறுத்துங்கள், தவறான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்'' என எம். ராமச்சந்திரா என்பவர் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
''பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு கன்னடா மற்றும் குஜராத்தி மொழிகளை தாய் மொழியாக கொண்ட கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் போட்டியில் இந்த வர்ணனையாளர் இந்தியை திணிக்கப் பார்க்கிறார்கள்'' என மது ஜவாலி என்பவர் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
மேலும் பலர் காட்டமாக எதிர்வினையாற்றியுள்ளார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

X பதிவின் முடிவு, 5

X பதிவின் முடிவு, 6
இந்நிலையில் அமர்நாத் மற்றும் தோஷி இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர். '' ஒரு மொழியை திணிப்பது எங்களது நோக்கம் அல்ல. இந்தியாவில் அனைத்து மொழிகளும் ஒரு அங்கம்தான். ஒவ்வொருவரும் தமது மொழியை பேசவே விரும்புவார்கள். என்னுடைய நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல'' என ரஜிந்தர் தெரிவித்துள்ளதாக ஸ்போர்ட்ஸ் ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: