ராயல் சேலஞ்சர்ஸ் ஆஃப் பெங்களூர்: விராட் கோலி அணி தொடர்ந்து ஆறாவது முறையாகத் தோல்வி

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூருவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தத் தொடரில் கோலியின் அணிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் உடனான இன்றைய தோல்வி தொடர்ந்து ஆறாவது முறையாக அடைந்த தோல்வியாகும்.
பெங்களூருவில் நடந்த இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொந்த மைதானத்திலேயே களம் கண்டாலும் பெங்களூரு அணி இன்று அதிகமாக ரன்கள் குவிக்கவில்லை.
அதிகபட்சமாக கேப்டன் கோலி, 33 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் காசிகோ ரபாடா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்சில் டெல்லி அணி 18.5 ஓவர்களிலேயே ஆறு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஏற்கனவே ஐந்து தோல்விகளைக் கண்ட பெங்களூரு அணி வீரர்கள் மைதானத்தில் சற்று தன்னம்பிக்கை குறைந்தே காணப்பட்டனர்.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN
டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அவற்றில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடக்கம்.
டெல்லி அணிக்காக அதிகபட்சமாக நவ்தீப் சைனி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












