ரோகித் சர்மா: ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதம் அடித்து சாதனை
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images
பஞ்சாபிலுள்ள மெகாலியில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
153 பந்துகளை சந்தித்த அவர் 12 சிக்ஸர்ஸ் மற்றும் 13 பவுண்டிரிகளுடன் மொத்தம் 208 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்தியா இந்தப் போட்டியில் 50 ஓவர்களுக்கு 392 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணி மதியம் மட்டை பிடித்து ஆடவுள்ளது.
முன்னதாக 2013ல் பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரட்டைச் சதம் (209) அடித்தார் . அடுத்த ஆண்டே இலங்கைக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 264 ரன் அடித்தார். தற்போது அவர் அடித்திருப்பது மூன்றாவது இரட்டைச் சதம்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியில் முதல்முறையாக இரட்டைச் சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு பலர் ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்திருந்தாலும் வேறு யாரும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரட்டைச் சதம் அடித்ததில்லை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












