தென் கொரிய அதிபர் மீதான ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: 29 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல்
ஊழல் புகாரால் தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹெ உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு, குற்றவிசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் , அந்நாட்டின் ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
தென் கொரிய அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர், சில ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தென் கொரிய நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டிய தன் தோழி ஒருவருக்கு தேவைக்கு அதிகமாக அரசியல் செல்வாக்கை பார்க் குன் ஹெ வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பதவி விலகிய இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய கட்சியை உருவாக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், அவர்கள் தென் கொரியாவில் பிறந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை தங்களின் புதிய கட்சியின் சார்பாக தென் கொரிய அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.








