இரவு விருந்து நிகழ்ச்சியில் ராகுல் காந்தி: பாஜக எழுப்பிய சர்ச்சை; காங்கிரஸ் தந்த விளக்கம்

ராகுல் காந்தியின் வைரலான வீடியோவின் ஸ்கிரீன்கிராஃப்

பட மூலாதாரம், SM VIRAL GRAB

படக்குறிப்பு, ராகுல் காந்தியின் வைரலான வீடியோவின் ஸ்கிரீன்கிராஃப்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் இருப்பது போன்ற வீடியோ குறித்து பாஜக தலைவர்கள் விமர்சனங்களை முன் வைத்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரு பார்ட்டியில் ராகுல் காந்தி ஒரு பெண்ணிடம் பேசுவது போன்று அந்த வீடியோவை பகிர்ந்த பாஜக தலைவர் கபில் மிஷ்ரா, இதில் யார் யார் உள்ளனர் என்று அடையாளம் காணுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் தனது ட்விட்டர் பக்கத்தில், "பார்ட்டிகள், விடுமுறை பயணங்கள், தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் இப்போது இந்த நாட்டில் புதிதல்ல. ஒரு குடிமகன் இதைச்செய்தால் பிரச்னை இல்லை. ஆனால், எம்.பி.யும், ஒரு அரசியல் கட்சியின் தலைவருமான ஒருவர் இதைச் செய்தால்…." என்று பதிவிட்டுள்ளார்.

"ராஜஸ்தான் பற்றி எரிகிறது. ஆனால் இவர் பார்ட்டியில் கலந்துகொள்கிறார். பார்ட்டி (காங்கிரஸ் கட்சி) அழிந்துவிடும், ஆனால் பார்ட்டி இப்படியே தொடரும். பார்ட்டி இப்படியே நடக்கும். பார்ட்டி டைம் தலைவர்," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஜாத் ஜெய்ஹிந்த் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பார்ட்டி வீடியோ குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

"ராகுல் காந்தி நமது நட்பு நாடான நேபாளத்திற்கு தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்சென்றுள்ளார். பிரதமர் மோதியைப் போல அழைக்கப்படாத விருந்தினராக ராகுல் காந்தி, பாகிஸ்தான் பிரதமரின் பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டச்செல்லவில்லை," என்று இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ராகுலின் வீடியோ தொடர்பான கருத்துக்கள்

"இன்று காலை நான் சோதித்தபோதுவரை, நம் உறவினர்கள், நண்பர்களின் திருமண விழாவில் நாம் சுதந்திரமாக கலந்து கொள்ளலாம் என்பதுதான் இந்த நாட்டின் சட்டமாக இருந்தது. நட்பு நாடான நேபாளத்துக்கு தன் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்றுள்ளார். இன்று வரை அந்த நாட்டிற்குச்சென்று நண்பர்களுடன் உறவாடி, கொண்டாட்டங்களில் பங்கேற்பது ஒரு குற்றமாக இல்லை.

ஆர்.எஸ்.எஸ்-க்கு பிடிக்காது என்பதால் நாளை முதல் குடும்பத்தினராக ஆவதும், திருமண விழாவில் பங்கேற்பதும் குற்றமாகலாம். எனவே தயவுசெய்து நீங்கள் ட்வீட் செய்து சொல்லுங்கள். நாங்கள் எங்கள் போக்கை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறோம்," என்று ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மாளவியா உட்பட மேலும் பலரின் கருத்துகளும் ராகுல் காந்தியின் வீடியோ தொடர்பாக வெளியாகியுள்ளன. இருப்பினும், பார்ட்டியில் ராகுல் காந்தி கலந்துகொண்டது குறித்த சலசலப்பு அர்த்தமற்றது என்று சிலர் கூறுகிறார்கள்.

"ராகுல் காந்தி வரவேற்பில் கலந்துகொண்டால் அதில் என்ன தவறு? சங்கிகள் ராகுல் காந்தியை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? சங்கிகள் ஏன் பொய்களை பரப்புகிறார்கள்? நாம் அனைவருமே தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்கிறோம்,"என்று தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் டுவிட் செய்துள்ளார்.

ராகுலின் வருகை குறித்து நேபாளி நாளிதழ்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், SM/RAHUL GANDHI

நேபாளத்தின் காத்மாண்டு போஸ்ட் இணையதளமும் ராகுல் காந்தியின் வருகை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி, ராகுல் காந்தியின் காணொளி தொடர்பான பா.ஜ.கவின் அமளிக்கு முன்பே வெளிவந்துள்ளது.

தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி நேபாளம் வந்துள்ளார். அவர் தனது நண்பர்களுடன் காத்மாண்டுவில் உள்ள மேரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார் என்றும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு அவர் நேபாளம் வந்தடைந்தார் என்றும் மே 2ம் தேதி வெளியான செய்தி தெரிவிக்கிறது. ராகுல் காந்தி மூன்று பேருடன் நேபாளம் வந்துள்ளார் என்று சில நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த இணையதளம் மேலும் கூறுகிறது.

ராகுல் காந்தியின் தோழியின் பெயர் சுமனிமா உதாஸ் என்றும் அவர் சிஎன்என் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர் என்றும் அவர் நீமா மார்ட்டின் ஷெர்பாவை மணக்கிறார் என்றும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெறும். திருமண வரவேற்பு நிகழ்ச்சி மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் பல முக்கிய இந்திய பிரமுகர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள நேபாளம் வரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேபாள வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், CONGRESS

பிபிசி நேபாளி சேவை, ராகுல் காந்தியின் வருகை குறித்து அறிய நேபாள வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டது.

"ராகுல் காந்தியின் வருகை அதிகாரபூர்வமானது அல்ல என்பதால், இந்த பயணம் குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. ராகுல் காந்தி இப்போது ஆட்சியில் இல்லை. எனவே வெளிநாடு செல்வதற்கு முன் அந்த நாடுகளுக்கு விஷயத்தை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை," என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சேவா லாம்சால் குறிப்பிட்டார்.

நேபாள காவல்துறைக்கும் ராகுல் காந்தியின் பயணம் தொடர்பான தகவல் ஏதும் இல்லை. நேபாள காவல்துறையின் மூத்த அதிகாரி கே.சி., "ராகுல் காந்தி சொந்த பயணமாக நேபாளம் வந்துள்ளார் என்பதைத் தவிர எங்களிடம் வேறு எந்தத் தகவலும் இல்லை" என்கிறார்.

ராகுல் காந்திக்கு, எந்த ஒரு அரசியல்வாதியையும் அரசு அதிகாரிகளையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராகுலின் நேபாள பயணத்திற்கு பாஜகவின் எதிர்ப்பு

ராகுல் காந்தியின் நேபாள பயணத்தை பாஜக விமர்சிப்பது இது முதல் முறையல்ல. 2018-ம் ஆண்டு ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றிருந்தார். அப்போதும் ராகுல் காந்தி, பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களால் குறி வைக்கப்பட்டார்.

ராகுல் காந்தியின் பயணத்தின் புகைப்படங்களும் காங்கிரஸால் பகிரப்பட்டன. ராகுல் காந்தியின் இந்த படங்கள் போலியானவை என்றும் அவை உண்மையில்லை என்றும் பாஜக தலைவர்கள் கூறினர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இருப்பினும், பாஜக தலைவர்களின் கூற்றுகள் தவறானவை என்றும், ராகுல் காந்தியின் புகைப்படங்கள் சரியானவை என்றும் உண்மைச் சரிபார்ப்புடன் தொடர்புடைய பல இணையதளங்கள் சுட்டிக்காட்டின.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :