அருணாச்சல இளைஞரை தேடும் இந்திய ராணுவம் - எந்த வேகத்தில் முயற்சி உள்ளது?

சீன ராணுவம்

பட மூலாதாரம், TWITTER@TAPIRGAO

படக்குறிப்பு, மிரம் தரோம்
    • எழுதியவர், திலீப் குமார் சர்மா
    • பதவி, பிபிசி இந்திக்காக

அசாமின் தேஜ்பூரில் உள்ள ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் இது குறித்து, "அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மிரம் தரோம், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டியதால் சீன ராணுவமான பிஎல்ஏவால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உடனடியாக பிஎல்ஏவை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டது. விதிமுறைகளின்படி, அவரைப் பற்றிய தகவல் அறியவும் அவரை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் சீன ராணுவத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

முன்னதாக, அருணாச்சலப்பிரதேசத்தின் பாஜக எம்பி தாபிர் காவோ, இந்தியாவின் எல்லைகுட்பட்ட அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து இந்த இந்திய இளைஞரைச் சீன ராணுவம் (பிஎல்ஏ) கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாஜக எம்பி ஜனவரி 19 அன்று ட்வீட்டும் செய்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள ஜிதோ கிராமத்தில் வசிக்கும் மிராம் தாரோம் என்பவர் தனது நண்பருடன் செவ்வாய்க்கிழமை சீனாவின் எல்லையை ஒட்டிய பகுதிக்கு வேட்டையாடச் சென்றுள்ளார்.

என்ன நடந்தது?

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அளித்த அப்பர் சியாங் மாவட்ட துணை ஆணையர் ஷாஷ்வத் சௌரப் பிபிசியிடம் கூறுகையில், "இந்தச் சம்பவம் ஜனவரி 18 மாலை நடந்தது, ஆனால் அது மிகவும் சிக்கலான பகுதி. எனவே காணாமல் போன வாலிபரின் நண்பரிடம் இருந்து சம்பவம் குறித்த முழுத் தகவலையும் பெற்றோம். அந்த இளைஞர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடித் திரும்பி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த முழு விவரமும் நேற்று மாலையே எங்களுக்குத் தெரிய வந்தது. காணாமல் போன இளைஞனை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது." என்றார்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த மாவட்ட துணை ஆணையர், "எல்லையோர கிராமத்தில் வசிக்கும் இவர்கள் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக இங்குள்ள மக்கள் வேட்டையாடச் செல்வார்கள். அந்த நேரத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்தது" என்கிறார்.

முந்தைய சம்பவங்கள்

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து இளைஞர்களை சீன ராணுவம் பிடித்துச் சென்றது.

ஆனால் இந்திய ராணுவத்தின் தலையீட்டிற்குப் பிறகு, சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு அனைத்து இளைஞர்களையும் சீன ராணுவம் விடுவித்தது.

அருணாச்சல இளைஞர்

பட மூலாதாரம், Dilip Sharma/BBC

இந்த பகுதியில் கடந்த வாரம்தான் மாவட்ட துணை ஆணையர் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஷாஷ்வத் சௌரப்.

"அருணாச்சலத்தைச் சேர்ந்த இளைஞர்களை முன்பும் சீன ராணுவம் பிடித்துச் சென்றதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால் சமீப காலமாக, குறிப்பாக இம்மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. மேலும் விவரங்களைத் திரட்டி வருகிறேன்." என்று ஷாஷ்வத் செளரப் கூறினார்.

சீன எல்லையை ஒட்டியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்திற்காக சமை தூக்கிகளாக பணிபுரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராணுவ வீரர்கள் எல்லையில் ரோந்து செல்லும்போது, உள்ளூர் கிராம மக்களை பலமுறை அழைத்துச் செல்கின்றனர்.

சீனாவை ஒட்டிய பல பகுதிகள் வழிநெடுகிலும் உள்ளன, அங்கு சீன மற்றும் இந்தியப் படைகள் பலமுறை நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.

சீன ராணுவம்

பட மூலாதாரம், PLA

படக்குறிப்பு, எல்லை கிராமத்தில் சீன ராணுவத்தினர்

எனவே உள்ளூர் இளைஞர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றிருந்தால் அதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம்.

இது தவிர, எல்லைக்கு அந்தப் பக்கத்தியில் சீனாவில் டைகின் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பலர் வசிக்கின்றனர், அவர்களது உறவினர்கள் இந்தியாவில் குடியேறியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இரு தரப்பிலிருந்தும் மக்கள் போக்குவரத்து இருந்தது. ஆனால் எல்லையில் சீனாவுடனான பதற்றம் அதிகரித்ததால், அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான 3,400 கிமீ நீளமுள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை (எல்ஏசி) இந்தியா சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது.

சமீப காலங்களில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே குறிப்பாக, இந்த எல்ஏசியி பகுதியில்தான், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: