உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய்

உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆஷா சிங்

பட மூலாதாரம், GAURAV SHARMA/BBC

படக்குறிப்பு, உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆஷா சிங்
    • எழுதியவர், சுசீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். அதில் இருக்கும் 125 வேட்பாளர்களில் 50 பேர் பெண்கள்.

வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், பிரியங்கா காந்தி குறிப்பாக பெண் வேட்பாளர்களைப் பற்றி குறிப்பிட்டு அவர்களைப் பற்றிய தகவல்களை வழங்கினார்.

காங்கிரசில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களில் ஒருவரின் பெயர் மிக முக்கியமானது.

2017ஆம் ஆண்டு நடந்த உன்னாவ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆஷா சிங்கிற்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இது தவிர சில பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஷா சிங் என்ன சொன்னார்?

பிபிசியிடம் பேசிய ஆஷா சிங், உன்னாவ் சதர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தாம் போட்டியிடுவதை உறுதி செய்தார்.

அவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தும் தகவல் அவருக்கு எப்போது கிடைத்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆஷா சிங், "பிரியங்கா காந்தி எங்களுக்கு உதவுகிறார். அவரது உதவியாளர் என்னை அழைத்து நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டார், அதற்கு நான் சரி என்றேன்," என்று குறிப்பிட்டார்.

"எனது போராட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. உன்னாவ் சதர் தொகுதியில் என்னை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்திக்கு நன்றி" என்ற ட்விட்டர் பதிவையும் அவர் வெளியிட்டார்.

"நாங்கள் எங்களுக்காகப் போராடுகிறோம், பிரியங்கா காந்தி எங்களை வேட்பாளராக்கியுள்ளார். அம்மா படிக்காததால் அதிகம் பேசமாட்டார்," என்று உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான அவரது மகள் பிபிசியிடம் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

உங்களுக்கு எப்படி காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது என்று ஆஷா சிங்கின் மற்றொரு மகளிடம் பிபிசி கேட்டபோது, "நாங்கள் அக்கட்சியின் உறுப்பினர்கள். காங்கிரஸ் அலுவலகத்துக்கு எப்போதுமே சென்றுகொண்டிருப்போம்," என்று கூறினார்.

"தேர்தலில் போட்டியிடுமாறு பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். அவர் எப்போதும் எங்களுக்கு உதவி செய்து வருகிறார்" என்றார் அவர்.

தேர்தல் பிரசார உத்தி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தேர்தலில் எப்படி போட்டியிடுவார்களோ, அதே போல நாங்களும் போட்டியிடுவோம். எங்கள் உன்னாவ் சட்டப்பேரவை தொகுதி மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்," என்றார்.

பிரியங்கா காந்தியின் அறிவிப்பு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள 125 தொகுதிகளில் 50இல் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதாக பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். "இவ்வளவு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியதற்காக பிரியங்கா காந்திக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. பெண்களுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகிறார். எங்களை தகுதியானவர்கள் என்று கருதி கட்சி வாய்ப்பளித்துள்ளது," என்று மற்றொரு வேட்பாளர் சோனாலி சிங் குறிப்பிட்டார்.

இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சி என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ஆனால் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் பெண்கள் எப்படி வலுவடைவார்கள்?

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த கேள்விக்குப் பதிலளித்த சோனாலி சிங், "பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள்," என்கிறார்.

"மாநிலத்தில் போராடி, புதிய அரசியலைக் கொண்டுவரும் வேட்பாளர்கள் இருக்கவேண்டும் என்று நாங்கள் முயன்றோம். இதில் 40 சதவிகிதம் பெண்கள், 40 சதவிகிதம் இளைஞர்கள் உள்ளனர். பெண் வேட்பாளர்களில் சில பத்திரிகையாளர்கள், ஒரு பெண் திரைக்கலைஞர், போராடும் பெண்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையில் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள் உள்ளனர்," என்று வேட்பாளர்களை அறிவித்தபோது பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.

ஆஷா சிங்கின் பெயரைக் குறிப்பிட்டு அவர் பற்றிய தகவலை அளித்த பிரியங்கா, "அவர் தனது போராட்டத்தைத் தொடர விரும்புகிறார். அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். தனது போராட்டத்தைத் தானே நடத்தவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,"என்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 % பெண்கள், 40% இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ப்ரியங்கா காந்தி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 % பெண்கள், 40% இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ப்ரியங்கா காந்தி கூறுகிறார்.

"உன்னாவில் யாருடைய மகளுக்கு பாஜகவால் அநீதி இழைக்கப்பட்டதோ, இப்போது அவர் நீதியின் முகமாக இருப்பார். போராடி வெற்றி பெறுவார்," என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இது தவிர, முக்கிய பெண் வேட்பாளர்களில் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த 'ஆஷா' (Accredited Social Health Activist) திட்ட பணியாளர் பூனம் பாண்டேவும் உள்ளார். அவரை போலீசார் தாக்கியதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட சதஃப் ஜஃபருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நடந்தது என்ன?

2017, ஜூன் 4 - வேலை பெறுவதற்கு உதவி கேட்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரை சந்திக்கச் சென்றதாகவும் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

2017, ஜூன் 11 - இதற்குப் பிறகு ஜூன் 11 அன்று சிறுமி காணாமல் போனார். அதன் பிறகு சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

2017, ஜூன் 20 - பாதிக்கப்பட்ட சிறுமி ஔரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார். மறுநாள் அவர் உன்னாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

2017, ஜூன் 22 - பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164ன் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கரின் பெயரை அந்த அறிக்கையில் குறிப்பிட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.

2017, ஜூலை 3 - வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர், பாதிக்கப்பட்டவர் டெல்லிக்கு வந்தார். போலீசார் மூலம் தான் சுரண்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது சகோதரர் அதுல் சிங் செங்கர் ஆகியோரின் பெயர்களை எப்ஐஆரில் சேர்க்குமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டார்.

2018, பிப்ரவரி 24 - பாதிக்கப்பட்டவரின் தாயார் முன்வந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 156(3) பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, உன்னாவ் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

2019, ஜூலை 28 அன்று, உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் கார் விபத்துக்குள்ளானது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 2019, ஜூலை 28 அன்று, உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் கார் விபத்துக்குள்ளானது.

2018, ஏப்ரல் 3 - குல்தீப் சிங் செங்கரின் சகோதரர் அதுல் சிங் செங்கர், சிறுமியின் தந்தையுடன் அடிதடியில் ஈடுபட்டார்.

2018, ஏப்ரல் 4 - இதற்குப் பிறகு உன்னாவ் காவல்துறையினர் சிறுமியின் தந்தையை ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

2018, ஏப்ரல் 8 - சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்வது தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத் இல்லத்தின் முன் பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயன்றார். இந்த வழக்கில் காவல்துறை அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதோடு, எப்ஐஆர் பதிவு செய்த பிறகு தாங்கள் துன்புறுத்தப்படுவதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

2018, ஏப்ரல் 9 - சிறுமியின் தந்தை காவல்துறையின் காவலில் இறந்தார்.

2018, ஏப்ரல் 10 - தந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவருக்கு 14 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

2018, ஏப்ரல் 11 - இந்த வழக்கு விசாரணையை சிபிஐ இடம் ஒப்படைக்க மாநில அரசு உத்தரவிட்டது.

2018, ஏப்ரல் 12 - சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை மாநில அரசு கைது செய்யுமா செய்யாதா என்று கேள்வி எழுப்பியது.

2018, ஏப்ரல் 13 - சிபிஐ, எம்எல்ஏவை விசாரணைக்காக தடுப்பு காவலில் வைத்தது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

2018, ஜூலை 11 - எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் பெயர் அடங்கிய, இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

2018, ஜூலை 13 - இந்த வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சிக்கவைத்ததாகக் கூறப்படும் வழக்கில் குல்தீப் செங்கர், சகோதரர் அதுல் செங்கர் மற்றும் சில காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குல்தீப் செங்கர், அதுல் செங்கர் உள்ளிட்ட 7 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

2019, ஜூலை 28 - பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு சித்திகள் மற்றும் வழக்கறிஞருடன் ராய்பெரேலிக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடைய கார் மீது டிரக் மோதியது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் இரண்டு சித்திகளும் இறந்தனர்.

சிறுமியின் பாதுகாப்பிற்காக மொத்தம் ஒன்பது பாதுகாப்புப் பணியாளர்கள் அளிக்கப்பட்டிருந்தனர். ஆனால் விபத்தின்போது அவருடன் ஒரு பாதுகாப்புப் பணியாளர் கூட இல்லை. இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு எம்.எல்.ஏ.வின் ஆட்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

2019, டிசம்பர் 16 - குல்தீப் சிங் செங்கர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

2019, டிசம்பர் 20 - இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2020, மார்ச் 4 - பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நீதிமன்ற காவலில் இறந்ததற்காகவும் குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

குல்தீப் சிங் செங்கர்

பட மூலாதாரம், Getty Images

குல்தீப் சிங் செங்கர் யார்?

தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில், செங்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2002 தேர்தலுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து காங்கிரஸ் வேட்பாளரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2007 வாக்கில் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.

2012ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் வெற்றி பெற்ற குல்தீப் சிங் செங்கர், 2017ல் பாஜக சார்பில் எம்எல்ஏ ஆனார். அதாவது, 2002ல் இருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக இருந்து வரும் அவர், தனது அரசியல் வாழ்க்கையில் உ.பி.யின் எல்லா முக்கியக் கட்சிகளிலும் இருந்துள்ளார்.

2019 டிசம்பரில் ஒரு டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதன் பிறகு அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க அறிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: