உன்னாவ் பெண்ணின் தாய் பேட்டி: "என் மகள் எப்படி இருக்கிறாள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்"

பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வல்லுறவு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரோடு பிபிசியின் திவ்யா ஆர்யா கண்ட நேர்காணலை கீழே வழங்குகின்றோம்.
கேள்வி: உங்கள் மகளுடைய நிலை எப்படியிருக்கிறது...
பதில்: கடந்த இரண்டு நாட்களாக அவளை பார்க்கவில்லை. வெளியே செல்லுமாறு கூறுகிறார்கள்.
கே: எப்போது கடைசியாக அவரை பார்த்தீர்கள்... அப்போது எப்படி இருந்தார்...
ப: கண்கள் மூடப்பட்டிருந்தன. அவளால் பேச முடியவில்லை. நலமுடன் இருக்கிறாளா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
கே: இந்த போராட்டத்தை முன்னெடுத்ததற்காக வருத்தப்பட்டீர்களா...

பட மூலாதாரம், FACEBOOK / KULDEEP SENGAR
ப: நாங்கள் போராடவிட்டால் கூட எங்களை அவர்கள் விடமாட்டார்கள். தற்போது முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்படி வரும்... எங்கள் குடும்பத்தில் மிஞ்சியிருப்பது சிறார்கள் மட்டுமே. ஆதரவளிக்க யாருமே இல்லை. எங்கு செல்வோம்.
கே: முதல்வர் வீட்டுக்கு எதிரே உங்கள் மகள் தீக்குளிக்க முயன்றாரே...
ப: வீட்டில் அனைவரும் அப்படி செய்யலாம் என்றே நினைத்தோம். நீதி கிடைக்காவிட்டால், அனைவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என எனது மகள் கூறினாள். எங்களை ஆதரிக்க யாருமே இல்லாதபோது வேறு என்ன செய்ய முடியும்?
கே: அவரை தடுக்க முயன்றீர்களா..
ப: இல்லை. செய்யவில்லை. நீ சாவதாக இருந்தால் அனைவரும் உன்னுடன் சாகிறோம் என்றோம்.
கே: குல்தீப் கைதுக்குப் பிறகு, நிம்மதி அடைந்தீர்களா?
ப: நிம்மதியா... எனது கணவர் இறந்து விட்டார். தனது குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள், மனைவி என அனைவரையும் குல்தீப்பால் பார்க்க முடிகிறது. ஆனால், இறந்துபோன எனது குடும்பத்தார் திரும்பி வரப்போவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
அவர்களை எங்களால் பார்க்கவும் முடியாது. எப்போதும் அச்சத்துடன் வாழ்கிறோம். ஆனால், வாழ்ந்தாக வேண்டும். எங்களை கொல்ல வேண்டுமானால், அவர்கள் நிச்சயம் கொல்லத்தான் போகிறார்கள் என்ற மனநிலையுடன்தான் வாழ்கிறோம். அதற்காக அன்றாடம் வாழாமல் இருக்க முடியாது. இதற்குமேல் மோசமாக என்ன நடந்து விடப்போகிறது?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













