இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு மாற்ற இலக்கு: கருத்துகளை திரும்பப் பெற்ற பாஜகவின் தேஜஸ்வி சூர்யா

பட மூலாதாரம், BANGALORE NEWS PHOTOS
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய இளைஞரணித் தலைவரும் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு மாற்றுவது குறித்த பேசியது சர்ச்சையான பின்னர், தமது கருத்துகளை நிபந்தனையின்றித் திரும்பப்பெறுவதாகக் கூறியுள்ளார்.
இந்து மதத்தினர் மற்றும் மதத் தலைவவர்கள், இந்து மதத்தை விட்டு வேறு மதங்களுக்குச் சென்றவர்களை மீண்டும் இந்து மதத்துக்குள் அழைத்து வந்து, இந்து மதம் தழைக்கப் பணியாற்ற வேண்டுமெனக் கூறினார். இப்பணிகள் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் நடக்க வேண்டுமென்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் டிசம்பர் 25 அன்று பேசியிருந்தார்.
தேஜஸ்வி சூர்யா என்ன பேசினார்?
"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கட்டாயத்தின் பேரிலோ, ஏமாற்றப்பட்டோ, அச்சுறுத்தப்பட்டோ, ஆசைகாட்டியோ இந்துக்கள் தங்கள் மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையை சமாளிக்க ஒன்றுதான் தீர்வு. பல்வேறு சமூக பொருளாதார அரசியல் காரணங்களுக்காக தங்கள் மதத்திலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் தங்கள் தாய் மதத்துக்குள் அழைத்து வருவது மட்டுமே ஒரே வழி" என சூர்யா பேசினார்.
"அது சாத்தியமா என்று கருதினால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அது இயற்கையாக நடக்காது. நாம்தான் பெரு முயற்சி எடுத்து நம் மரபணுவில் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.
டிசம்பர் 25ஆம் தேதி, கர்நாடக மாநிலம் உடுப்பி நகரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் தேஜஸ்வி சூர்யா பேசிய ஒரு மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
"ஒவ்வொரு கோயில் மற்றும் மடத்துக்கும் ஆண்டுக்கு இத்தனை பேரை இந்து மதத்துக்கு திரும்ப அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த விழாவுக்காக நாம் பல மக்களை இந்து மதத்துக்கு அழைத்து வந்தோம்.
திப்பு சுல்தான் காலத்தில் மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்துக்கு அழைத்து வந்ததைக் கொண்டாடும் வகையில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய தேசம் மீண்டும் பிறக்கும்." என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
சூர்யா கூறுவது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதைப் போல் உள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் ஹரித்வாரில் ஓர் இந்து சாமியார்களின் கூட்டத்தில் மற்ற மதத்தினர் குறித்து வெறுப்புப் பேச்சு பேசியதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அரேபியாவிலிருந்தோ ஜெருசலேமிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. இனி இந்துக்கள் யாரும் இந்து மதத்திலிருந்து வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்துக்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கும் பணியில் இது பாதிதான். மீதி பாதி இன்னும் தீர்க்கப்படவில்லை என்று தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டார்.
அதற்கு அவர் கூறும் காரணங்கள் மிக எளிதானது.
"மதம் மாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? இது குறித்து நாம் முன்பே ஆலோசித்துள்ளோம். தேர்தல் வரும் போது, அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் குறித்து விவாதித்துள்ளோம். தற்காலிகமாக அவர்களின் எண்ணிக்கையையும் வலிமையையும் குறைக்க, தொகுதி வரையறைகளில் பரிந்துரை செய்கிறோம், ஆனால் அது ஒரு வலுவான தீர்வல்ல. நம்மால் பிரச்னையை ஒத்திவைக்கத்தான் முடிகிறதே ஒழிய, தீர்வு காண முடியவில்லை. இந்து தர்மமும் இந்து சமூகமும் தழைக்க வேண்டுமானால் அரசியல் அதிகாரம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கைதான் ஜனநாயகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது, எனவே நமக்கு வேறு வழியில்லை," என்று கூறினார்.
அப்பிரச்னையைத் தீர்க்க, நம் சொந்த ரத்தங்களை மீண்டும் இந்து மதத்துக்கு, உண்மயான நம்பிக்கைக்கு அழைத்து வருவதுதான் ஒரே வழி, அதை நாம் செய்தே ஆக வேண்டும் என்று கூறினார் தேஜஸ்வி சூர்யா.
"இந்து மதம் மட்டுமே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தை எதிர்கொண்டு பிழைத்த மதம். உலகின் பல பகுதிகளில் பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இந்து மதத்தில் கோடிக்கணக்கான கடவுளர்கள் இருக்கிறார்கள், ஆனால் இஸ்லாத்திலும், கிறிஸ்துவத்திலும் ஒரேயொரு கடவுள்தான் இருக்கின்றனர். இஸ்லாத்தில் அவர்கள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் காஃபிர்கள் என்றும், கிறிஸ்துவ மதத்தில் பிறரை மத நம்பிக்கையற்றவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இரு மதங்களும் உருவ வழிபாட்டை அழிக்க விரும்பின" என்று பேசினார்.
மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை இஸ்லாமிய இளைஞர்கள் கொண்டாடவில்லை என்றும், அவர் இந்து மதப் பெரியவர்களைச் சந்தித்தது மற்றும் மாணவர்களை பகவத் கீதையைப் படிக்க அறிவுறுத்தியதால் அவர்கள் கலாமை கொண்டாடவில்லை என்று குற்றம்சாட்டினார் தேஜஸ்வி சூர்யா.
இந்தியாவில் ஷிரிடி சாய் பாபா பரவலாக வழிபாட்டுக்குரியவராக இருக்கிறார். அவர் ஓர் இஸ்லாமிய ஃபக்கிர் என்பதை அனைவரும் அறிவர், அவரை ஓர் இஸ்லாமியர் தொழுவதைப் போன்று நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"இப்போது நம் எதிரி யார் என்று நமக்குத் தெரியும், நாம் என்ன எதிர்வினையாற்ற வேண்டும் தெரியுமா... பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை என்ன மாதிரியான தேர்தலாக இருந்தாலும், யார் வேட்பாளராக இருந்தாலும், வாக்களிக்க இருப்பவர்கள் இந்துக்களை பாதுகாக்கும் திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். 2014ஆம் ஆண்டுக்கு முன் மதச்சார்பின்மை கட்சிகள் மசூதிகளுக்குச் செல்ல போட்டியிட்டன. பலர் தாடி கூட வளர்த்தனர், மெஹந்தி இட்டுக் கொண்டனர். 2014க்குப் பிறகு தான், இந்துக்களை பாதுகாக்கவில்லை எனில் நீங்கள் தேர்வு செய்யப்படமாட்டீர்கள் என்கிற ஒரு தெளிவான விஷயத்தை இந்துக்கள் உரக்கக் கூறினர்," என்று பேசினார்.
"இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையில் சண்டை என்றால் அவ்வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க நீதிமன்றங்கள் அஞ்சின. ராமர் கோயில் வழக்கில் கூட நீதிமன்றம் தீர்பளிக்க அஞ்சியது. இந்துக்களின் விழிப்புணர்வால் உச்ச நீதிமன்றம் துணிச்சல் பெற்று ராமர் கோயில் விவகாரத்தில் தீர்ப்பளித்தது," என்று குறிப்பிட்டார்.
இவையனைத்தும் இந்து அதிகாரத்துக்கு வந்ததால் நடந்தது. எனவே அந்த விஷயத்தில் எதுவுமே பேரம் பேசுவதற்கு இல்லை. இந்து இனம் வாழ இந்துக்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்கிற விஷயத்தில் மாற்றுக் கருத்து இல்லை. இந்து இனம் தழைக்க, இந்த விஷயம் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்" என்று சூர்யா கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இத்தனை சர்ச்சையான கருத்துகளை டிசம்பர் 25ஆம் தேதி பேசிவிட்டு, தான் பேசிய கருத்து வருந்தத்தக்க வகையில் தவிர்க்கக் கூடிய சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாகவும், எனவே எந்தவித நிபந்தனையுமின்றி தன் கருத்துகளை திரும்பப்பெறுவதாக தன் டுவிட்டர் பக்கத்தில் டிசம்பர் 27ஆம் தேதி தெரிவித்துள்ளார் தேஜஸ்வி சூர்யா.
பிற செய்திகள்:
- அன்னை தெரசா தொடங்கிய சேவை அமைப்பு வெளிநாட்டு நிதி பெற இந்திய அரசு தடை
- "புழைச்சதே பெரிசு, ஒன்னும் மிஞ்சலை" - அப்பளம் போல நொறுங்கிய திருவொற்றியூர் கட்டடம் - கள நிலவரம்
- கொரோனா தடுப்பூசி: 15-18 வயதுடையோருக்கு எப்போது போடலாம்? - முக்கிய தகவல்கள்
- உத்தராகண்ட் தலித் பெண் சமைத்த உணவை நிராகரித்த மாணவர்கள் - களத்தில் என்ன நடந்தது?
- நடிகர் வடிவேலு: "நல்லா தான்பா இருக்கேன் - பூரா வதந்தியா பரப்புறாங்க"
- குட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








