நடிகர் வடிவேலு: "நல்லா தான்பா இருக்கேன் - பூரா வதந்தியா பரப்புறாங்க"

வடிவேலு

பட மூலாதாரம், Vadivelu

படக்குறிப்பு, நடிகர் வடிவேலு
    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

எனது உடல்நிலை பற்றி சில ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் வேலு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருந்து தாயகம் திரும்பிய நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் இசைக்கோர்ப்புக்காக இயக்குநர் சுராஜ், நடிகர் வடிவேலு, லைகா புரொடக்‌ஷன்ஸ் சிஇஓ தமிழ்க்குமரன் ஆகியோர் லண்டன் சென்றனர். இது குறித்தான அதிகாரபூர்வமான தகவலை படக்குழு சமூக வலைதளங்களில் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து திரும்பிய போது நடிகர் வடிவேலு, சுராஜ் ஆகியோருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகி இருப்பது தெரிய வந்தது.

மேலும், ஓமிக்ரான் என சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் வடிவேலு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள நடிகர் வடிவேலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன், 'ஹலோ, நல்லா இருக்கேன்பா' என்ற வழக்கமான உற்சாக குரலிலேயே ஆரம்பித்தார்.

வடிவேலு

பட மூலாதாரம், Vadivelu

என்ன ரொம்ப சீரியசா இருப்பதாக தகவல் வருகிறதே என்று கேட்டதும் விரிவாகவே அது பற்றி பேசினார் வடிவேலு.

"ஒன்னுமில்ல, சிறிய அளவில் 1.2 என்ற அளவில்தான் வைரஸ் பாதிப்பு. அதனால் இருமல் வந்துவிட்டது. அதற்குள் நான் கண் முழிக்கவில்லை. கவலைக்கிடமாக உள்ளேன் என தவறான செய்திகள் பரவ ஆரம்பித்து விட்டன," என்றார் வடிவேலு.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"அந்த செய்திகளைப் பார்த்து என் மனைவிக்கு பயங்கர வருத்தம். 'இப்படி எல்லாமா செய்தி போடுவார்கள்? நன்றாகத்தானே பேசி கொண்டிருக்கிறீர்கள்?' என அது போல செய்தி பரப்பியவர்களை திட்ட ஆரம்பித்து விட்டார். அந்த செய்திகள் எதையும் நம்ப வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். இன்றோ நாளையோ இன்னும் இரண்டு நாட்களில் பரிசோதனை முடிந்து நான் வீட்டுக்கு திரும்பி விடுவேன். பிறகு என்ன? திட்டமிட்டபடி அடுத்த மாதத்தில் இருந்து 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படப்பிடிப்பு தொடங்கும். வழக்கமான உற்சாகத்துடன் ரசிகர்களை மீண்டும் திரையில் சந்திப்பேன்" என்கிறார் நம்பிக்கையாக.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: