காற்று மாசுபாடு: தீபாவளி பட்டாசை தொடர்ந்து திணறும் டெல்லி - மோசமான காற்றின் தரம்

காற்று மாசுபாட்டில் திணறும் டெல்லி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, காற்று மாசுபாட்டில் திணறும் டெல்லி

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியது .

பட்டாசு வெடிக்க டெல்லியில் தடை இருந்த போதும், தீபாவளியன்று மாலை (நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை) டெல்லி நகரம் முழுக்க பரவலாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். அது டெல்லி நகரத்தின் காற்று மாசுபாட்டை மேலும் மோசமாக்கியது.

வாகன மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் உமிழ்வுகள், தூசு, கடுமையான வானிலை போன்ற பல காரணிகளால், உலகிலேயே மிகுந்த காற்று மாசுபாடான நகரமாக இடம்பிடித்துள்ளது டெல்லி.

டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களின் வயல் வெளிகளை சுத்தம் செய்ய நிலத்தை எரித்துவிடுவதால், குளிர் காலத்தில் காற்றின் தரம் நச்சுத்தன்மை கொண்டதாகிறது.

அதே காலகட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கப்படுவதால் காறு மாசுபாடு மேலும் மோசமடைகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் காற்று வீசும் வேகம் குறைவாக இருப்பதால், காற்று மாசுபாடு துகள்கள் வளிமண்டலத்தின் கீழடுக்கிலேயே தங்கிவிடுகின்றன.

அரசின் காற்றுத் தர கண்காணிப்பு அமைப்புகளின் கணக்குப் படி, வெள்ளிக்கிழமை, டெல்லியின் சில பகுதிகளில் ஆபத்தான காற்று மாசுபாடு 999ஆக இருந்தது. இது தான் காற்று மாசுபாட்டை கணக்கிட வைக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றுத் தர குறியீட்டின் படி, 0 முதல் 50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாகவும், 51 முதல் 100 இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமாக இருப்பதாகவும் பொருள்.

இந்த ஆண்டு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை செய்தது டெல்லி அரசு. ஆனால் அது நகரவாசிகளுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.

பட்டாசு வெடித்து கொண்டாடும் குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடும் குழந்தைகள்

வெள்ளிக்கிழமை காலை டெல்லி நகரத்தை ஒரு அடர்த்தியான புகை மூட்டம் போர்த்திக் கொண்டது. மக்கள் பலரும் தொண்டையில் ஒரு வித எரிச்சல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக கூறினர்.

புகை மூட்டத்தால் சாலையில் வாகனங்களை சரியாக ஓட்ட இயலாததால் நெடுஞ்சாலையில் ஆறு விபத்துகள் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட பலரும் காயம்பட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டது.

பலரும் புகைமூட்டமான டெல்லி தொடர்பாக, தங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

காற்று மாசுபாடு குறித்து ஒரு பக்கம் விவாதித்துக் கொண்டிருக்க, இது இந்துக்களின் பண்டிகைகளை இலக்கு வைப்பதற்கான முயற்சி என மற்றொரு பக்கம் இது அரசியலாக்கப்பட்டது.

தீபாவளிப் பண்டிகையின் ஓர் அங்கம் தான் இந்த பட்டாசுகள் எல்லாம் என ஒருசாரார் வாதிட்டனர். மேலும், டெல்லி ஆண்டு முழுவதும் காற்று மாசுபாட்டை எதிர்கொண்டு வரும் போது, காற்று மாசுபாட்டுக்கு தீபாவளி பட்டாசுகளை குறை கூற முடியாது என தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ஒரு ட்விட்டர் பயனர் "எங்கள் பண்டிகைகளை எப்படி கொண்டாட வேண்டும் என நாங்கள் முடிவு செய்து கொள்வோம்" என பதிவிட்டிருந்தார்.

இன்னும் பலர் பட்டாசுகளை வெடிப்பது போன்ற படங்களை ட்விட்டரில் பதிவிட்டு இப்படித்தான் தீபாவளி திருநாளைக் தாங்கள் கொண்டாட விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் நகரத்தின் காற்றுத் தரம் அபாயகர நிலையிலிருந்து 'மிக மோசம்' என்கிற நிலைக்கு சற்றே முன்னேறலாம் என அதிகாரிகள் கூறினர்.

வெள்ளிக்கிழமை டெல்லி நகரத்தின் காற்று மாசுபாட்டுக்கு விவசாய நிலங்களை சுத்தம் செய்ய எரித்துவிடுவது 35 சதவீதம் பங்களித்ததாகவும், இது இந்த வார இறுதியில் அதிகரிக்கலாம் என்றும் அரசின் காற்று தர கண்காணிப்பு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தான் உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு பிரச்சனை உள்ளது. உலக அளவில் அதிகம் காற்று மாசுபாடு கொண்ட 30 நகரங்களில் 22 நகரம் இந்தியாவில்தான் உள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு மேல் நச்சுத்தன்மை கொண்ட காற்றால் உயிரிழக்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு டெல்லியில் பிஎம் 2.5 எனப்படும் காற்று மாசுபாட்டுத் துகளின் அளவு, வரலாறு காணாதாளவுக்கு அதிகமாக இருந்தது. அந்த அளவு உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்ட பாதுகாப்பு அளவை விட, 14 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் வாழும் 48 கோடி மக்கள் மிக மோசமான காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதாக சமீபத்தைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

டெல்லி நகரத்தில் காற்று மாசுபாடு உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகள் படி குறைக்கப்பட்டால், டெல்லியில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கலாம் என கூறுகிறது அந்த ஆய்வு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :