நரேந்திர மோதி போப் பிரான்சிஸை சந்திக்க டாக்சியில் சென்றாரா? வாட்டிகனில் நடந்தது என்ன?

நரேந்திர மோதி & இத்தாலி பிரதமர் மரியோ டிராகி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி & இத்தாலி பிரதமர் மரியோ டிராகி

கடந்த சனிக்கிழமை, போப் பிரான்சிஸை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அவரைச் சந்திக்கச் செல்லும் போது அல்லது அவரை சந்தித்துவிட்டு திரும்பும் போது நரேந்திர மோதி பயன்படுத்திய வாகனம் ஒரு டாக்ஸி என்றும், அதன் பின்புறத்தில் டாக்ஸி தொடர்பான வாக்கியங்கள் இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் படங்களோடு பரவிக் கொண்டிருக்கின்றன. அவை உண்மையா?

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அது தவறானது என சில ஊடகங்கள் செய்தியும் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், தன் ட்விட்டர் பக்கத்தில், மோதி டாக்ஸி வாகனத்தில் போப்பைச் சந்தித்தார் என்கிற செய்தி போலியானது என்று கூறும் ஓர் ஊடகத்தின் செய்தியைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமான தருணம் இது. இந்திய பிரதமருக்கு ஓர் அரசு வாகனத்தைக் கூட இத்தாலிய அரசு வழங்கவில்லை, இந்திய பிரதமர் மோதி டாக்ஸியில் பயணிக்க வேண்டி இருந்தது. அவருக்கு ஏன் ஓர் அரசு வாகனத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை" என ட்விட்டரில் ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் மோதி பயணித்த காரின் மேல் புறத்தில் டாக்ஸி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது போல் ஒரு படத்தையும், காரின் பின் புறத்தில் (La prima App in Italia per i Taxi) இத்தாலியின் முதல் டாக்ஸி செயலி என்று பொருள்படும் வாசகம் இடம் பெற்றிருப்பது போல ஒரு படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"உண்மையிலேயே நரேந்திர மோதி டாக்ஸியில்தான் வாடிகன் நகரத்துக்கு பயணித்தாரா? அவர் பாதுகாப்பு குறித்த பிரச்னைகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது இது சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது" என மற்றொரு ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

உண்மையில் ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்ட ட்விட்டர் பதிவு மற்றும் படங்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி போப்பை சந்தித்த பிறகு, டாக்ஸி வாகனத்தில் அழைத்து வரப்படவில்லை என்பது தெளிவாகிறது.

பொதுவாகவே, ஒரு நாட்டின் தலைவரை வரவேற்கும் நாடு சகல பாதுகாப்பு வசதிகளோடுதான் அழைத்துச் செல்வர். ஒரு நாட்டின் தலைவருக்கு பாதுகாப்பு காரணத்தினால் ஏதாவது ஆகிவிட்டால், அது அவரை வரவேற்கும் நாட்டுக்கு சர்வதேச அரங்கில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, டாக்ஸி வாகனத்தில் பயணிக்கவில்லை. அப்படி இணைய தளத்தில் உலவும் படங்கள் போலியானவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :