ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுதலை: போதை வழக்கில் கைதாகி 4 வாரத்துக்குப் பின் வெளியே வருகிறார்

பட மூலாதாரம், INSTAGRAM
சில வாரங்களுக்கு முன் ஒரு சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில், போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் சுமார் நான்கு வார காலம் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் .
சிறையிலிருந்து வெளியேறிய ஆர்யன் கான், அவருக்காக காத்திருந்த காரில் ஏறி தன் வீட்டுக்குப் புறப்பட்டார்.
23 வயதான ஆர்யன் கானுக்கு, மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சிறை நிர்வாகத்துக்குத் தேவையான ஜாமீன் ஆவணங்களைக் கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
சனிக்கிழமை (அக்டோபர் 30ஆம் தேதி) காலை 5.30 மணிக்கு ஆவணங்கள் முறையாக சிறை நிர்வாகத்திடம் சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்யன் கான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆர்யன் கான் சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை ஏ என் ஐ முகமை உறுதி செய்துள்ளது.
ஆர்யன் கான் தரப்பில் மோதி அரசில் 2014- 2017ஆம் ஆண்டு வரை அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி வதாடினார். பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணைப் பத்திரத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி போதை மருந்து தடுப்புப் பிரிவினரால் சொகுசுக் கப்பலில் வைத்து ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஆர்யன் கான் முதல் குற்றாவாளியாக சேர்க்கப்பட்டார்.
ஆர்யன் கானிடமிருந்து எந்த வித போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றாலும், அவருக்கு சட்ட விரோதமான போதை மருந்து கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவரது வாட்ஸ் ஆப் சாட் பரிமாற்றங்கள் காட்டுவதாக நீதிமன்றத்தில் வாதாடியது என்சிபி என்றழைக்கப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு.

பட மூலாதாரம், Getty Images
ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தாமிசா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்யன்கானுக்கு இதற்கு முன் இரு முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு, மறுக்கப்பட்டது.
ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகை வழங்குவது, சட்ட விரோத நடவடிக்கைகளில் இனி ஈடுபடாமல் இருப்பது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பது, சாட்சியங்களை கலைக்காமல் இருப்பது, பாஸ்போர்ட் ஆவணத்தை சிறப்பு நீதிமன்றத்திடம் சமர்பிப்பது, இவ்வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடாமல் இருப்பது, மும்பை நகரத்தை விட்டு வெளியே செல்வது என்றால் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டுச் செல்வது என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது நீதிமன்றம்.
மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் இரண்டு மணிக்குள் தங்கள் இருப்பை பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளது நீதிமன்றம்.
இது போக வழக்கு விசாரணையில், நாள் தவறாமல் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும், வழக்கு விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது நீதிமன்றம். இந்த விதிமுறைகளை மீறினால், ஜாமீனை ரத்து செய்ய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.
பிற செய்திகள்:
- தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்க களம் இறங்கியுள்ள ராமநாதபுரம் சிறார்கள்
- பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி?
- “பணக்கார நாடுகள் தங்களின் தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” இந்தோனீசிய அதிபர்
- ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரகசியப் போர் தொடுக்கும் தாலிபன்
- பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எவ்வாறு செயல்படுகிறது?
- ’என்னங்க சார் உங்க சட்டம்’: சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












