தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு இழுபறியால் வெடிக்கும் உள்கட்சி மோதல்

காங்கிரஸ்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் தயாராகி வரும் நிலையில் அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன், கட்சித் தொண்டர்களின் போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களைக் கேட்டு, தி.மு.க மிகக் குறைவான இடங்களையே கொடுக்க முன் வந்த நிலையில், சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடந்தபோது, தங்களை தி.மு.க. நடத்தியவிதம் குறித்து மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கண்ணீர் விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அதே சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் போராட்டங்களைப் பார்த்தால் மு.க. ஸ்டாலின் கண்ணீர் விட்டுக் கதறுவார் போலிருக்கிறது.

சத்தியமூர்த்தி பவனின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குழுவினர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணு பிரசாத் போராடிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் கே.எஸ். அழகிரிக்கு ஆதரவாக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரஞ்சன் குமார் போட்டிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். சத்தியமூர்த்தி பவனின் உள்ளே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ்

சமூக வலைதளங்களிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உள்கட்சி விவகாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் கடுமையான கருத்துகளை தமது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசிற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டதிலிருந்தே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. மகிளா காங்கிரசின் மாநில முன்னாள் தலைவராக இருந்த ஜான்சி ராணி நிலக்கோட்டைத் தொகுதியில் பல வருடங்களாகப் பணியாற்றிவந்தார். ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தி.மு.கவிடமிருந்து தொகுதிகளைக் கேட்டுப்பெறும்போது அந்தத் தொகுதியை காங்கிரஸ் கேட்கவில்லை. இதனால் அந்தத் தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசார்
படக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசார்

நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தனது பாட்டி பொன்னம்மாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவந்த அந்தத் தொகுதியை கட்சித் தலைமை கேட்டுப் பெறாததில் கடும் அதிருப்தியடைந்த ஜான்சி ராணி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். பண பலம் உள்ளவர்களுக்கே கே.எஸ். அழகிரி தொகுதிகளை ஒதுக்கிவருவதாகவும் அப்படியானால் மற்றவர்கள் எதற்காக கட்சியில் பணியாற்ற வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். நிலக்கோட்டையிலும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தார். தனது போராட்டம் குறித்து பிபிசியிடம் பேசிய விஷ்ணுபிரசாத், "சோளிங்கர் தொகுதியில் போன மாதம் வேறு கட்சிக்குச் சென்ற முனிரத்னத்தை அழைத்து, வேறு கட்சிக்கு செல்லாதீர்கள் என்று கூறி சீட் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? 2016ல் அவருக்கு சீட் கொடுத்துதான் தோற்றார்கள். 2011ல் அதிருப்தி வேட்பாளராக நின்றபோதும் தோற்றார். ஏன் திரும்பத் திரும்ப அவருக்கே கொடுக்க வேண்டும். ஏற்கனவே மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போவதைப் பார்த்து விட்டோம். இப்படி பலவீனமானவரை நிறுத்தினால் அவர் அமித் ஷாவின் பேரத்திற்கு பணிய மாட்டார் என்பது என்ன நிச்சயம்?" என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மேலும், காங்கிரஸ் மாநில தலைமை இடங்களை விலை பேசி விற்பதாகத் தெரிவித்தார். தொகுதிகளை எப்படி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்பதில் ஒரு வெளிப்படைத் தன்மையோ, முறையோ இல்லை என்றும் குற்றம்சாட்டினார் விஷ்ணுபிரசாத்.

"வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மேலூரில் தனது மாமனாருக்கு சீட் கேட்கிறார். அவருக்கும் அந்தத் தொகுதிக்கும் என்ன தொடர்பு? ஏன் மேலூரில் கட்சிக்காரனே இல்லையா? எங்கள் ஆலோசனைகளைச் சொன்ன பிறகும் இதுதான் நடக்கிறது" என்கிறார் அவர்.

மாமனாருக்கு சீட் கேட்கும் குற்றச்சாட்டை விருதுநகரின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை குறி வைத்தே விஷ்ணுபிரசாத் முன்வைத்திருந்தார். இதையடுத்து விஷ்ணு பிரசாதிற்குப் பதிலடியாக "தன் தந்தையால் MLA, இப்ப MP பதவி வாங்கியவர்கள் - இப்ப மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பா.ஜ.க. + அ.தி.மு.கவுக்கு உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் இதுநாள்வரை பேசியதில்லை. ஆனால் இன்று நாடகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பினார் மாணிக்கம் தாகூர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

சத்தியமூர்த்தி பவனுக்கு உள்ளே போராடிக்கொண்டிருந்தவர்களைக் கேட்டபோது, அவர்கள் தாங்கள் விஜயதாரணிக்கு சீட் கொடுக்கக்கூடாது எனப் போராடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

"கடந்த 10 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவன்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருக்கிறார். ஆனால், எப்போதும் சென்னையில்தான் இருந்து வருகிறார். எப்போதாவது தொகுதிக்கு வருவார். அவருக்கு தொகுதி மக்களின் பிரச்னைகளே தெரியாது. கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஆகவே அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது எனக் கோருகிறோம்" என்கிறார் வட்டாரத் தலைவர்களில் ஒருவரான மோகன்தாஸ்.

தொகுதியிலேயே தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும்; தான் 1984 முதல் சீட் கேட்டும் திரும்பத் திரும்ப விஜயதாரணி போன்றவர்களுக்கே சீட் கொடுப்பதாக குற்றம்சாட்டுகிறார் மோகன்தாஸ்.

"ஏதாவது நகைக்கடை திறப்புவிழா, பெரிய தலைவர்களின் வருகை ஆகியவற்றின்போது மட்டுமே அவரை தொகுதியில் பார்க்க முடியும். ஒக்கி புயலின்போது அங்கு தலைகாட்டவே இல்லை. அவரைப் பார்க்க வேண்டுமென்றால் டிவியில்தான் பார்க்க முடியும். கட்சி அங்கே அழிந்து கொண்டிருக்கிறது. ஆகவே அங்கே பணியாற்றும் நபர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்" என்கிறார் கிள்ளியூர் வட்டாரத் தலைவர் என்.ஏ. குமார்.

இதற்கு நடுவில் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, காங்கிரஸ் கட்சிக்குள் இடங்களை ஒதுக்கீடு செய்வதில் நடக்கும் பிரச்னைகள் குறித்து விரிவான ட்வீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

"காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

நீண்ட காலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானம் என நினைத்திருந்தால், இன்று நான் எம்.பி. கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண் முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

மேலும், "தமிழகம் முக்கியமான தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் தொகுதி வேட்பாளர் தேர்வில் கடைபிடிக்கப்படும் நேர்மையற்ற நடைமுறைகள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கே உதவும். பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து தலைவர் நடத்தும் யுத்தத்தை பலவீனப்படுத்தும். இதை வேடிக்கை பார்க்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை இறுதிசெய்யும் பணியில் மும்முரமாக இருக்கிறார் கே.எஸ். அழகிரி. சற்று நேரத்திற்கு முன்பாக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த கே.எஸ். அழகிரி விஷ்ணு பிரசாதை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே போராட்டக் களமாகக் காட்சியளிக்கும் சத்யமூர்த்தி பவனில் பட்டியல் வெளியான பிறகு என்ன நடக்குமோ என காத்திருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :