நரேந்திர மோதியை இறை தூதராக பார்க்கும் பாஜக - வெற்றியின் ரகசியத்துக்கு எது காரணம்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தங்களுடைய அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணக் கூடிய இறை தூதராக, நரேந்திர மோதியை பல இந்தியர்கள் பார்க்கின்றனர்.

2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மாறிவிட்டதா என்பதில் சிறிது சந்தேகம் இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இரண்டு பொதுத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. சில மாநிலங்களில் தோல்வி அடைந்திருந்தாலும், இந்தியா முழுக்க பரவலாக அந்தக் கட்சி தடம் பதித்துள்ளது.

பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் தடுமாற்றத்தில், தொய்வடைந்து இருக்கிறது; ஒரு காலத்தில் பலம் வாய்ந்த பிராந்திய கட்சிகளாக இருந்தவை இப்போது தங்களின் திறன்களை இழந்து நிற்கின்றன; மோதிக்கு சரியான சவாலை ஏற்படுத்தக் கூடிய யாரும் இப்போதைக்கு இல்லை என்று தெரிகிறது. இந்தியாவின் ``இரண்டாவது ஆதிக்க கட்சி'' என்று பாஜகவை அரசியல் நிபுணர் சுஹாஸ் பல்ஷிகர் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை முதலாவது ஆதிக்கக் கட்சி என்று அவர் அழைக்கிறார்.

1984ல் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற பிறகு, பாஜகதான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிறது. 1984-ல் கொலை செய்யப்பட்ட இந்திரா காந்திக்குப் பிறகு, ``நாடு முழுக்க மக்களிடம் உண்மையான ஈர்ப்புத் தன்மை கொண்ட ஒரே தலைவர்'' ஆக மோதி இருக்கிறார்.

மோதியின் தனிப்பட்ட ஈர்ப்பு, மத ரீதியில் ஒருமுகப்படுத்தும் அரசியல், தேசியவாதம் குறித்த பிரசாரம் ஆகியவைதான் பாஜகவின் தேர்தல் வெற்றிக்கான பிரதான காரணங்களாக இருக்கின்றன.

நரேந்திர மோதி கட்ட அவுட்.

பட மூலாதாரம், AFP

அயராது உழைக்கக் கூடிய தொண்டர்கள் தான் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பலர் நடந்து சென்று பிரசாரம் செய்யக் கூடிய ஆர்.எஸ்.எஸ். அல்லது ``ஆர்.எஸ்.எஸ்.-ன் மக்களைக் கவரும் மற்றும் போராட்ட குணம் கொண்ட'' அமைப்பாக ஓர் அரசியல் நிபுணர் குறிப்பிடும் விசுவ ஹிந்து பரிஷத் தீவிர தொண்டர்களாக இருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தாராளமாகவும் மற்றும் ``மறைமுக நன்கொடை'' மூலமாகவும் பாஜக வளர்ந்து வருகிறது. விமர்சனம் செய்யாத ஊடகங்களின் ஆதரவும் அந்தக் கட்சிக்கு இருக்கிறது.

``ஒருமைத்துவம் என்பதில் உறுதியாக இருப்பதே'' பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். வெற்றியின் ``ரகசிய பார்முலா'' என்று அரசியல் நிபுணர் வினய் சீதாபதி ஜுகல்பந்தி: மோதிக்கு முன்னால் என்ற தனது புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். (பாஜகவை உருவாக்கிய அட்டல் பிகாரி வாஜ்பேயி மற்றும் எல்.கே. அத்வானியின் நட்பு பற்றியும், இந்திய பாரம்பரிய இசையையும் குறிப்பதாக இந்தத் தலைப்பு இருக்கிறது)

அட்டல் பிகாரி வாஜ்பேயி, எல்.கே. அத்வானி ஆகியோர் முரண்பாடுகள் இருந்தாலும் இணைந்தே செயல்பட்டனர்.

இந்து தேசியவாதம் என்ற அடிப்படையின் மீது கட்டமைக்கப்பட்டு 95 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், ``இந்துக்கள் ஒன்றுபடாமல், ஒருவர் முதுகில் ஒருவர் குத்திக் கொள்வதால் தான் இந்துக்கள் பெருமை இழந்து வருகிறார்கள்'' என்ற வகையில் இளம் வயதிலேயே சிறுவர்களுக்கு இந்து வரலாறு கற்பிக்கப்படுகிறது என்று பேராசிரியர் சீதாபதி தெரிவிக்கிறார். அவர் அசோகா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் சட்டம் குறித்த கல்வி கற்பித்து வருகிறார்.

குறிப்பிட்ட வகையில் மட்டும் வரலாற்றை சொல்வது, இந்தக் குழுவின் உடற்பயிற்சி முறைகள் மூலமாக இது மேலும் பலப்படுத்தப் படுகிறது. அந்த உடற்பயிற்சி ``வெறுமனே உடற்பயிற்சியாக இல்லாமல், ஒன்று சேர்ந்து உடற்பயிற்சி செய்வதாக'' இருக்கிறது. அணிவகுப்பாக செல்வது, பிரமிட் அமைப்பில் ஒருவர் தோளில் இன்னொருவர் நிற்பது, குழு பிணைப்புகளை உருவாக்கும் வகையிலான ``விளையாட்டுகளில்'' ஈடுபட வைப்பது என்ற வகையில் பயிற்சிகள் இருக்கின்றன.

``ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் வகையில் இவை இருக்கின்றன. ஒன்று சேர்க்கும் சித்தாந்தம் தான் அமைப்பு ரீதியிலான நெறியாக இருக்கிறது. இது தொண்டர்கள் அடிப்படையிலான மற்ற கட்சிகளைப் போன்றது கிடையாது'' என்று பேராசிரியர் சீதாபதி என்னிடம் கூறினார்.

அடல் பிஹாரி வாஜ்பேயி, எல்.கே.அத்வானி.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அடல் பிஹாரி வாஜ்பேயி, எல்.கே.அத்வானி.

இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்களாக இருக்கும் இந்துக்களை ஒன்று சேர்த்து, ஒரே மாதிரியாக வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பாஜக செயல்படுகிறது. அதனால் தான் இந்துக்களை காலம் காலமாகப் பிரித்து வந்த சாதியம் பற்றி அதிகம் பேசுவதில்லை. ``இஸ்லாமிய விரோத பேச்சுகளுக்கு முக்கியத்துவம் தருகிறது.'' பழங்கால இந்து போதனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிறார் பேராசிரியர் சீதாபதி.

மற்ற கட்சிகளைப் போல பாஜகவும் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. 4 தசாப்த கால தேர்தல் அரசியலில் சுமார் 12 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதால், தங்கள் தொண்டர்களுக்கு நீண்ட காலத்துக்கு ஆதரவாக இருப்பது சிரமமானதாக இருக்கும்.

இப்போது பாஜகவில் நரேந்திர மோதியும், அமித்ஷாவும் சக்திமிகுந்த இரட்டையர்கள் போல உள்ளனர்.

பாஜகவின் மூத்த தலைவர்கள் அட்டல் பிகாரி வாஜ்பேயி, எல்.கே. அத்வானி இடையிலான உறவு அடிக்கடி உரசல் நிறைந்ததாக இருந்தது. மறைந்த வாஜ்பேயி அமைச்சரவையில் இருந்த சிலர் 2002-ல் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்த போது அத்வானி ஆதரவில் மோதி முதல்வர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை என்பது இதற்கு ஓர் உதாரணம். அப்போது இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 60 இந்து யாத்ரீகர்கள் இறந்ததைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அமைச்சரவையில் அதிருப்தி இருந்தபோதிலும், கட்சி ஒன்றுபட்டு நின்றது.

``ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் அதிருப்திகள் இருப்பது போலத்தான் அது நடந்தது. இந்திய சமூகத்தில் உள்ள குறைபாடுகளை ஆழமாகப் புரிந்து கொள்வது என்ற அடிப்படையில் அப்போது ஒற்றுமை என்ற விஷயத்தின் மீது ஈர்ப்பு இருந்தது'' என்கிறார் பேராசிரியர் சீதாபதி.

அமித் ஷா, நரேந்திர மோதி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமித் ஷா, நரேந்திர மோதி.

மாறுபட்ட அக்கறைகள், குழுக்களைக் கொண்டது தான் அரசியல் கட்சிகள். ஆளுமைமிக்க தலைவர்கள், சித்தாந்தங்கள், அமைப்பு ரீதியிலான கட்டுப்பாடுகள் ஆகியவை தான் அவர்களை ஒன்றாக பிணைத்து வைக்கின்றன. இந்தியாவில் சாதிய அரசியல் அந்த வகையில் அமைந்துள்ளது. அதிருப்தியும், உள்கட்சி மோதலும் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன தலைவர்களுக்கு இடையிலான போட்டிகளால் இந்திய அரசியல் கட்சிகளுக்குள் பிரச்சினைகள் இருக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள், பிராந்திய அளவில் கட்சி தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.

பாஜகவில் இதுவரையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

முதலில் வாஜ்பேயி, பிறகு அத்வானி, இப்போது மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடத்தப்படும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் செயல்படும் கட்சியாக ஒன்றுபட்டு நிற்கிறது. ``மோதியை பாஜக தலைவர்கள் பலருக்குப் பிடிக்காது என்ற உண்மையை நான் வெளிப்படுத்துகிறேன்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ். பயிற்சி

நான் நேர்காணல் செய்ய பல பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. தலைவர்களும், சித்தாந்தத்தில் மோதிக்கு உள்ள பிடிப்பு மற்றும் தேர்தலில் வெற்றி பெறும் நுணுக்கத்தை அறிந்தவர் என்ற வகையில் பாராட்டு தெரிவிக்கின்றனர். ஆனால், தன்னை முன்னிலைப்படுத்தக் கூடியவர், தனிமையை விரும்புபவர், கடுமையாக நடந்து கொள்பவர் என்று பலர் சொல்கிறார்கள்'' என்று பேராசிரியர் சீதாபதி தெரிவித்தார்.

அதனால் பாஜக ``வழக்கத்திற்கு மாறான கட்சி'' என அமைந்திருக்கிறது என்று அரசியல் நிபுணர் மிலன் வைஷ்ணவ் கூறுகிறார்.

பாஜக தலைவர்களின் ஆர்எஸ்எஸ் பின்புலம்

இந்து தேசியவாத அமைப்புகளின் அரசியல் பிரிவாக பாஜக இருக்கிறது. சார்பு அமைப்புகளிடம் இருந்து அரசியல் கட்சியை பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினமானது. அதன் அடிமட்ட அமைப்புகளிடம் இருந்து பாஜகவுக்கு பலம் கிடைக்கிறது. அந்த அமைப்புகளின் கட்டுப்பாடுகள் காரணமாக, எல்லோரும் ஒரே வட்டத்துக்குள் இணைந்து செயல்படுகின்றனர்'' என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச அமைதிக்கான கேமேஜி அறக்கட்டளை அமைப்பில் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் பேராசிரியர் வைஷ்ணவ் என்னிடம் கூறினார்.

அதிருப்தியாளர்கள் பாஜகவை விட்டு விலகிடவில்லை என்பது விஷயமல்ல. ``அரசியல் ரீதியாக அவர்கள் வெற்றி பெற முடியாமல் போய், கட்சிக்குத் திரும்பி வருகிறார்கள். பாஜக தீவிர சித்தாந்த அடிப்படையிலான கட்சி, அதுதான் அனைவரையும் ஒன்றாக சேர்த்து வைத்திருக்கிறது. இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகளிடம் இந்தப் போக்கை நீங்கள் காணலாம்'' என்று அரசியல் நிபுணர் ராகுல் வர்மா கூறுகிறார். இவர் இந்திய அரசியலில் சித்தாந்தத்தின் பங்களிப்பு பற்றி ஆராயும், சித்தாந்தம் மற்றும் அடையாளம் என்ற புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவராக இருக்கிறார்.

கொண்டாட்டத்தில் மோதியின் ஆதரவாளர்கள்.

எப்போதுமே பாஜக ஒன்றுபட்டு நிற்குமா என்பதைக் கணிக்க முடியாது. தாராளமாக வரலாம் என்பது மாதிரியான செயல்பாடு காரணமாக, மற்ற கட்சிகளில் இருந்து அதிருப்தியாளர்கள், கறைபடிந்தவர்களுக்கு பாஜகவில் கதவு திறந்தே உள்ளது. இதனால் `பரிசுத்தம்' என்ற சித்தாந்தம் குறித்து தவிர்க்க முடியாத சர்ச்சை எழுகிறது. ``முரண்பாடுகளை எவ்வளவு காலத்துக்கு நீங்கள் கையாள முடியும்'' என்று வர்மா கேள்வி எழுப்புகிறார்.

நிச்சயமாக, கட்சி வெற்றி பெறும் வரையில் அப்படி வைத்திருக்க முடியும்.

அதனால் தான் பாஜகவுக்கு தேர்தல்கள் முக்கிய திருப்பங்களாக இருக்கின்றன. பாஜகவின் மக்கள் ஆதரவு விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றாலும், அதன் தலைமையில் பெரும்பாலும் உயர்சாதியினரின் ஆதிக்கமே இருக்கிறது என்று வர்மா கூறுகிறார். எதிர்காலத்தில் அந்தக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு முரண்பாடாக இது இருக்கும். சகிப்புத்தன்மை கொண்டதாக மற்றும் மதசார்பற்ற தன்மைகள் கொண்டதாக அது இருக்கும் .

"இந்தியா என்ற சிந்தனை'' என்பதை மாற்றும் வகையில் பாஜகவின் பெரும்பான்மைத்துவ அரசியல் உள்ளது என்று விமர்சகர்கள் நம்புகின்றனர். ஒன்றுபட்டு செயல்பட்டதால், இந்தியா என்பது பற்றிய அவர்கள் சிந்தனை வென்றது'' என்று பேராசிரியர் சீதாபதி தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :