விவசாயிகள் போராட்டம்: கருத்தொற்றுமையின்றி முடிந்த பேச்சுவார்த்தை - மீண்டும் டிசம்பர் 5ல் சந்திப்பு

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் அரசுடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து வரும் 5ஆம் தேதி மீண்டும் கூடி பேச தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலும் அதன் எல்லை பகுதிகளிலும் 8ஆவது நாளாக பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இதையடுத்து வியாழக்கிழமை மீண்டும் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பகல் 1 மணியளவில் தொடங்கியது. சுமார் ஏழு மணி நேரமாக இந்த கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேளான் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "மிகச்சிறந்த சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது. பல விவகாரங்களை வெளிப்படையாக விவசாயிகளின் பிரதிநிதிகள் பேசினார்கள். குறைந்தபட்ச ஆதார விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் பேசுவோம். அதற்கு முன்பாக போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்," என்று தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதேவேளை விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பல விவகாரங்களில் விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அரசு தீர்வு கொடுக்கவில்லை. எனவே, அனைத்து பிரச்னைகளும் தீர்கப்படும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், SANJAY DAS / BBC

முன்னதாக, இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி எச்சரித்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக செயல்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

தொடக்கம் முதலே இந்த மூன்று சட்டங்களை தமது கட்சியும் அரசும் எதிர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா கூட்டி, மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் விவசாயிகள் போராட்டம், கோவிட்-19 வைரஸ் தடுப்பூசி முன்னேற்பாடுகள், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் சூழல் தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் சுமார் 40 பேருடன், இந்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

விவசாயிகள் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், சட்டத்தில் உள்ள குறைபாடுகளை தெரிவித்தால், அது குறித்து விவாதித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படாத சூழலில் வியாழக்கிழமை கூட்டம் நிறைவடைந்தது.

பத்ம விபூஷண் பதக்கத்தை திரும்பித் தரும் முன்னாள் முதல்வர்

இதற்கிடையே, பொதுமக்கள் சேவைக்காக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் பதக்கத்தை திரும்பித் தருவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், PARKASH SINGH BADAL

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், PARKASH SINGH BADAL

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், PARKASH SINGH BADAL

இது தொடர்பாக தனது பதக்கத்தை இணைத்து அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களின் உரிமைகளுக்காக இன்று வீதிகளில் இறங்கு விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு காண்பிக்கும் போக்குக்கு அதிருப்தி தெரிவித்து தமக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் பதக்கத்தை திரும்பித் தருவதாக அவர் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இதேவேளை, பீம் சேனை ஆர்மி என்ற சந்திரசேகர் தலைமையிலான அரசியல் கட்சி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகளின் நிலையைப் பார்த்து இந்தியா முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கான எழுச்சி அதிகரித்து வருவதாகவும், அந்த எண்ணத்துடனேயே தானும் தமது கட்சியினரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்வதாகவும் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :