கொரோனா தடுப்பு மருந்து முதல் அர்னாப் ஜாமீன் மனு வரை - செய்திகளின் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழ் பக்கத்தில் நேற்று வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
முதல்முறையாகப் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் "இது அறிவியலுக்கும், மனித குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம்," எனத் தெரிவித்துள்ளது.இந்த செய்தியை முழுமையாகப் படிக்க:கொரோனா வைரஸ்: 90 சதவீத அளவு பாதுகாப்பு அளிக்கும் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
அர்னாபுக்கு ஜாமீன் கிடைக்குமா? மும்பை உயர் நீதிமன்றம் என்ன கூறியது?

பட மூலாதாரம், Getty Images
அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் ரத்து செய்தது, தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது, 90% வரை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் தடுப்பு மருந்து என, நேற்று நடந்த முக்கிய சம்பவங்கள் மற்றும் செய்திகளை இங்கே காணலாம்.கான்கார்ட் டிசைன் என்கிற நிறுவனத்துக்கு, மும்பையில் இருக்கும் ரிபப்ளிக் டீவி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் ஸ்டூடியோக்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இந்த கான்கார்ட் டிசைன் என்கிற கம்பெனியின் நிர்வாக இயக்குநர் தான் அன்வே நாயக். கடந்த மே 2018-ல், அன்வே நாயக் மற்றும் அவரது தாயார், ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் அலிபாக் வீட்டில், இறந்து கிடந்தார்கள்.இந்த வழக்கின் கீழ் தான் அர்னாப் கோஸ்வாம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அர்னாப் கோஸ்வாமி, இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருந்தார். அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
விரிவாக படிக்க: அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு
பள்ளிகளை திறக்க, தமிழகத்தில் 60% பெற்றோர்கள் ஆதரவு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களைத் திறக்கப் போவதாகத் தமிழக அரசு அறிவித்தது.ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்த, கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், இதற்கென கொடுக்கப்பட்ட படிவங்கள் மூலம் கருத்துக்களைத் தெரிவித்தனர்.தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பில், சுமார் 60 சதவீத பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம் என்றே தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரிவாக படிக்க: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 60 சதவீத பெற்றோர்கள் ஆதரவு
வருங்கால அமெரிக்க அதிபரின் கொரோனா கட்டுப்பாட்டுக் குழு தலைவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக்அதிக வாக்குகளைப் பெற்று, கிட்டத்தட்ட ஜோ பைடன் தன் வெற்றியை உறுதி செய்து இருக்கிறார். ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜோ பைடன் தான் அதிபரானால் கொரோனாவை கட்டுப்படுத்துவது, பொருளாதாரத்தை மீட்டு எடுப்பது, இன ரீதியிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என பல திட்டங்களை வைத்திருக்கிறார்ஜோ பைடனின் முதல் நடவடிக்கை குறித்து விரிவாகப் படிக்க: ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை

பட மூலாதாரம், Getty Images
ஜோ பைடனின் கொரோனா கட்டுப்பாட்டுக் குழு தலைவர்களில் ஒருவராக, இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி இடம் பிடித்து இருக்கிறார்.இந்த செய்தியை விரிவாகப் படிக்க: ஜோ பைடனின் கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி
பிற செய்திகள்:
- பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் திடீரென நிதிஷுக்கு பெரும் சவாலாக மாறியது எப்படி?
- பிகார் தேர்தல் முடிவுகள்: பிரசாரம் முதல் கருத்து கணிப்பு வரை - எளிமையான விளக்கம்
- பிஹார் தேர்தல்: தேஜஸ்வி, நிதிஷ் குமார், பாஜக, காங்கிரஸ் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகள்
- கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?
- சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
- ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை
- லக்ஷ்மி: லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு சர்ச்சையில் அக்ஷய் குமார் படம் - தற்போதைய நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












