சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

பட மூலாதாரம், TNCC
இன்றைய நாளில் உலக அளழிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இந்த பக்கத்தில் முதல் தகவலாக தொகுத்து வழங்குகிறோம்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் கர்நாடகா மாநில பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஷ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் திங்கட்கிழமை சேர்ந்தார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார்.
கர்நாடகா மாநிலத்தின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஏஎஸ் பணியை ராஜிநாமா செய்தார். இந்திய அரசின் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சசிகாந்த் செந்தில், அரசுப் பணியில் இருந்து விலகிய பிறகு பல்வேறு பொது, சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமது கருத்துகளை விளக்கி வந்தார். இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திரு்ககிறார்.
இவர் ,தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
டெல்லியில் நவம்பர் 9 நள்ளிரவு முதல் 30வரை பட்டாசுகள் வெடிக்க தடை: தேசிய பசுமைத்தீர்ப்பாயம்

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் இன்று (நவம்பர் 9) திங்கட்கிழமை) முதல் நவம்பர் 30 நள்ளிரவு வரை, டெல்லி, தேசிய வலய பகுதியில் என்.சி.ஆர், பட்டாசுகளை விற்கவும், பயன்படுத்தவும் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் எந்த நகரங்களில் எல்லாம், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், சராசரியாக சுற்றுச்சூழல் காற்றின் தரம் மோச மற்றும் அதற்குக் மேல் இருக்கிறதோ, அந்த நகரங்களில் எல்லாம், இந்த தடை பொருந்தும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில், மிதமான (Moderate) மற்றும் அதற்குக் கீழ் காற்றின் தரம் இருக்கும் இந்திய நகரங்களில், பசுமை பட்டாசுகளை விற்கலாம். ஆனால் பட்டாசுகளை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் வெடிப்பதற்கான நேரத்தை 2 மணி நேரமாகக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது மாநில அரசு குறிப்பிடும் நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். இந்தியாவின் மற்ற இடங்களில், பட்டாசுகளுக்கு முழு தடை விதிப்பதோ அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதோ, அதிகாரிகளின் விருப்பம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியிருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் கூடுதலாகப் பரவும் சாத்தியக் கூறுகளைக் கட்டுப்படுத்த, காற்று மாசுபாட்டைக் குறைக்க, சிறப்புத் திட்டங்களைத் தொடங்குமாறு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது
பிற செய்திகள்:
- கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் ஏன் தோற்றார்? ஒரு விரிவான அலசல்
- அசத்திய ஸ்டாய்னிஸ், அச்சுறுத்திய சமத் - முதல்முறையாக இறுதியாட்டத்தில் டெல்லி
- பைடன் - கமலா அணியிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- அர்னாப் கோஸ்வாமி: அன்வே நாயக் வழக்கு முதல் பாஜக ஆதரவு வரை
- பிஹார் தேர்தல் 2020: நிதிஷ் குமாரின் கடைசி தேர்தல் ஆளும் கூட்டணிக்கு கை கொடுக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












