கொரோனா வைரஸ்: இந்தியாவில் நடந்த முதல் உயிரிழப்பின் பின்னணியில் உள்ள சர்ச்சைகள் என்ன?

- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தனது வாழ்க்கையில் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில், முகமது ஹுசைன் சித்திக்கி , தொப்பியுடன், பிரவுன் நிற சட்டை அணிந்தபடி, நேராக கேமராவைப் பார்த்தபடி உள்ளார்.

அது பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள். சௌதி அரேபியாவின் ஜெட்டாவில், பல் மருத்துவராக பணியாற்றும் தனது இளைய மகனின் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்துவிட்டு, அன்றுதான் இந்தியா திரும்பியிருந்தார் சித்திக்கி.
76 வயதான அவர், பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக காணப்பட்டார். சிரித்த முகத்துடன் வந்த அவர், ஐதராபாத் விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற உறவினர் அளித்த பூங்கொத்தை வாங்கிக்கொண்டார்.
அங்கிருந்து கிளம்பி, 240 கி.மீ தூரத்தில், கர்நாடகாவிலுள்ள குல்பர்காவில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றார். அந்த 4 மணிநேர பயணத்தில், சில இடங்களில் உணவு மற்றும் தேநீர் அருந்த அவர்கள் வாகனத்தை நிறுத்தினார்கள்.
"அப்பா நன்றாகத் தான் இருந்தார். ஒரு மாத காலத்தை என் சகோதரர் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் கழித்தார். எங்கள் நலன் குறித்து கேட்டறிந்தார்" என்கிறார் அவரின் மூத்த மகன் ஹமீத் ஃபைசல் சித்திக்கி.
ஆனால், 10 நாட்களுக்குப்பிறகு முகமது சித்திக்கி மரணமடைந்தார். இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று தாக்குதலுக்கு பலியான முதல் நபர் அவர்தான்.
துபாயிலிருந்து வந்த ஒரு வாரகாலத்தில் அவரின் உடல்நலம் சரியில்லாமல் போனது. அதற்கு மூன்று நாட்கள் கழித்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில், சுவாசிக்க முடியாமல் அவரின் உயிர் பிரிந்தது. செய்வதறியாமல் தவித்த குடும்பத்தினர், இரண்டு நாட்களில் அவரை இரண்டு நகரங்களில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் காண்பிக்க முயன்றனர்.
நான்கு மருத்துவமனைகள் அவரை அனுமதித்துக்கொள்ள மறுத்த நிலையில், ஐந்தாவது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.
சித்திக்கி இறந்த அடுத்த நாள், அவருக்கு கொரோனா இருந்ததை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

"அவர் கோவிட்-19 காரணமாக இறந்தார் என்பதை இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை. அவரின் இறப்பு சான்றிதழ்கூட எங்களுக்கு கிடைக்கவில்லை." என்கிறார் அகமது சித்திக்கி.
பல வழிகளில், இவர் தந்தையின் மரணம், இந்தியாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அதிலுள்ள குழப்ப நிலையை கோடிட்டு காட்டுகிறது என்று கூறலாம்.
இந்தியாவிற்கு திரும்பியபோது, சித்திக்கி நன்றாகவே இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவரின் மனைவி புற்றுநோயால் இறக்கும்வரை அவர் பணியாற்றி வந்தார். அவரின் பெரும்பகுதி நேரத்தை, புத்தகங்கள் சூழ்ந்த தனது அலுவலக அறையிலேயே சித்திக்கி கழிப்பார் என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.
உள்ளூர் மசூதியையும் அவர் நிர்வகித்து வந்துள்ளார், அவர் மிகவும் தாராள மனம் கொண்டவர் என்கிறார் சித்திக்கியின் நண்பரான குலாம் கோஷ்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

மார்ச் 7ஆம் தேதி இரவு, தனது உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார் அவர். அடுத்த நாள் காலை, மிகவும் மோசமான இருமலுடன் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே எழுந்துள்ளார் சித்திக்கி.
63 வயதாகும் அவரின் குடும்ப மருத்துவர், வீட்டிற்கு வந்து சித்திக்கியை பரிசோதித்து, இருமலுக்கு மாத்திரை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அன்று அவரின் இருமல் மோசமானதோடு, அவருக்கு காய்ச்சல் வந்தது. 9ஆம் தேதி காலை, குல்பர்காவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அவரை அழைத்து சென்றனர். அவர் 12 மணிநேரம் கண்காணிப்பில் இருந்தார்.
ஆனால், இதற்கு பிறகு தான் இந்த கதையில் குழப்பம் ஆரம்பிக்கிறது.
சித்திக்கி தனது இரு நுரையீரல்களிலும், நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அந்த தனியார் மருத்துவமனை ஒரு குறிப்பு எழுதி கொடுத்துள்ளது.
சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன?
நோயாளிக்கு ஹைபர் டென்ஷன் இருந்துள்ளது என்றும் மருத்துவர் எழுதியுள்ளார். மேற்கொண்டு இவரின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க, அவரை ஐதராபாத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். ஆனால், இதில் கோவிட்-19 நோய்த்தொற்று தாக்குதலுக்கு இவர் உள்ளாகியிருக்கலாம் என சந்தேகப்படுவதாக எந்த குறிப்பும் இல்லை.
இருப்பினும், அவரின் மரணத்திற்குப் பிறகு, இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குல்பர்கா மருத்துவமனை இவர் "கோவிட்-19 நோய்த்தொற்று தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம்" என்பதை "தற்காலிக நோய் அறிதல்" முறைப்படி கண்டறிந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

மேலும், அவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு, 570 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெங்களுரூ நகரில், இந்த வைரஸ் தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறகு, அந்த மருத்துவமனையிலிருந்து இவரை இடமாற்றியது அவர் குடும்பத்தாரின் தவறு என்று குற்றம்சாட்டுகிறது இந்த அறிக்கை.
"சோதனை முடிவுக்கு காத்திருக்காமல், நோயாளியுடன் வந்தவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டு, மருத்துவர்களின் அறிவுரைக்கு எதிராக அவரை டிஸ்சார்ஜ் செய்து, ஐதராபாத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்" என அந்த அறிக்கை கூறுகிறது.
'எங்கள் மீது பழிபோடுவது ஏன்?'
"எங்கள் மீது ஏன் பழிபோடப்படுகிறது என்று எனக்கு புரியவில்லை. அவரை இங்கேயே வைத்திருக்கும்படி அவர்கள் கூறியிருந்தால், நாங்களும் உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைக்கே அவரை அழைத்து சென்றிருப்போம். அந்த தனியார் மருத்துவமனை கூறிய அறிவுரைபடியே நாங்களும் செய்தோம். எங்களிடம் அதற்கு ஆதாரம் இருக்கிறது" என்கிறார் ஹமீத்.
Sorry, your browser cannot display this map
ஆனால், நாம் தொடர்புகொண்டு பேசிய அந்த மாவட்ட மூத்த அதிகாரிகள், உள்ளூரிலுள்ள அரசு மருத்துவமனை, கொரோனா தனிமைப்படுத்தும் வார்ட் அமைந்துள்ள பகுதிக்கு அவரை மாற்றுவதற்காக அதிகாரிகள் கேட்டபோது, அவரின் குடும்பத்தினரே பிடிவாதமாக அவரை அழைத்து சென்றுவிட்டனர் என்றனர்.
மார்ச் 10ஆம் தேதி மாலை, ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார் சித்திக்கி. சுவாசிக்க செயற்கை சுவாசம் அளித்த மருத்துவ அதிகாரிகள், அவருக்கு சலைன் ஏற்ற ஆரம்பித்தனர். அந்த வாகனத்தில் அவரின் மகன், மகள் மற்றும் மருமகன் இருந்தார்கள்.
அன்று இரவு முழுவதும் பயணித்து, அடுத்த நாள் காலை ஹைதராபாத் சென்று சேர்ந்தார்கள்.
அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டு, வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றார்கள். அங்கு இருந்த நரம்பியல் மருத்துவமனை அவரை அனுமதிக்க மறுத்து, ஐதராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது. அந்த மருத்துமனையில் பிரத்யேக கோவிட்-19 வார்ட் உள்ளது. ஒரு மணிநேரம் அக்குடும்பம் அங்கு காத்திருந்தது. "ஒரு மருத்துவர் கூட வரவில்லை. யாருமே வரவில்லை. அதனால் நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்." என்கின்றனர் குடும்பத்தினர்.

இந்நிலையில் சித்திக்கி சுவாசிக்க போராடிக்கொண்டிருந்தார்.
இரண்டு மணிநேரமாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள். "நோயாளி இரண்டு நாட்களாக தொடர்ந்து இருமுவதோடு, இரண்டு நாட்களாக சுவாசிக்க சிரமப்படுகிறார்" என்பதை குறித்து வைத்துக்கொண்டார்கள்.
அவருக்கு சலைன் மூலம், பாராசிட்டமல் மருந்தை ஏற்றிய அவர்கள், " மேற்கொண்டு மருத்துவத்திற்கு அங்கு அனுமதிக்க வேண்டும்" என்று கூறினர்.
ஆனால், டிஸ்சார்ஜ் அறிக்கையில், " மருத்துவ ரீதியிலான சிக்கல் குறித்து எடுத்துக்கூறப்பட்ட போதிலும், மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக்கொள்ள நோயாளி தயாராக இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கூறப்படுவது உண்மையில்லை என்று மீண்டும் மறுக்கிறது அந்த குடும்பம். அந்த சிறப்பு மருத்துவமனை, "அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கொரோனாவிற்கான பரிசோதனையை செய்து மீண்டும் இங்கு அழைத்து வரும்படி கூறியது" என்கின்றனர் குடும்பத்தினர்.
" எங்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அங்கிருந்து கிளம்பி, குல்பர்காவிற்கே வந்துவிட முடிவு செய்தோம்." என்கிறார் ஒரு குடும்ப உறுப்பினர்.
அடுத்தநாள் காலை, ஆம்புலன்ஸ் குல்பர்காவிற்கு வந்தபோது, சித்திக்கியின் மூச்சு நின்று இருந்தது. 600 கி.மீ-க்கு மேல் பயணித்து இறந்திருந்தார் சித்திக்கி.
"அவருக்கு அறிகுறி தெரிய ஆரம்பித்த நாள் முதல் மரணம் வரையில், நோயாளி எந்த அரசு மருத்துவமனைக்கும் போகவில்லை" என்று அரசின் அறிக்கை கூறுகிறது.
அடுத்த நாள் காலை, தொலைக்காட்சியை பார்த்துதான், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதல் இந்தியர் தனது தந்தை என்று தெரிந்துகொண்டதாக கூறுகிறார் அவரின் மகன். அன்று மதியம், அவர்களின் குடும்ப மயானத்தில், அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார் சித்திக்கி
சித்திக்கியின் மரணத்திற்குப் பிறகு, குல்பர்காவில் 20 பேருக்கு கோவிட் -19 நோய் தொற்று ஏற்பட்டதோடு, இருவர் இதுவரை இறந்துள்ளனர். சித்திக்கியின் 45வயது மகளும், அவர்களின் குடும்ப மருத்துவருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்துள்ளனர்.
1240க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை வரை, 1616 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அன்றைய இரவு, " எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு, தாகமாக உள்ளது. என்னை வீட்டிற்கு அழைத்து செல்" என்று மகனிடம் கூறியுள்ளார் சித்திக்கி.
அவரின் குடும்பம் வீடு திரும்பியது; ஆனால் அவர் மீளவில்லை.
பிற செய்திகள்:
- பத்திரிகையாளர் அர்னாப் தாக்கப்பட்டாரா? சோனியாவை சீண்டியதற்காக குவியும் வழக்குகள்
- "அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை" வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது
- உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள் - வுஹான் பாதிப்பு எதிரொலி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












