கொரோனாவிடம் இருந்து உயிர்களை காத்த விமான ஊழியர்கள் ஒதுக்கப்படும் அவலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜானவி மூலே
- பதவி, பிபிசி மராத்தி
"அனைத்து போர்களும் போர்க்களத்தில் நடத்தப்படுபவை அல்ல. தங்கள் கடமைகளைச் செய்வதன் மூலம் சிலர் வெல்வார்கள் என்று கூறுவார்கள். அதனால்தான் எங்களுக்கு இந்த தண்டனையா?" என்று கேள்வி எழுப்புகிறார் மும்பையை சேர்ந்த ஏர் இந்தியா விமான சேவை பணியாளர்.
விமான சேவை பணியாளர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் தவறாக நடத்தப்படுவதாகவும், அவர்கள் மீது கோபம் காட்டப்படுவதாகவும் சில செய்திகள் வெளியாகின.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வெளிநாட்டு விமான சேவைகளையும் மார்ச் 22ஆம் தேதி முதல் இந்தியா நிறுத்தியது. ஆனாலும், சில முக்கிய சரக்கு விமானங்கள் அல்லது மற்ற நாடுகளில் சிக்கிக்கொண்டிருந்த மக்களை வெளியேற்றுவதற்கான சிறப்பு விமானங்கள் இயங்கின.
அவ்வாறு ஒரு சில கடைசி விமான பயணங்களில் இருந்த விமான பணியாளர்கள், நெறிமுறைப்படி அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அந்த விமானங்களை இயக்கிய விமானிகள், விமானப் பணியாளர்கள் சிலர் அவர்களுக்கு அருகில் உள்ளவர்களால் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பொது விமான சேவையான ஏர் இந்தியா இந்த சம்பவத்திற்கு பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சில ஏர் இந்தியா விமான பணியாளர்களை, அவர்கள் தங்கியிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருக்கும் நபர்களால் மற்றும் குடியிருப்போர் நல அமைப்புகளால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். சிலர் காவல்துறையையும் அழைத்து புகார் அளித்துள்ளனர். விமானப் பணியாளர்கள், அவர்கள் வேலையை செய்துள்ளார்கள். இந்த நிலை ஆபத்தாக இருக்கிறது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்தார். "நமது பணியாளர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்க தகுந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால் பலருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.
விமான சேவை பணியாளர்களின் தவிப்பு
சமீபத்தில் நியூயார்க்கிலிருந்து திரும்பிய ஏர் இந்தியா விமானத்தில் கேபின் க்ரூவில் இருந்தவர் ஒருவர், தனது சக பணியாளரிடம் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொணடார்.
கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என விமான நிலையத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. எந்த அறிகுறியும் இல்லை என்பதால் முன்னெச்சரிக்கை நடடவடிக்கையாக அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர் இந்தியா வந்திறங்கிய நாளில் இருந்து, அவரோ அவரது குடும்பமோ நவி மும்பையில் உள்ள தங்களது வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
அப்படியிருக்க ஒரு நாள் இரவு அந்தப் பணியாளருக்கு காவல்துறையிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பயணம் மேற்கொண்டதை மறைத்ததாகவும், தானாகவே பரிசோதனைக்கு முன்வராதததற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதே இரவு, அவரது வீட்டிற்கு காவல்துறையினர் வந்து பார்வையிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
"தொலைபேசியில் அழைத்துப் பேசிய அதிகாரியைவிட வீட்டிற்கு வந்தவர்கள் சற்று நல்ல விதத்தில் நடந்துகொண்டனர். எங்களுடைய விவரங்கைளை வாங்கி அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்குமாறு கூறினர்."
இதுதொடர்பாக அந்த பணிப்பெண், ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அப்பகுதி காவல்துறையினரை தொடர்பு கொண்டனர்.
ஆனால், அவர்களின் மொத்த குடும்பமும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கவலையில் அன்றிரவு உறங்கவே இல்லை.
பிறகு மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், இந்த சம்பவம் குறித்து அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நிம்மதி அடைந்த குடும்பத்தினர், இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தனர்.
மாநில அரசின் உத்தரவுப்படி யாரெல்லாம் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்கள், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று திரும்பியது யார் என்பது குறித்து அந்தந்த குடியிருப்பு மேலாளர்கள் போலீஸாரிடம் பட்டியல் தயார் செய்து கொடுக்க வேண்டும்.
"என் பணியை செய்ததற்காக என் அருகில் வசிப்பவர்களே என்னை ஏதோ குற்றவாளி போல நடத்தியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது. நான் என் கடமையை செய்தேன்" என்கிறார் அவர்.

இந்த விமான பணியாளர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியதால், இதில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.
வேறு என்ன நடந்தது?
இந்த நிலை விமானப் பணியாளர்களுக்கு மட்டுமல்ல, விமான நிலையத்தில் பணியாற்றும் சிலருக்கும் இது போன்று நடந்திருக்கிறது.
டெல்லியில் அவ்வாறு பணியாற்றுபவர்கள் இருக்கும் வீடுகளின் வெளியே தனிமைப்படுப்பட்டவர்கள் வீடு என்று உள்ளூர் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஆனால், இது பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது என சில பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படி கொல்கத்தாவை சேர்ந்த இண்டிகோ விமான சேவையின் பணியாளர் ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.
"நாங்கள் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படுகிறோம். உங்களைவிடவே நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். உங்களைவிட நாங்கள் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கும் இடத்தில் இருந்தாலும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அப்படி நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தால் நான் முதலில் மருத்துவமனைக்குதான் செல்வேன். என் உடல் நான் வேலை செய்ய அனுமதிக்காது. எனவே எனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்பாதீர்கள். எனக்கு கொரோனா இல்லை" என்று அழுதுகொண்டே அவர் காணொளியில் பேசுகிறார்.

- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இந்தக் காணொளி வைரலாகியது தெரிந்த கொல்கத்தா காவல்துறையும், அப்பெண்ணை தொடர்புகொண்டு அவரது பாதுகாப்பை உறுதி செய்தது.
இது போன்ற சூழலில் விமானப் பணியாளர்களுக்கான நெறிமுறை என்ன?
இது போன்ற உலகளாவிய நோய்த்தொற்று ஏற்படும் காலத்தில் சர்வேதச விமானங்களில் பணியாற்றும் விமான ஊழியர்களுக்கான நெறிமுறையை ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் விவரித்திருந்தது.
"பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளை ஏற்றிவரும் விமானப்பணியாளர்கள் உடனடியாக அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் நெறிமுறைப்படி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படுவார்கள். தங்கள் கடமையை செய்த விமான பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஒரு வேலை, பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் வந்தால், விமானப் பணியாளர்களுக்கு ஹ்ஸமத் உடை (நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பாதுகாப்பு உடை) பயன்படுத்துவார்கள்."
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"இதுபோன்ற தருணங்களில் தேசத்திற்கு உதவுவது எங்கள் கடமை. வெளிநாடுகளில் சிக்கியிருந்த நம் நாட்டினரை நாங்கள்தான் முதலில் கொண்டுவந்தோம். இதுபோன்ற பயணங்களில் சில சான்றுகளை சரிபார்த்த பிறகே ஊழியர்கள் தேர்தெடுத்து அனுப்பப்படுவார்கள். அவ்வாறு பயணிக்கும் நபர்களுக்கு என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற உத்தரவுகள் முன்கூட்டியே சொல்லப்படும். அந்த உத்தரவுகளை நாங்கள் கட்டாயம் பின்பற்றுவோம்" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஏர் இந்தியா விமான சேவையின் முன்னாள் விமானி.
பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் ஏர் இந்தியா விமான சேவை தவித்து வருகிறது. இதனை தனியார் மையமாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், பொதுத்துறை விமான சேவையான ஏர் இந்தியா, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளான சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் பிற இடங்களில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்புவதில் முக்கிய பங்காற்றியது.
இதற்கு முன்னதாகவும் ஏர் இந்தியா இதனை செய்திருக்கிறது. 1991 வளைகுடா போரின் போதும் இது போன்று ஏர் இந்தியா உதவி இருக்கிறது. அதோடு, 2003ல் இராக், 2006ல் லெபனான், 2011ல் லிபியா போன்ற போர் பகுதிகளில் இருந்தும் ஏர் இந்தியா, இந்தியர்களை வெளியேற்றி இருக்கிறது.












