'மகாராஷ்டிர பாஜக அரசு மீது நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும்'

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித் பவரின் முடிவை தாங்கள் ஆதரிக்கவில்லை என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது. நாளையே பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் மீதும் அவருக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் கட்சியின் தலைவராக இருந்த அஜித் பவார் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தாலும் அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகக் கருதப்படாது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருக்க அவருக்கு ஆதரவாக மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவருக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது இனிமேல்தான் தெரியும்.

பட மூலாதாரம், Twitter
நம்பிக்கை வெக்கெடுப்பில் எப்படியும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு தோல்வியடையும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை நிரூபிக்கப்படுமா?
ஏற்கனவே 105 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக கொண்டுள்ள நிலையில், 15 சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளதாக கூறுகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 145 எனும் இலக்கை அடைய பாஜகவுக்கு இன்னும் 25 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடக்கும்போது அஜித் பவார் உள்ளிட்டவர்கள் கட்சி மாறி வாக்களித்தால் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும்.
ஆட்சியமைக்கும் கட்சி 145 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கும் கடிதத்தில் கையழுத்திட வேண்டும் என்று இதுவரை வலியுறுத்தி வந்த அந்த மாநிலத்தின் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்க எப்படி ஒப்புக்கொண்டார், அவரிடம் 145 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டதா என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தேவதத் காமத் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் எடுத்த முடிவை ஆதரிக்கவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஏ,.என்.ஐ தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சி கூறுவது என்ன?
இதை எதிர்த்து சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடுவோம் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வெளியே அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.
குதிரை பேரத்தைத் தடுக்கும் நோக்கில் காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
தேர்தல் பிரசாரம் செய்யப்பட்ட காலம் முழுவதும் தேவேந்திர பட்னவிஸ் பெயர்தான் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டது. அவர் முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டதும், பாஜகவினரின் ஆதரவும் சிவசேனை வேட்பாளர்களின் வெற்றியில் முக்கியமான பங்காற்றியுள்ளது என பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
"மும்பை இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம். மகாராஷ்டிரா ஒரு பெரிய மாநிலம். பின்வாசல் வழியாக நுழைந்து மும்பையை கட்டுப்படுத்த அக்கட்சிகள் சதி செய்தன," என்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வென்று இருந்தது.
சிவசேனை தலைமையிலான ஆட்சி அமையும் என்று பேசப்பட்டுவந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் தேவந்திர பட்னவிஸ் முதல்வராக இன்று (சனிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க அஜித் பவார் ஆதரவு அளித்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவே தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவருடைய இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறோம்" என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதன் மூலம், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியா அல்லது இது அந்த கட்சியை சேர்ந்த குறிப்பிட்ட சில எம்.எல்.ஏக்களின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், சற்று முன்னர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனை கட்சியை சேர்ந்த சஞ்சய் ரவுத், அஜித் பவாரின் முடிவுக்கும், சரத் பவாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
"அஜித் பவாரும், பாஜகவிற்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்களும் மகாராஷ்டிர மக்களை ஏமாற்றிவிட்டனர். எனினும், திட்டமிட்டபடி, சரத் பவாரும், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரேவும் இன்று சந்தித்து பேச உள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே மகாராஷ்டிராவின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் மோதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டாகபேட்டி

பட மூலாதாரம், ANI
பாரதிய ஜனதா கட்சியுடன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் கரம் கோர்க்க மாட்டார்கள் என்று சரத் பவார் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை தலைவர்கள் கூட்டாகப் பத்திரிகையாளர்களை 12.45 மணிக்கு ஒய்.பி சவான் அரங்கில் சந்தித்தனர்.
அப்போது பேசிய சரத் பவார், "பாஜக எப்போதுமே குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை அமைக்கும் போக்கைப் பின்பற்றி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள், பாஜகவுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார்கள்," என்றார்.
சுமார் 10 முதல் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அஜித் பவாரின் பக்கம் உள்ளனர் என்றும் சரத் பவார் தெரிவித்தார்.
விரிவாக படிக்க:"குதிரை பேரத்தின் மூலமே பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது": சரத் பவார்

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து
மகாராஷ்டிராவின் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் அஜித் பவாருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று அவரது ட்விட்டரில் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசியல் சூழ்நிலை குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 'இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
"மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?. 'ஜனநாயகப் படுகொலை' என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ - நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது" என்று அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்ரே

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்பதற்கு கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் நேற்று வெளியாகின.
எனவே, மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்பார் என பரவலாக பேசப்பட்டது.
"உத்தவ் தாக்ரே தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. எனினும் இன்னும் சிலவற்றை விவாதிக்க வேண்டியுள்ளது. நாளை (சனிக்கிழமை)செய்தியாளர் சந்திப்பில் விவரங்கள் தெரிவிக்கப்படும்," என்றும் சரத் பவார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த தேவேந்திர பட்னவிஸ்?
2014ஆம் ஆண்டு முதல் முறையாக மகாராஷ்டிர முதல்வராகத் தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றார். இளங்கலை சட்டமும், முதுகலை வணிக மேலாண்மையும் பட்னாவிஸ் முடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
90களின் மத்தியில்தான் பட்னாவிஸ் அரசியலுக்கு வந்தார்.
1992 மற்றும் 1997 என இரண்டு முறை நாக்பூர் நகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பட்னவிஸ். இப்போது நாக்பூர் தென் மேற்கு பகுதி சட்டமன்ற உறுப்பினர்.
முதல்வர், சேவகர் மீண்டும் முதல்வர்
சரியாக பத்து நாட்களுக்கு முன்பு பட்னவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகாராஷ்ட்ரா முதல்வர் என்பதை மகாராஷ்ட்ரா சேவக் என மாற்றி இருந்தார்.
இப்போது மீண்டும் மகாராஷ்ட்ரா முதல்வர் என பட்னாவிஸ் மாற்றி இருக்கிறார்.
உத்தவ் தாக்ரே பெயர் தான் ட்விட்டரில் காலை வரை இந்தியா டிரெண்டிங்கில் இருந்தது. பட்னாவிஸ் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே #devendra4maharashtra என்ற வார்த்தை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு

பட மூலாதாரம், Getty Images
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அன்குஷ் காகாடே, "இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் சரத் பவாரின் வார்த்தைக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
அதுபோல சிவசேனையும் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
நிலையான ஆட்சி அமையவே பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்ததாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
அங்கு பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததை தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நிலவி வந்த குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
என்ன சொல்கிறார் தேவேந்திர பட்னவிஸ்?
நிலையான ஆட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக எங்களுடன் கூட்டணி சேர்ந்த அஜித் பவாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பட்னவிஸ் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
பிற செய்திகள்:
- இலங்கையில் தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள்
- உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள், கிளர்ந்தெழுந்த மக்கள் - என்ன காரணம்?
- 'உத்தவ் தாக்ரே தலைமையில் அரசு' - மகாராஷ்டிரா அரசியல் இழுபறி முடிவுக்கு வருகிறதா?
- ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பால் பிறப்புறுப்பில் பாதிப்பு: பெண்களுக்கு சாதகமான தீர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












